Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, September 15, 2010

வல்லமை மின்னிதழில் என் சிறுகதை

மலைமுழுங்கி

மலைமுழுங்கி என்பது அவருக்குக் கிடைத்த பட்டப் பெயர் அல்ல. அவர் செய்து வருகின்ற காயங்களை முன்வைத்த காரணப்பெயரும் அல்ல. யாரும் அவரை அப்படிக் கூப்பிடாத போது அவரே தன்னைப் பற்றி ஜம்பம் அடித்துக் கொள்ளவும் சாதுவான ஆட்களை கொஞ்சம் மிரட்டி வைக்கும் நோக்கத்துடன் “என்னை என்னன்னு நெனச்சிக்கிட்டே? எல்லோரும் என்னை எப்படிக் கூப்பிடுவாங்க தெரியுமா? ஜாக்கிரதையா இருந்துக்கோ…”

இப்படியாக தனக்குத்தானே பட்டப் பெயர் கொடுத்துக் கொண்டு ஊரில் தோளை நிமிர்த்தி உலா வரப்போக அதுவே அவருடைய பட்டப்பெயர், காரணப்பெயர் என்ற கட்டங்களைத் தாண்டி மலைமுழுங்கி என்று காலப்போக்கில் அதுவே அவருக்கு நிஜப் பெயராகவே மாறிவிட்டது.

மாதவன் என்கிற மலைமுழுங்கியின் பெற்றோர் வைத்த பெயரை நாளடைவில் பலரும் மறந்து போகத் துவங்கினார்கள்.

ஊரில் நடக்கும் எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் யாருடைய அனுமதியும் இல்லாமல் தன்னுடைய பெயரை வெட்கமில்லாத வகையில் எப்படியாவது உள்ளே செருகிக் கொள்வார். யாரோ செய்யும் எல்லாக் காரியங்களிலும் ஒருவகையான பொய்மை பொங்கி வழியும் போலியான பெருமையை வலியத் தேடிக் கொள்வதில் அவரை யாரும் மிஞ்ச முடியாது.

வாயைத் திறந்தால் சாப்பிடுவதற்கும் பொய் சொல்வதற்கும் தவிர வேறு எதற்காகவும் இருக்கக்கூடாது என்று யாருடைய தலைமீதோ அடித்து சத்தியம் செய்து கொடுத்தது போல அமைந்திருக்கும் மலைமுழுங்கியின் சவடால் கலந்த சொல்விளையாட்டுக்கள்.

“நேத்து காமராஜர் சிலைக்கு மாலைபோட்டு வந்தோம். பெருந்தலைவர் பிறந்த நாள் பாருங்க…”

என்று யாராவது மலைமுழுங்கியை வைத்துக் கொண்டு சொல்லித் தப்பிக்க முடியாது.

“அந்தச் சிலையை அங்கே வச்சது யார்னு உனக்குத் தெரியுமோ? உயிரைப் பணயம் வச்சு தலைவரோட சிலையை அங்கே வச்ச என்னைத் தள்ளி வச்சிட்டு கண்டவனையும் விட்டு மாலை போட வைக்கிறாங்க. அந்த சிலையை அங்கே வைக்கிறதுக்கு அந்தக் காலத்துலேயே லட்சக்கணக்கில் செலவு செய்தவன் நான்” என்று அவருடைய சவடால் கலந்த பொய்கள் அவருடைய ஜிப்பா பாக்கெட்டுக்களில் இருந்து கசிந்து வழியும்.

இதைப் பக்கத்தில் இருந்து கேட்கும் நபருக்கும் மலைவிழுங்கி பீலாதான் விடுகிறார் என்பது நன்கு தெரிந்து இருந்தும் அதை மறுத்துப் பேசும் தைரியம் இல்லாமல் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.

மலைமுழுங்கியின் மகாத்மியம் தெந்த யாரும் அவரை எந்த இடத்திலும் நிறுத்த முடியாது. அப்படி அவரை நிறுத்தி ஏதாவது கேள்விகள் கேட்டுவிட்டால் அடுத்த நாளில் இருந்து கேள்வி கேட்ட நபர் பற்றிய சேறுபூசப்பட்ட அவதூறுகளை வீடுவீடாகத் தேடித் தேடி வீசத் துவங்கி விடுவார்.

எதற்கு மலத்தின் மேல் கல் எறிய வேண்டும் என்ற தயக்கத்தில் அனைவரும் தாங்கிக் கொள்ளும் இவருடைய பொய்களை ஒரு கட்டத்தில் உண்மை என்று மலைமுழுங்கியே நம்பத் துவங்கி விடுவார்.

தமிழ் மன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் போது வெளியூர் பிரமுகர்கள் யாராவது வந்துவிட்டால் மலைமுழுங்கியின் உற்சாகத்துக்கு அளவே இருக்காது. உள்ளூர் பிரலாபங்கள் தெரியாத அந்தப் பிரபலங்களிடம் மலைமுழுங்கி அளந்து விடும் சரடுகள் மைல் கணக்கில் நீளும்.

“இந்த மன்றம் இப்போ நிக்கற கட்டடத்தைக் கட்டுறதுக்கு கடன் ஏற்பாடு செஞ்சு குடுத்தவனே நான்தான். நான் வேலை பார்த்த வங்கியிலே எக்காரணத்தைக் கொண்டும் இந்த மூஞ்சிகளுக்குத் தரமாட்டேன்னு சொன்னாங்க. பொண்டாட்டியோட நகைகளைக் கொண்டு போய் மேனேஜர் முகத்துலே வீசி எறிஞ்சி கடனுக்கு ஏற்பாடு செஞ்சேன். இன்னிக்கு தகுதியே இல்லாத எவனோ தலைவனா இங்கே உட்கார்ந்துகிட்டு இருக்கான்” என்று துவங்குவார் மலைமுழுங்கி.

தமிழ்மன்றத்தின் மூத்த உறுப்பினர்களே அவருடைய பொய்களை வேறுவழியின்றி வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக அந்தத்தமிழ் மன்றத்தில் சாதாரண செயற்குழு உறுப்பினராகக் கூட தேர்வு செய்யப்படாமல் தேர்தலில் நிற்கும்போதெல்லாம் ஒரு கை விரல்களுக்குள் அடங்கும் வாக்குகளை மட்டுமே அவர் வாங்கும் வெளிப்படையான ரகசியத்தை எந்தப் பிரபலத்திடமும் சொல்ல யாருக்கும் அங்கே தைரியம் இருக்காது.

மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அல்லது அரசியல் தலைவர்கள் யாராவது தமிழ் மன்றத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு செய்திருந்தால் மலைமுழுங்கியும் உடனடியாக தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார். காதி பவனுக்கு சென்று விசித்திரமான வண்ணங்களில் ஜிப்பாக்களை உடனடியாக வாங்கி மாட்டிக் கொள்வார். எதில் வருபவர்களை வம்படியாக நிறுத்தி வைத்து

“இந்தத் தமிழ் மன்றத்தில் நியாயத்தை நிலைநாட்டாமல் விட மாட்டேன். தேர்தலில் ஜெயித்து எல்லாரையும் ஓட ஓட விரட்டலைன்னா நான் மலைமுழுங்கியாடா? தலைவருக்கு நிக்கிற அந்த ஆள் நிறுத்தாம போன் பண்ணிக்கிட்டே இருந்தான். நான் மூணு நாளா எடுக்கலை. இன்னிக்கு போனா போகட்டும்னு எடுத்தா… தயவு செய்து உன்னோட மனுவை வாபஸ் வாங்கிக்கிட்டு என்னை ஒரு தடவையாவது தலைவராக விடணும்னு கெஞ்சறான். தான் வகிக்கிற பதவிக்குக் கூட மரியாதை இல்லை அவனுக்கு. இங்கே தலைவனா வந்து என்ன பண்ணப்போறான்?’’

அன்று மாலையே அந்தப் பிரமுகரை தனியாக சந்தித்து அவருடைய காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, இந்தத் தமிழ் மன்றத்துலே ஊழலை ஒழிக்கணும்னு தான் நான் வேட்பு மனு தாக்கல் செஞ்சேன். எனக்கு இங்கே தலைவர் ஆகணும்னு ஆர்வம் ஒண்ணும் கிடையாது. எனக்கு என்னோட அமைப்பு இருக்கு. நாப்பது வருசமா நடத்தி வர்றேன். தர்ம தேவனான நீங்களே நிக்கறதனாலே உங்களுக்கு ஆதரவு குடுத்து நான் வாபஸ் வாங்கிக்கிறேன்” என்று பில்டப் கொடுத்துக் கொள்வார்.

அந்தப் பிரமுகருக்கும் மலைமுழுங்கியின் மகாத்மியம் கண்டிப்பாகத் தெரிந்து இருக்கும். ஒரு கேலிகலந்த புன்சிப்புடன் நன்றி சொல்லி அவரை வழியனுப்பி வைப்பார்.

மலைமுழுங்கி வெளியில் வந்ததும் நேராக பலரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு “அந்த ஆளு என்னை பிச்சைக்காரத்தனமா கெஞ்சினான்யா. போய்த் தொலையட்டும்னு நான்தான் வாபஸ் வாங்கிட்டேன்” என்பார்.

அதே நேரத்தில் இன்னொரு அணியில் நிற்பவர்களையும் மறக்காமல் தேடிக் கொண்டுபோவார். “இதோ பாரு. நீதான் மதிப்புக் கொடுத்து என்னைத் தலைவரா நிக்கறயான்னு கேக்கலை. இப்போ உங்களுக்காகத் தான் நான் என்னுடைய மனுவை வாபஸ் வாங்கிக்கிறேன் என்று சொல்வார்.

ஒவ்வொரு முறையும் தமிழ் மன்றத்தின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் அவருடைய அலம்பல்களுக்கு அளவே இருக்காது, புதிதாக முதன்முறையாக அந்தக் கூட்டத்தில் அவரைப் பார்க்கிறவர்களுக்கு அவர் ஏதோ நியாயத்தை நிலைநாட்ட அவதரித்த நாடோடி மன்னன் எம்ஜியாராகவே காட்சியளிப்பார்.

இவரைக் கண்டு வாயைப் பிளக்கும் புதிய அப்பாவிகள் யாருக்கும் மலைமுழுங்கி சொந்தமாக ஒரு அமைப்பை வைத்து இருப்பதும் அந்த அமைப்புக்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்தத் தேர்தலை நடத்தாததும் அந்த அமைப்பின் கணக்கு வழக்குகளை யாரிடமும் காட்டாமல் டகால்டி வேலைகள் செய்து வருவதும் யாருக்கும் கேட்கத் தோன்றாது.

தன்னுடைய அமைப்பையும் தன்னையும் எதிர்த்து யாரும் கேள்விகள் கேட்க இயலாத வண்ணம் மிகப் பெரிய அதிகாரப் பொறுப்பில் இருக்கும் அப்பாவி அதிகாரி யாரையாவது தலைவராக்கி அவருடைய பெயரைச் சொல்லி அடுத்தவர்களை மிரட்டி வாயடைத்து வைப்பார்.

மலைமுழுங்கி பொறுப்பில் இருக்கும் அமைப்புக்கு தன்னுடைய சவடாலையும் தலைமைப் பொறுப்பில் இருந்த அப்பாவி அதிகாரிகளின் செல்வாக்கையும் வைத்து நகரின் பிரதானமான இடத்தில் கட்டிடம் கட்ட இடம் வாங்கி இருபத்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அப்படியே போட்டு வைத்து இருப்பதையும் அந்தக் கூட்டத்தில் யாருக்கும் கேட்கத் தெயாது. அந்த இடத்தில் சாதுயமாக தனக்கும் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ள மலைவிழுங்கி சமயம் பார்த்துக் காத்திருப்பதையும் யாரும் கேட்க முடியாத வண்ணம் அமைந்த தன்னுடைய அதிருஷ்டத்தில் காலத்தை ஓட்டி வருகின்றவர் என்பது அந்தத் தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் அவரைத் திருப்பிக் கேள்வி கேட்க பயந்து அவர் காட்டும் எல்லா உதார்களையும் யாருக்கும் தெயாத ஒரு காரணத்துக்காக அந்தப் பொறுப்பாளர்கள் பொறுத்துக் கொண்டிருப்பது எல்லோருக்கும் புரியாத புதிராகவே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தன.

இத்தனை வீரதீரப் பிரதாபங்கள் நிறைந்த மலைமுழுங்கி ஒருநாள் சர்வநாடியும் ஒடுங்கி மிகவும் பவ்யமாக நின்று கொண்டிருந்தார். அவர் குடும்ப சமேதராகத் தங்கியிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குப் பின்புறமாக உள்ள ஊழியர் குடியிருப்பில் தங்கியிருக்கும் ஆட்டோ டிரைவர் தாமோதரன் ஏதோ சாமி வந்தது போல ஆடிக்கொண்டு இருந்தான். சுற்றி ஒரு சிறிய கூட்டம் நின்று கொண்டிருந்தது.

“ஓத்தா… உன்னோட யோக்கியதையை நான் எல்லோருக்கும் சொல்லணுமா? இங்கே இந்த எம்.பிக்கு என்னென்ன சப்ளை செய்யறேன்னு ஊருக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்காதே. பாவம் அந்த அப்பாவி சலவைப் பொட்டிக்காரனுக்கு விஷயம் தெரியாது. போட்டுக்குடுத்தேன்னா உன்னை செவத்தோட வச்சுத் தேய்ச்சுடுவான் தெரிஞ்சிக்கோ…’’

வழக்கமாக எப்போதுமே மலைவிழுங்கி பேச மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் மற்றவர்களை வைத்து இருப்பார். அன்று தாமோதரன் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தான். அவரை நகர விடாமல் நிறுத்தி ஏசிக் கொண்டு இருந்தான். மலைமுழுங்கி அமானுஷ்யமான புன்னகையுடன் கஷ்டப்பட்டு தன்னுடைய கைநடுக்கத்தை மறைத்துக் கொண்டு நின்றிருந்தார். அவரைச் சூழ்ந்திருந்த ஓருவர் நல்ல வேளையாக வெளியூர்க்காரர்கள். அதிகமாக உள்ளூர் ஆட்கள் சேருவதற்கு முன்பு இவனை அங்கிருந்து விரட்டவேண்டும்.

வழக்கமான அஸ்திரத்தைக் கையில் எடுத்தார்.

“இதோ பாரு தாமோதரா… நாம உக்காந்து பேசணும். அந்த மயிராண்டி உனக்கு தப்பா போட்டுக் குடுத்து இருக்கான். அவனுடைய யோக்கியதை உனக்குத் தெயாது. அவன் ஆபீஸ்லே என்ன நடந்தது தெரியுமா? எல்லார் கிட்டயும் பேங்கிலேருந்து விஆர்எஸ் வாங்கினதா கதைவிடுறான். ஆனா அவன் மேலே கரப்ஷன் சார்ஜ் போட்டு டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க தெரியுமோ. அவனும் நீயும் சண்டை போட்டுக்கக் கூடாதுன்னுதான் நான் உங்க ரெண்டு பேர் நடுவிலே இத்தனை லோல் படறேன்.’’

“மயிரு… ஏன்யா பொய் சொல்றே. அருணாச்சலம் தன்னோட ஆபீஸ் பேப்பர் எல்லாத்தையும் கையிலே வச்சிக்கிட்டு உன்னை செருப்பாலே அடிக்க தேடிக்கிட்டு இருக்கான். ஊர்லே நாலு பேரை வச்சிக்கிட்டு உன்னை செருப்பாலே அடிக்கணும்னு காத்துக்கிட்டு இருக்கான். நான் என் பேச்சை எடுத்தா அவன் பேச்சை எதுக்குய்யா எடுக்கறே? என்னைப் பத்தி எம்பி கிட்டே என்ன போட்டுக் குடுத்தே? என்னோட பொண்ணுக்கு பரீட்சை இருக்கு தெயுமா? உன் பேச்சைக் கேட்டுக்கிட்டு அந்த எம்பி நாளைக்கு என்னை வீட்டைக் காலி பண்ணச் சொல்றான். அருணாச்சலம் கதையை அப்புறம் வச்சுக்கலாம். உன் கதையை இப்போ பேசலாம். நான் இப்போ உன்னை இங்கேயே நிறுத்தி வச்சு செருப்பால அடிச்சா என்ன செய்வே”

உண்மையில் பயந்து விட்டார் மலைமுழுங்கி. இவன் முட்டாள். அதிகம் படிக்காதவன். லேசாகக் குடித்தும் இருக்கிறான். அடித்தாலும் அடித்துவிடுவான். எதற்கும் கொஞ்சம் மிரட்டிப் பார்க்கலாம் என்று முயற்சித்தார். “இதப்பார்றா… ஏண்டா இப்படி கெட்டு அலையறே? உன் பொண்டாட்டிதான் என்கிட்டே கண்ணீர் விட்டு அளுதா… மாமா… அவரை இங்கேருந்து அளைச்சுக்கிட்டுப் போயிடணும். சகவாச தோஷத்துலே தினமும் குடிச்சிட்டு வர்றார்னு. அந்த கல்காஜி மாமியோட நீ அலையறதும் அவளுக்குத் தெஞ்சிருக்கு. அந்த அருணாச்சலம்தான் அவகிட்டே போட்டுக் குடுத்திருக்கான். ஒருநா உன்னையும் அந்த மாமியையும் சேர்த்து வச்சு பப்ளிக்லே தொடப்பக் கட்டையாலே வெளுக்கறேன்னு சொன்னா. நான்தான் உன் பொண்டாட்டி கால்லே விழுந்து அவளை அடக்கி வச்சிருக்கேன். நாளைக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணாகி ஒம்பொண்டாட்டி தகறாறு பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியே கௌம்பினா ஒம் பொண்ணோட படிப்பு என்னடா ஆகறது? ஏண்டா இப்படி நிர்மூடனா இருக்கே கொரங்குக் கம்மனாட்டி..” என்று உருக்கத்துடன் கரையத் தொடங்கினார்.

அஸ்திரம் லேசாக வேலை செய்கிற மாதி இருந்தது. கொஞ்சம் சுருதி இறங்கினான் தாமோதரன். “இதோ பாரு சாமி… இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லே. என் பொண்ணுக்கு பரீட்சை முடியட்டும்யா. நானே காலி பண்ணிட்டு போயிடறேன். ”

மலைமுளுங்கி மீண்டும் உல்டா கியர் போடத் துவங்கினார்.

“தாமோதரா… நீ அந்த அருணாச்சலம் கம்மனாட்டி பேச்சைக் கேட்டு ஆடினேன்னு எனக்குத் தெரியும். அவனுக்கு பேங்குலே வேலை வாங்கிக் குடுத்ததே நான்தான். அந்த நாய் என்னை இங்கிருந்து கிளப்பப் பாக்குது. நீ அவனை என்னோட காதுகுளிர என்னைத் திட்டின மாதி அவனைத் திட்டணும். அப்போதான் நான் எம்பி சார் கிட்டே பேசி அட்ஜஸ்ட் செய்ய முடியும். அந்தக் கல்காஜி மாமி விவகாரத்துலே இருந்து உன்னைக் காப்பாத்தற பொறுப்பு எனக்கு இருக்குடா மசுராண்டி”

அப்போது மலைமுழுங்கி கீழே இறங்கின மாதி தெரிந்தாலும் அவருடைய கடமையை அவர் சரியாகத்தான் செய்து முடித்திருந்தார். எத்தனை மன்றாடிப் பார்த்தும் தாமோதரனுக்கு இரண்டாம் நாளே அந்த எம்.பியின் ஊழியர் குடியிருப்பில் இருந்து வீட்டைக் காலி செய்து எங்கோ காஜியாபாத் தள்ளி இருக்கும் அவனுடைய சொந்த வீட்டுக்குக் குடிபெயர வேண்டிப்போனது.

அவனுடைய மனைவியும் கோபித்துக் கொண்டு பரீட்சையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மகளையும் இழுத்துக் கொண்டு சொந்த ஊருக்குப் போய்விட்டாள்.

தாடியை வளர்த்துக் கொண்டு இன்னும் அதிகமாகக் குடித்து அலைந்து கொண்டிருந்தான் தாமோதரன்.

அருணாச்சலம் அவனுக்குப் பயந்து தலைமறைவாக மறைந்து திரிந்து கொண்டிருந்தான். ஆனால் தாமோதரன் அருணாசலத்தை விட்டு மûலைமுழுங்கியை முன்னுக்கு இன்னும் அதிகமாகத் திட்டிக் கொண்டு திரிந்தான்.

மலைமுழுங்கியின் பல ரகசியங்கள் தாமோதரன் வழியாக வெஸ்ட் அவென்யூ சந்துபொந்துகளில் எல்லாம் கசியத் துவங்கின. மலைமுழுங்கி தொடர்பான ரகசியங்களின் இலவச இணைப்பாக அவரை தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருந்த எம்.பியின் வில்லங்கமான ரகசியங்களும் வெளிவரத்துவங்கின.

வாரப்பத்திகை மற்றும் தினசரிகளின் கழுகுகளுக்கும் ஆந்தைகளுக்கும் முந்திரிப் பருப்பைக் கொறித்துக் கொண்டே அந்த எம்பி தொடர்பான அனைத்து ரகசியங்களைப் பரிமாறிக் கொண்டன. செய்தி ஊடகங்களின் ஷர்மாக்களும் தேசாய்களும் கன்னாட் பிளேஸ் போய் புதிய கோட்டு சூட்டை வாங்கிக் கொண்டு அந்த எம்பியின் வில்லங்கங்களை அக்கு வேறு ஆணிவேறாக டிவியில் அலசிப் பிழிந்து காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்துக்குத் தொடர்ச்சியாக அவர்களுக்கு விஷயம் கிடைத்தது.

ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த அந்தக் குட்டிக் கட்சியை சேர்ந்த எம்பிக்கு தலைமை பலத்த எச்சரிக்கைகளை அனுப்பின.

தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருந்த எமதர்மராஜனின் நிலைக்குத் தள்ளப்பட்டார் எம்.பி. மலைமுழுங்கி இதில் எல்லாம் பாதிக்கப்படாதவராக முன்னைக்கு அதிகமாக கலர் கலரான கதர் ஜிப்பாக்களை அணிந்து கொண்டு டெல்லியின் மூலைமுடுக்கெல்லாம் இன்னும் அதிக வீயமுள்ள பீலாக்களுடன் ராஜநடை போட்டுக் கொண்டிருந்தார்.

“அந்த தாமோதரன் பெரிய கிரிமினல் சார். அவனுக்கு எத்தனையோ சொல்லிப் பாத்தேன். கேக்கற மாதி இல்லை. என் கிட்டேயே மோதினான். நான் யாரு? மலைமுழுங்கி. இப்போ பாருங்க தெருத்தெருவா அலையறான். பாவம். அவனுக்கு நான்தான் ஏதாவது செய்யணும்” என்று வெஸ்ட் அவென்யூ முழுக்க சொல்லிக் கொண்டு திந்தார்.

அவரை எதிர்த்துப் பேசவோ, கேள்விகள் கேட்கவோ திராணியற்று சத்தமின்றி சபித்துக் கொண்டு கொண்டு அலைந்தார்கள் வெஸ்ட் அவென்யூவின் ஜீவராசிகள்.

வெஸ்ட் அவென்யூவில் தங்கியிருந்தபோது பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட பத்திகையாளர்களுக்கு எல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டு அல்வாத் துண்டுகள் போலக் கிசுகிசுக்களை விநியோகித்து வந்தான் தாமோதரன். பத்திரிகை ஆட்கள் மலைமுழுங்கியை விட்டு அவரை சுற்றியிருந்த செய்திகளில் அவருக்கு இடம் தந்த எம்பியை தொடர்பு படுத்தி கிசுகிசுத் தீயை தங்கள் பத்திகைகளில் கொழுந்து விட்டு எரிய வைத்தார்கள்.

ஊடகங்கள் மற்றும் செய்தி இதழ்களின் கிசுகிசுப்பின் ஓலம் தாங்காது அந்தக் குட்டிக் கட்சி தங்கள் எம்பியை பலியாடு ஆக்கி மந்திசபையில் தொங்கிக் கொண்டு இருந்த இரண்டு இணை அமைச்சர் பதவிகளை தக்க வைத்துக் கொண்டார்கள். அந்த எம்.பியும் சத்தம் காட்டாது உத்தரபிரதேசத்தின் சிறிய கிராமத்தில் மீண்டும் தன்னுடைய செல்லமான எருமைகளை இன்னும் போஷாக்குடன் வளர்க்கக் கிளம்பினார்.

“அந்த எம்.பிக்கு நான் எத்தனையோ புத்தி சொன்னேம்பா. கேட்ட மாட்டேன்னுட்டுது சனியன். இப்போ அனுபவிக்குது. அந்த தாமோதரன் நாய் பேச்சைக் கேட்டு என்னை அங்கிருந்து காலி பண்ணப் பார்த்தது. நான் விடுவேனா? சமயம் பாத்து பிரைம் மினிஸ்டர் கிட்டே இதோட வண்டவாளங்களை இழுத்து விட்டேன். நான் யாரு? மலைமுழுங்கி…”

அதே வெஸ்ட் அவென்யூவின் வேறொரு எம்பியின் வீட்டை நடுநாயகமாக ஆக்கிரமித்துக் கொண்டு தன்னைக் காண வந்த அப்பாவிகளிடம் வழக்கமான சரடுவிட்டுக் கொண்டிருந்தார் மலைமுழுங்கி. அவருடைய பத்தாயிரம் சரவெடிக்கு ஈடான பீலாக்களை நடுமுதுகுத் தண்டு சிலிர்க்க கேட்டுக் கொண்டிருந்தார்கள் அந்த அப்பாவிகள்.

அந்த இன்னொரு எம்பியின் ஊழியர் குடியிருப்பில் இன்னொரு தாமோதரன் தன்னுடைய குடும்பத்தின் வருங்கால நிலையை அறியாது மலைமுழுங்கியை மரியாதை நிமித்தம் சந்திக்க ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான்.

•••••••••••••••••••••

நன்றி - அண்ணா கண்ணன்

Wednesday, June 13, 2007

கொசு (சிறுகதை)

ராகவன் தம்பி

துவக்கப் பள்ளியில் ஏழு வருஷங்களும் உயர்நிலைப் பள்ளியில் எட்டு வருஷங்களும் (றாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தலா ஒரு வருடம் உபரியாகிப்போனதால்) அரசு கலைக்கல்லூரியில் மூன்று வருஷங்கள் ஏறத்தாழ அதே வகுப்புத்தோழர்களுடன் காலம் கழித்ததால் எவ்வித மாற்றமும் அடையாது இத்தனை வருஷங்களும் கிருஷ்ணமூர்த்தி என்னும் அவன் பெயர் அனைவராலும் வயது வித்தியாசமின்றி கொசு என்றே அழைக்கப்பட்டு வந்தது.


கல்லூரியில், அவன் காதலிக்கலாம் என்று திட்டமிட்ட பெண்ணுக்கும் நண்பர்களால் கொசு என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டான். இந்தப் பெயரையும் கொஞ்சமாக அவன் தோற்றத்தையும் வைத்துத் தன் காதலைக் கொஞ்ச நாட்கள் தள்ளிப்போடலாமா என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் மஞ்சுளா. இதன் காரணமாகவே யாராவது அவனைக் கொசு என்று அழைக்கும்போது கொலைவெறி கொள்ள ரம்பித்தான் கிருஷ்ணமூர்த்தி. அப்படித் தன்னை அழைப்பவர்களை உடனடியாக யானையாக விசுவரூபமெடுத்து அவர்களைக் கொசுவை நசுக்குவதுபோல நசுக்கவேண்டும் என்று நினைத்துக் கொள்வான். னாலும் தவிர்க்க முடியாமல் அவனைத் தேடி வரும் நண்பர்கள் அனைவரும் வாய் தவறி அவனுடைய தங்கையிடமே ''கொசு இருக்கானா?'' என்று கேட்பார்கள். அவள் வாய் தவறாமல் அழுத்தமாக சில சில்லறைப் பகைகளை மனதில் வைத்துக்கொண்டு ''கொசுவா? உள்ளேதான் இருக்கான்'' என்று புன்சிரித்துக்கொண்டே கூறும்போது அவனுக்கு இரண்டு காரணங்களுக்காகக் கோபம் வரும். முதல் காரணத்தை வாய்விட்டு சொல்லமுடியாத காரணத்தால், ''அது என்னது வர்ற கம்மனாட்டி கிட்டேயெல்லாம் காரணமே இல்லாமே எல்லாப் பல்லையும் காட்டி மினுக்கியாறது?'' என்று அம்மாவிடம் கோபித்துக்கொள்வான். அம்மாவுக்கும் அவன் கோபத்தின் காரணம் அரசல் புரசலாகத் தெரிந்து விடுவதால் புன்முறுவலுடன், ''கூடப் பிறந்தவடா அவொ. நாக்கு கூசாம ஏன் பேசறே?'' என்பாள். ''நீயே அவளுக்கு எல்லாம் கத்துக்குடு'' என்று அம்மாவின் காதில் படாமல் முணுமுணுத்துக் கொண்டே வெளியே போய்விடுவான். அவன் போன பிறகு அம்மா தங்கையைத் திட்டுவாள். ''நீ ஏண்டி அவன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறே? சரி. கூட்டு முழுக்க நீயே கொட்டிக்காதே. கொசுவுக்குக் கொஞ்சம் மிச்சம் வெச்சி வை'' என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொள்வாள்.


அப்பா வீட்டுக்கு வரும் நேரங்களில் அநேகமாக அவன் வீட்டில் இருப்பதைத் தவிர்த்து விடுவான். அவர் இரவு வீடு திரும்பும்போது லேசாகக் குடித்துவிட்டுத்தான் வருவார். தள்ளாட மாட்டார். ஒரு வார்த்தை யாரையும் தவறாகப் பேசமாட்டார். ரேழியில் ஸ்கூட்டரை நிறுத்தி வைத்து சீட்டுக்கு அடியில் இருக்கும் துணியை எடுத்துப் பளபளவென்று துடைத்து விட்டு வீட்டுக்குள் வருவார். அம்மா தினமும் அவர் வாங்கி வராத ஏதாவது ஒரு பொருளை அவருக்கு ஞாபகப்படுத்தி ''வாங்கி வரல்லையா?'' என்று கேட்பாள். அவர் தலை குனிந்து கொண்டே ''அந்தக் கொசுக்கம்மனாட்டிக்கு சொல்றது. அவன் எதுக்கு மயிர் பிடுங்க இருக்கானா வீட்டுலே தடி ம்பிளையா?'' என்று கேட்டுக்கொண்டே செருப்பை நடையில் அவிழ்த்துவைத்து அதை ஒருமுறை பளபளப்புடன் துடைத்து விட்டு நடையில் உள்ள குழாயிலேயே கையை ஒரு கால்மணி நேரம் தேய்த்துத் தேய்த்துக் கழுவி விட்டு உள்ளே வருவார். இந்த அர்ச்சனையைத் தவிர்ப்பதற்கே அவர் வரும் அநேக நேரங்களில் அவன் வீட்டில் இருப்பதைத் தவிர்ப்பான். அப்படி வீட்டில் இருந்து அர்ச்சனையைக் கேட்க நேர்ந்தால் அம்மாவிடம் தங்கத்துடன் கடிந்து கொள்வான். ''ஏம்மா, உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்டே சாயங்காலமே சொல்லித் தொலையேன். ஏன் இப்படிக் கண்டவா கிட்டேயெல்லாம் திட்டு வாங்க வைக்கிறே?'' னாலும் இது நாள் தவறாமல் நடக்கும் ஒரு சடங்காக இருந்தது - அவன் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.


வெளியுலகத் தொடர்பே முற்றும் அறுந்துபோனதால் அவனுடைய பாட்டி அவனை எப்போதும் ''கொசு'' என்று கூப்பிடமாட்டாள். அதே நேரத்தில் அவனுடைய வேறு பெயரான கிருஷ்ணமூர்த்தி என்றோ குழந்தையாக இருந்தபோது அனைவரும் கூப்பிட்ட கிச்சா என்ற பெயரிலும் அவள் என்றும் அவனை அழைத்ததில்லை. கிருஷ்ணமூர்த்தி அவனுடைய தாத்தாவின் பெயர். அந்த முழுப்பெயரின் செல்லமான வடிவத்திலும் அவனை எப்போதும் அழைக்க விரும்பியதில்லை அவன் பாட்டி. அவளுக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவனைக் குட்டீ.... என்று நீட்டி முழக்கி அழைப்பாள். அது அவனுக்கு இன்னும் எரிச்சலாக இருக்கும். கொசுவின் தேவை அவளுக்குக் குறைந்தது இருபது நாட்களுக்கு ஒருமுறை தேவைப்படும். மொட்டையடிக்கப்பட்ட தலையைத் தடவிக்கொண்டே இருக்கும் அவளுக்கு முடி கொஞ்சம் முள்ளாக உறுத்தத் துவங்கும்போது கொசு உடனடியாகத் தேவைப்படுவான். உட்கார்ந்த இடத்திலிருந்தே குட்டீ... குட்டீ... என்று கர்ண கடூரமாகக் கத்தத் துவங்குவாள். அப்பா அவளை ஏனென்று கேட்கமாட்டார். கொசு எங்கிருந்தாலும் தேடிப் பாட்டியின் முன் நிறுத்தப்படுவான். ''ராமுவை அழைச்சுண்டு வாடா குட்டீ... என்று தீனமான குரலில் கேட்பாள் பாட்டி. அவனுக்கு எரிச்சலாக வரும். ''பிராணனை வாங்குறியே. ஏன்? அப்படியே கொஞ்ச நாள் இருந்தா காதா? எங்காவது அழகிப்போட்டிலே கலந்துக்கிட்டாகணுமா?'' என்று எரிச்சலுடன் முணுமுணுப்பான். ''கொஞ்சம் கூட நன்னா இல்லேடா குட்டீ. முகத்துலே தரித்திர களை தாண்டவமாடிண்டிருக்கு. கண்ணாடியிலே என்னையே பாத்துக்க சகிக்கலே. அழைச்சிண்டு வாயேண்டா குட்டீ... என்று கெஞ்சுவாள்.


லமாரியில் வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை எடுத்து எடுத்துத் துடைத்துக்கொண்டிருக்கும் அப்பா, ''இவனே ஒரு வேலையில்லாத அம்பட்டன். அவனையே அந்த முண்டைக்கு சரைச்சி விடச் சொல்லேன்'' என்று பாட்டிக்குக் கேட்காதவாறும் அவனுக்கு மட்டும் கேட்குமாறும் கடிப்பார். ''பாட்டிக்கு என்ன? பக்கத்துலே உக்காரச்சொல்லு. அந்த பிராமணனுக்கும் எல்லாத்தையும் சரைச்சி விடுறேன்'' அம்மாவுக்கு மட்டும் கேட்குமாறும் அப்பாவுக்குக் கேட்காதவாறும் முணுமுணுப்பான். பல நேரங்களில் அவனுக்குத் தோன்றும். இந்த சனியன்களையெல்லாம் விட்டு இந்த ஊரைவிட்டே எங்காவது கண்காணாத இடத்துக்கு ஓடிப்போய் விடவேண்டும் என்று. னால் மஞ்சுளா தன் காதலைப் பற்றி இதுவரை தீர்மானமாக எதுவும் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்ததால் அப்படி ஓடிப்போகும் தீர்மானத்தை சற்று ஒத்தி வைத்தவாறு இருந்தான்.

அப்படி அவள் தன்னுடைய காதலின் இசைவினைச் சொல்லும் பட்சத்தில் அவளையும் இழுத்துக்கொண்டு ஓடியாகவேண்டுமே என்று பதட்டத்துடன் காத்திருந்தான். னால் மஞ்சுளா ஏற்கனவே இவனைப்போன்ற மூன்று நான்கு பேர்களிடம் தன் இசைவினைத் தனித்தனியாகத் தெரிவித்து சிறிது நாட்களுக்குப் பின் அவர்களுடன் ஊடல் ஏற்பட்டதாலும் அந்த மூன்று நான்கு பேர்களின் ஜாதிகளும் ஏறத்தாழ உள்ளதாக சிறிது நாட்களில் தெரியவந்ததும், கொசு என்று அனைவராலும் அழைக்கப்பட்டாலும் தன்னுடைய சொந்த ஜாதியை சேர்ந்தவன் என்று தோழியர் வழியாகக் கேள்விப்பட்டு இவனுக்குத் தன் இசைவினைத் தெரிவிக்கலாமா என்று கொஞ்சம் தயங்கி யோசித்துக்கொண்டிருந்தாள். அவள் தயக்கமும் யோசனையும் அவனுக்குத் தெரியவந்தபோது அவனுக்குத் தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகரித்தது.
னால் கொசுவுக்கு உறவில் தங்கை முறையாகும் மஞ்சுளாவின் தோழியர் ஓரிருவர் ற்றுப்பிள்ளையார் கோயில் தெருவில் புதிதாகக் குடிவந்திருக்கும் சிரஸ்தாரின் பையன்களில் ஒருவன் கித்தார் வாசிக்கிறவனாகவும் ஓரிரு இசைக்குழுக்களில் பாட்டுப்பாடுகிறவனாகவும் உள்ள சதீஷ் என்ற அழகிய பெயருடைய பையன் அந்த மஞ்சுளாவுக்கு அறிமுகமாகாமல் இருக்கவேண்டுமே என்று கவலைப்பட்டார்கள்.


பலநேரங்களில் வீட்டுக்குத் தெரியாமல் சினிமா போகவும் ரிப்பன்கள் வாங்கவும் மஞ்சுளாவைப் பற்றிய பேச்சுக்களை எடுத்து விட்டு கொசுவிடம் நிதியுதவி பெற்றுச் செல்வார்கள் அந்தக் கன்னிகைகள். அதற்கு இவ்வளவு சீக்கிரமாக இப்படி ஏதேனும் பங்கம் ஏதும் வந்துவிடக் கூடாது என்னும் நியாயமான பயம் இருந்தது அவர்களுக்கு. அதனால் அவனிடம் அவர்கள் நாளுக்கு நாள் ஒவ்வொரு புதுக்கதையாக அவிழ்த்து விட்டு அவனைத் தவணை முறையில் குதூகலிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள். ஒருத்தி பிள்ளையார் கோயிலில் பிரசாதம் சாப்பிட்டு எறிந்த இலைகளை வெளியில் எடுத்துப்போடும் சாக்கில் இவனைத் தேடி வந்து, ''அண்ணா, நேத்து உங்க ள் கதாகாலட்சேபத்தும்போது கண்ணாலே உன்னையே தேடிண்டிருந்தாளே பாக்கலையா நீ?'' என்று நமுட்டுச் சிரிப்புடன் கேட்பாள்.

இவன் அப்பாவித்தமனமான பதட்டத்துடன், இல்லையே... உன்கிட்டே எதுனா சொன்னாளா?'' என்று கேட்பான். ''சொல்லணுமா? கண்லேயே எல்லாம் எழுதிக் காண்பிச்சுடறாளே. நான் அவகிட்டே பேச்சை எடுக்கறதுக்குள்ளே அவளோட அண்ணன் அவளைக் கூப்பிட வந்துட்டான். அவன் சரியான தடி ம்பிளை. விவஸ்தையே இல்லாம முறைச்சுப் பார்த்துண்டிருப்பான். அதனாலே அந்த எடத்தை விட்டு ஓட வேண்டியதாயிடுத்து. னா அவொ என்னமோ என்கிட்டே சொல்லணும்னு துடிச்சிண்டே இருந்தா. அந்தத் தடியன் வந்து கெடுத்துட்டான்''


''அது சரி. அந்த மாதிரி பொம்பளைப் பொறுக்கிப் பசங்ககிட்டே உன்னை மாதிரிப் பொண்கள் தன்னை ஜாக்கிரதையாகக் காப்பாத்திக்கணும். நீ செய்ததுதான் சரி. என்ன குடிமுழுகிப்போச்சு. நாளைக்குப் பேசிக்கோ'' என்பான். அன்று மதியக் காட்சிக்கு ராயல் டூரிங் டாக்கீஸில் இரண்டு பெஞ்ச் டிக்கெட் எடுத்து வைத்து அந்தத் தூதுவள் மற்றும் அவளுடைய தோழியின் கையில் ரகசியமாக ஒப்படைத்துவிட்டு, சைக்கிள் ஏறிக் காலேஜூக்குப் பறந்துபோவான் கொசு. அன்று மதியத்திலிருந்து சமையலறையில் வைத்திருந்த பணத்தில் று ரூபாய் குறைகிறது என்று அவனுடைய அம்மா வீட்டின் வேறு இடங்களில் தேடிக்கொண்டிருப்பாள்.


அன்று இரவு வழக்கம் போல தலையைக் குனிந்து வீட்டு வாசலில் காலடி எடுத்து வைத்தான். ரேழியில் அப்பா ஸ்கூட்டர் துடைத்துக் கொண்டிருந்தார். வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகமாகக் குடித்திருப்பார் போல. இன்னும் வேகமாகவும் அழுத்தியும் துடைத்துக் கொண்டிருந்தார். கை லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது போல இருந்தது. கடந்து உள்நுழையும்போது ''ஒருத்தனுக்குப் பொறந்திருந்தா உள்ளே காலடி எடுத்து வக்காதே'' என்று கர்ஜித்தார். அவர் குரலில் தெறித்த அதிகாரம் தன்னை ஒன்றும் செய்யாது என்று காட்டிக்கொள்ள அவசரப்பட்டான்.

'அது உனக்குத்தானே தெரியணும்?

என்னைக் கேட்டா?'' என்று விரைப்புடன் திரும்பினான்.

''தேவடியா மகனே'' என்று உறுமினார் அப்பா.


''ஒங்க சண்டையை ஒங்களோடவே வச்சிக்கங்கோ. என் வரைக்கும் வந்தா ரெண்டு பேருக்கும் துடைப்பக்கட்டை பிஞ்சிடும்'' என்று வெளியில் வந்தாள் அம்மா.


''வாயை அடக்குடி. ரொம்பப் பேசினா எல்லாத்தையும் கிழிச்சிடுவேன். நாற முண்ட. புள்ளையை வளர்த்திருக்கா பாரு... உம் புள்ளை அந்த வாத்தியார் வீட்டுப் பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதியிருக்கான். அந்த மகானுபவன் ஸ்துமா இம்சையோட கன்னா பின்னான்னு கத்தி நடுரோட்டிலே மானத்தை வாங்கிப்புட்டான். எல்லாம் இந்தக் கம்மனாட்டியாலே வந்தது. நான் இருக்கும் வீட்டில் இவன் இருக்கப்படாது. சொல்லிட்டேன். இந்த சண்டாளனாலே இன்னிக்குக் கொஞ்சம் அதிகமாக் குடிக்க வேண்டிப்போச்சு''.


''அது சரி. கண்ணாடியிலே கொஞ்சம் முகத்தைப் பாத்துக்குங்கோ. அம்பி ஏண்டா இப்படித் திட்டு வாங்கறே?''


''அவன் பண்ணதைச் சொல்லாதே. நான் திட்டுறதைச் சொல்லு''.

தள்ளாடிக்கொண்டே ஸ்கூட்டரின் மீது சரிந்தார். அம்மா ஓடிச் சென்று தாங்கிக் கொண்டாள். ''உள்ளே அழைச்சுண்டு போடா. என்ன கர்மாந்திரமோ. எல்லாம் ப்ராரப்த கர்மம்'' என்று தலையில் அடித்துக்கொண்டாள்.


''யாராவது தொட்டா வகுந்துடுவேன். இந்த படுவா ஏன் லெட்டர் குடுத்தான்னு கேளு. ஒண்ணுக்கும் யோக்கியதை இல்லை. பொண்ணு கேக்குதா கம்மனாட்டிக்கு?'' என்று தள்ளாடிக்கொண்டே சீறினார்.


புரிந்து விட்டது. ஒரு பன்னாடையிடம் ரொம்ப நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் கொடுத்து வைத்திருந்தான். மஞ்சுளாவிடம் பத்திரமாக சேர்ப்பிக்கச் சொல்லி. அந்த சனியன் எங்கோ தானும் மாட்டி இவனையும் மாட்டியிருக்கு.
''எவன் எழுதினானோ. நான்தான் எழுதினேன்னு இவாளுக்கு எப்படித் தெரியுமாம்?''


''எப்படியா? சண்டாளா. என் பேரை வேறே சேர்த்து ஜே.கிருஷ்ணமூர்த்தின்னு கொட்டையா எழுதியிருக்கியேடா நாயே...''


''லோகத்துலே நான் ஒர்த்தன்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தியா? ஏம்பா இப்படி என்னை டார்ச்சர் பண்றே? சொல்லு. ஒனக்குப் பிடிக்கலேன்னா நான் எங்கியாவது ஓடிடுறேன். இல்லே விஷம் குடிச்சி செத்துப்போயிடறேன். உனக்கு எதுக்குப் பிரச்னை?'' என்று உதட்டைப் பிதுக்கினான்.
உள்ளிருந்து தங்கை ஓடிவந்தாள். ''நீ வாப்பா உள்ளே... என்று தாங்கிப் பிடித்துக்கொண்டாள் அப்பாவை. உள்ளே அழைத்துப்போகும் போது, ''இந்தக் கொசு செஞ்ச வேலை. அந்த மஞ்சுளா பாவம் விக்கி விக்கி அழுதுண்டிருக்காம். இனி உயிரோட இருக்க மாட்டேன். தூக்குலே தொங்கப்போறேன்னு ஓடி ஓடிப் போறதாம். அவளோட அண்ணன்காரன் நம்ம கொசுவை வெட்டாம விடமாட்டேன்னு சபதம் போட்டிருக்கானாம். ஏம்பா உம்புள்ளைக்கு இப்படி புத்தி போறது?'' என்று போகிற போக்கில் கொஞ்சம் போட்டுக்கொடுத்தாள்.


அப்பா ஏதோ தெளிவில்லாதபடிக்கு நிறைய கெட்ட வார்த்தைகளில் வசவுகளை எறிந்து கொண்டிருந்தார்.


''த்துலே பொண்கள் இருக்காளேன்னு இந்த பிராமணனுக்கு ஏதாவது விவஸ்தை இருக்கா பாரேன். வாயிலே என்னல்லாம் வர்றதுன்னு. உனக்கு ஏண்டா இப்படி புத்தி போகணும்? அப்பாவோட வயித்தெரிச்சலை ஏன் இப்படிக் கொட்டிக்கிறே?'' என்று அழுகிறாற்போல் முகத்தை வைத்துக்கொண்ட கேட்டாள் அம்மா.


பாட்டி உள்ளிருந்து உட்கார்ந்த நிலையிலேயே இரு கைகளையும் தரையில் ஊன்றிக்கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து முன்னறை வாசலுக்கு வந்தாள்.

''என்னடா ஜெகந்நாதா. ஒடம்பு சொகமில்லையா? என்ன பண்றது? உன் வயசிலே உங்கப்பா ரெண்டு கையாலேயும் ரெண்டு சீமெண்ணெய் டின்னை தூக்கிண்டு படியேறி வருவா. தேக்குலே செஞ்ச தேகம் அது. இப்போ உன்னை தாங்கிண்டு ரெண்டு பேர் வரவேண்டியிருக்கு. என்ன கர்மமோ போ. அந்த குட்டீ தடியன் ராமு கிட்டே சொல்லலை போலிருக்கு. அவன் இந்தப் பக்கமே காணம். நாளைக்கு நீயாவது சொல்லுடா. ரொம்ப வளர்ந்துடுத்து''
என்று குறுக்காலே வருவது போல நகர்ந்து வந்தாள். ருக்கு ஜாக்கிரதையாக பாட்டியைத் தாண்ட வைத்து அப்பாவை வழிநடத்தி அழைத்துப்போனாள். அப்பா பாட்டியையும் ஏதோ தெளிவில்லாத வார்த்தைகளால் வைதார். பாட்டி உட்கார்ந்த நிலையிலேயே திரும்பிப் பார்த்து,


''என்னடா ச்சு ஜெகந்நாதா?'' என்று அழுவதுபோலக் கேட்டாள்.


''ரொம்ப அவசியமா தெரிஞ்சுண்டாகணும். இல்லைன்னா மண்டை வெடிச்சிடும். அம்பி பாட்டிக்கு எல்லாத்தையும் விலாவரியா சொல்லிட்டு வாடா. இல்லேன்னா ராத்திரியெல்லாம் கேள்வி கேட்டுண்டே இருப்பா'' என்று குத்தலாகச் சொல்லிக் கொண்டே அம்மாவும் உள்ளே போனாள்.


கொசுவுக்கு ரொம்பவும் சங்கடமாக இருந்தது. கையறு நிலை என்பார்களே அதுபோல. விட்டத்தையே வெறித்துக்கொண்டு நின்றான். அந்த தரித்திரம் வசமாக மாட்டி வைத்துவிட்டது. இனி தப்பிக்க வழியே இல்லை. அப்பா இப்போது தூங்கி விடுவார். காலையில் எழுந்ததும் இன்னும் பாட்டு கேட்க வேண்டும். என்ன செய்வது? விடிந்தால் அந்த முரடன், மஞ்சுளாவின் அண்ணனையும் சமாளித்தாக வேண்டும். அது அவ்வளவாகப் பிரச்னை இருக்காது. எங்கே போனாலும் பாலுவை அழைத்துக்கொண்டு சென்றால் போதும். அவன் அந்த முரடனை சுலபமாக சமாளிப்பான். மேலும் பாலுவுக்கு மஞ்சுளாவின் அண்ணனுடைய ரகசியங்கள் சிலவும தெரியும். அதை வைத்து அவனை மிரட்டச் சொல்லலாம். னால் இந்த ரேஷன் கடை குமாஸ்தா பிராமணன்தான் உயிரை விட்டுக்கொண்டு கத்தும். நாளைக் காலை ஸ்கூட்டரைத் துடைக்கும்போதும் இதே மண்டகப்படிதான் கிடைக்கும். அதைத்தான் எப்படி சமாளிப்பது என்று யோசித்தான்.
அந்த மஞ்சுளா முண்டைக்கு என்ன னது? துரத்தித் துரத்திக் காதல் பார்வையை வீசினாளே? நிஜமான காதலை மதிக்கத் தெரியவில்லையே அவளுக்கு? அப்படி ஒரு கடிதமே மாட்டிக்கொண்டாலும் மாம். எனக்குத் தான் எழுதினார். என்னை வைத்துக்காப்பாற்றும் திறமையும் சக்தியும் அவருக்கு உண்டு என்று இந்த உலகத்தையே எதிர்த்து நிற்க வேண்டாமோ? இப்படி அழுது அரற்றி மானத்தை வாங்குகிறாளே சண்டாளி? இவளை வைத்து நாளை எப்படிக் குடித்தனம் நடத்தப்போகிறேன் என்று வெகுவாகக் கவலைப்பட்டான்.


ஒருவேளை வீட்டாரிடம் நாடகமாகிறாளோ? எது என்ன இழவோ. இப்போதைக்கு இந்தத் தெரு முழுக்க மானம் கப்பலேறியாகி விட்டது. நாளை ஊர் முழுக்க நோட்டீஸ் அச்சடித்து விநியோகிக்காத குறையாக வம்பு பரிமாறிக்கொள்ள பல பிராமணர்கள் அழுக்கு முதுகை சொரிந்து கொண்டு தயாராகி விடுவார்கள். என்ன செய்வது என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான் கொசு.


உள்ளே அப்பாவைப் படுக்கையில் சாய்த்து மல்லாக்கப் படுக்க வைத்தாள் ருக்கு. அவர் திடீரென்று எழுந்துகொண்டு அம்மாவையும் இவனையும் கெட்ட வார்த்தைகளில் திட்டினார்.


''ராமுவை நாளைக்கு அழைச்சிண்டு வருவான். குழந்தையை சும்மா சும்மா திட்டாதே ஜெகந்நாதா'' என்று உறுதி கலந்த குரலில் கடிந்து கொண்டாள் பாட்டி.


''ரொம்பத்தான் இப்போ தேவை'' என்று சலித்துக்கொண்டாள் அம்மா. அவன் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான். அவன் அப்படியே எங்காவது ஓடிப்போய்விடுவான் என்று நினைத்தாளோ என்னவோ, அவனருகே வந்து கையைப் பிடித்துக்கொண்டாள்.
''போகட்டும். உள்ளே வாடா. எல்லாம் நாளைக்குப் பாத்துக்கலாம். ஏழரை நாட்டுச் சனி. பிடிச்சி ட்டுறது. நாளையிலிருந்தாவது இந்த கெட்ட சகவாசம் எல்லாம் விடு. அந்த பாலு, கோலு எல்லாரையும் விட்டுத்தொலை. எல்லாம் சரியாயிடும்''

கொசுவுக்கு ஒருமாதிரி தழுதழுத்துக் கொண்டு வந்தது. அம்மாவையே பார்த்துக்கொண்டு நின்றான். அவன் கையை விடாமல் அம்மா அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.


''சரி. வந்து படுத்துக்கோ. காலையிலே பாத்துக்கலாம்''

Tuesday, June 12, 2007

முறையீடு

சிறுகதை

ராகவன் தம்பி

ஏறத்தாழ எட்டாவது முறையாக மீண்டும் அந்தக் கேள்வியை சிவராமன் கேட்டபோது சோட்டே லால் என்னும் அந்தக் கான்ஸ்டபிளுக்குக் கோபத்துக்குப் பதில் சிரிப்புத்தான் வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு பதில் அளிப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

இந்த மதராஸிகளிடம் அதிகம் வேலை காண்பிக்க முடியாது. தில்லியில் மத்திய அமைச்சரவையில் பதினைந்துக்கும் மேற்பட்ட மதராஸிகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். தில்லியெங்கும் தடுக்கி விழுந்தால் ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மதராஸிகளாக இருக்கிறார்கள். இந்த ள் கண்டிப்பாக எங்காவது இந்தப் பலரில் யாராவது ஒருத்தருக்காவது வேண்டிய ளாக இருந்து தொலைக்கலாம். எதையாவது தாறுமாறாகப் பேசி வைத்துப் பிறகு எக்கச்சக்கமாக வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டும். இந்த மதராஸிகள் தேவைக்கு அதிகமாகப் படித்து வைத்திருக்கிறவர்கள். எப்போதும் ஒரு சிறிய சட்டப்புத்தகத்தைத் தங்கள் சட்டைப் பைகளில் வைத்துக்கொண்டு இருப்பதைப்போல எடுத்ததற்கெல்லாம் சட்டப்பிரிவுகளை உட்பிரிவு எண்களுடன் தூக்கி எறிபவர்கள். இந்த ளைப் பார்த்தாலும் ஏதோ பெரிய பாபுவாக இருந்து ஓய்வு பெற்ற சாமி மாதிரி தான் இருக்கிறான். எதற்கு வம்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்று சோட்டே லால் நினைத்திருக்க வேண்டும். அந்த ள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு வேலையைக் கவனிக்கலாம் என்று தீர்மானித்துக்கொண்டான்.
கண்களில் பணிவு நிரம்பி வழிய, கண்டிப்பா வந்துடுவார் சாஹிப். நீங்க அப்படி உக்காருங்க''

''கண்டிப்பா வந்துடுவார் இல்லையா?''

''வரணும்''

கொஞ்சம் தயங்கியபடி, ''எதுக்கும் அவருடைய மொபைலுக்கு ஃபோன் பண்ணிக் கேக்கமுடியுமா?''

''அவர் மொபைல் நம்பர் எங்ககிட்டே தரலை சாஹிப்''

''நிஜமாகவா?''

''நான் பொதுவா உங்க மாதிரி பெரிய ளுங்க கிட்டே அதிகமா பொய் சொல்றதில்லை சாஹிப்''.

''பரவாயில்லை''

யோசித்துக்கொண்டே எங்கோ தூரத்தில் வெறித்துப் பார்த்து நின்று கொண்டிருந்தார். அவனுக்கு வெளியில் போய் சிகரெட் பிடித்துவிட்டு வரவேண்டுமென்று தோன்றியது. இப்போது எழுந்துபோனால் அந்த மனிதர் தவறாக நினைத்துக்கொள்ளக் கூடும். சின்ன போலீஸ் போஸ்ட் இது. வேறு யாரும் இல்லை. சுக்பிந்தரும் கன்னாவும் சப்-இன்ஸ்பெக்டருடன் ரவுண்டுக்குப் போயிருக்கிறார்கள். இவன் இன்று இப்படி வசமாக மாட்டிக்கொண்டான்.

அவன் நண்பன் தவீந்தர் இன்று இரவு டியூட்டிக்குப் போயிருக்கிறான். அவனுடைய மனைவி இருமுறை தொலைபேசியில் கூப்பிட்டு விட்டாள். அவளுக்குத் தொலைபேசியில் கணவன் இல்லாத இரவு வேளைகளில் நீண்ட நேரம் இவனுடன் கிளுகிளுப்பது மிகவும் பிடித்த விஷயம். தவீந்தருக்கும் இவனுக்கும் வேறு வேறு இடங்களில் இரவு டியூட்டி இருந்தால் சோட்டேலால் பாடு கொண்டாட்டம்தான். தவீந்தரின் மனைவி தொலைபேசியில் பேசியே இவனை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுவாள். அவளுடன் இந்த இரவு நீண்ட நேரம் தொலைபேசியில் சல்லாபித்துக் கொண்டு இரவுப் பொழுதைக் கழிக்கலாம் என்று மனதை உல்லாசமாகத் தயார் செய்து வைத்திருந்தான். இந்தக் கிழவன் இன்று இப்படிப் பழியாய் வந்து சேர்ந்து விட்டான்.

தொலைபேசி மெல்லச் சிணுங்கியது. சிவராமனைப் பார்த்துக் கொண்டே அவசரமாகக் காதில் பொருத்தி மிக மெல்லிய குரலில் "இன்னும் கொஞ்ச நேரத்துலே கூப்பிடுறேன்" என்று சொல்லி தொலைபேசியை வைத்தவன், கொஞ்சம் போலியான பணிவைக் கூட்டிக்கொண்டு,

''அப்படிப் போய் உக்காருங்க சாஹிப். படே சாஹிப் வந்துடுவார். எதுக்கு நீங்க ரொம்ப நேரமா நிக்கணும்?''

''இருக்கட்டும். எங்கே போயிருக்கார் தெரியுமா? கண்டிப்பாக வந்துடுவார் இல்லையா? வயர்லெஸ்லே கேட்டுச் சொல்ல முடியுமா?''

''வயர்லெஸ்லே தொந்தரவு பண்ணா கண்டபடி திட்டுவாரு''

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வயர்லெஸ் சாதனம் அலறியது. சிரித்துக்கொண்டே ''படே சாஹிப்தான் போலிருக்கு''

''நான் ஒரு நிமிஷம் பேசட்டுமா?''

நீங்கல்லாம் பேசமுடியாது சாஹிப். நான் வேணும்னா எப்போ வர்றாருன்னு கேட்டுச்சொல்றேன்''

வாக்கி டாக்கியை வாயருகில் வைத்துக்கொண்டு ஏதோ சரியாகப் புரியாத ஒரு வார்த்தையை திரும்பத்திரும்ப உரக்கக் கத்திக்கொண்டே இருந்தான். அதிலிருந்து ஒன்றும் புரியாத வண்ணம் கரமுரவென்று சத்தம் இரைந்து கொண்டிருந்தது. இடையிடையில் பெருத்த கடல் அலைகள் பொங்குவதைப் போன்ற இரைச்சல் எழுந்து எழுந்து அடங்கியது. தன்னுடைய இருக்கையை சற்றுப் பின் நகர்த்தி உரக்கக் கத்திக்கொண்டே மேஜையை சுற்றி வெளியில் வந்தான். அவனுக்கு இடம் விட்டு அவர் நகர்ந்து கொண்டார். உள்ளிருந்த மற்றொரு அறையை நோக்கி வாக்கி டாக்கியில் கத்திக்கொண்டே சென்றான். அவர் கொஞ்சமாகத் தொடர்ந்து சென்று உள்ளே எட்டிப்பார்த்தார். உள்ளே பரட்டைத் தலையுடன் ஒருவன், குளித்து எத்தனையோ நாட்கள் னதுபோல உடலெங்கும் அழுக்காக, கிழிந்த உடையுடன் அழுகிறவன் போல முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்திருந்தான். அவனுடைய கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. கத்திக்கொண்டே கடந்து செல்லும் கான்ஸ்டபிளின் கால்களைப் பிடிப்பது போல அவனை நெருங்கி ''தாணேதார் ஜி'' என்று தீனக்குரல் எழுப்பிக் கை கூப்பினான்.

கான்ஸ்டபிள் அவன் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்காமல் ''சுப் ரே ஹராமீ........ '' எட்டி ஒரு உதை விட்டு வாக்கி டாக்கியில் கத்திக்கொண்டே அந்த அறையின் மூலையில் சென்று ஜன்னலை ஒட்டி நின்று கொண்டு மீண்டும் இரைந்தான். அவன் இரைந்தது பஞ்சாயிலோ அல்லது ஹரியான்வியிலோ. இவருக்கு ஒரு வார்த்தை கூட சுத்தமாகப் புரியவில்லை.
ஓரிரு சம்பாஷணைகளுக்குப் பிறகு கான்ஸ்டபிள் நீளமாகப் பேசுவதைக் குறைத்துக்கொண்டான். ''ஜீ ஜனாப்... ஜீ ஜனாப்...'' என்பதை மட்டும் ஒரு குறிப்பிட்ட கால அளவில் நிறுத்தி நிறுத்தி மீண்டும் மீண்டும் இரைந்து கொண்டிருந்தான். இருபது அல்லது முப்பது நீண்ட 'ஜீ ஜனாப்' களுக்குப் பிறகு அமைதியானான்.

இரைச்சலை ஒருவழியாக நிறுத்தி விட்டு விருவிருவென்று வாக்கி டாக்கி சாதனத்தைத் தன் மேஜையின் மீது வைத்து விட்டு அவசரமாக அறையை விட்டு வெளியேறி மரத்தடியில் நின்று ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டான். அவனுக்காகக் காத்திருந்த அவருடைய பதற்றம் இன்னும் அதிகரித்தது. அந்த அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக அலையத் துவங்கினார். தடியன்... சப் இன்ஸ்பெக்டர் வருவானா மாட்டானா என்றுகூட சொல்லாமல் இவன் பாட்டுக்கு சிகரெட் பிடிக்கப் போய்விட்டானே என்று அவருக்குக் கோபமாக வந்தது. இந்த தில்லி போலீசின் அலட்சியப் போக்கினைக் கண்டித்து இந்து நாளேட்டுக்குக் காரசாரமாக ஒரு கடிதம் எழுதி நாளை காலையில் கண்டிப்பாக அனுப்பியாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டார். அந்தக் கடிதத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான சட்டத்துக்கு உட்பட்ட வகையில் அமைந்த கடுமையான ங்கில வார்த்தைகள் அவருடைய மனதில் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தன.
அவருடைய மன ஓட்டத்தினைப் புரிந்து கொண்டது போல, சிகரெட்டை அவசர அவசரமாக இழுத்துப் புகைவிட்டு மனதில்லாமல் செய்வது போல எறிந்து விட்டு மேஜையை நோக்கி விரைவாக வந்தான் சோட்டேலால். அவன் உட்கார்ந்ததும் இவர் கொஞ்சம் அதிகாரத்தைக் குரலில் கூட்டிக்கொண்டு ''என்ன சாஹிப் வரப்போகிறாரா இல்லையா?'' என்று கேட்டார். அவருடைய குரல் அவருக்கே கொஞ்சம் புதிதாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது.

அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன் போல, ''படே சாஹிப் வருவது சந்தேகம்தான் சாஹிப். நொய்டா பார்டர்லே தகராறு. கத்திக்குத்து கிவிட்டதாம். ட்களை ஸ்பத்திரிக்கு கொண்டு போய் இருக்காங்களாம். படே சாஹிப் அங்கேதான் இருக்காராம்.

''ஒரு வயசான ளு அவருக்காக ரொம்ப நேரமா இங்கே காத்துக்கிட்டு இருக்காருன்னு சொன்னியா?''

''என்ன சாஹிப் இப்படிக் கேக்கிறீங்க? நான் கண்டிப்பா சொன்னேன். அவர் இப்போதைக்கு வரமுடியாததாலே என்னையே விசாரிச்சி வைக்கச் சொன்னார். ஏதாவது புகார் இருந்தா எழுதி வாங்கிக்கச் சொன்னார். நீங்க அந்த நாற்காலியை எடுத்துக்கங்க. உட்காருங்க. ஏன் நிக்கிறீங்க?'' என்றான்.

அவர் நம்பிக்கை இல்லாதது போல எங்கோ தூரத்தில் வெறித்துக்கொண்டிருந்தார்.

''ஏதாவது ரொம்ப அவசரமான புகாரா சாஹிப்? ரொம்பப் பெரிய விஷயம்னா நீங்க பெரிய தாணாவுக்குப்போய் அங்கே எஸ்.எச்.ஒவைப் பாருங்க. னா, இந்நேரத்துக்கு அவரும் அங்கே இருப்பாரான்றது சந்தேகம்தான்''. ஏதாவது புகார்னா என்னை எழுதி வச்சிக்கச் சொன்னார். ரொம்ப அவசரம்னா நீங்க மயூர் விஹார் போகணும். இங்கே ட்களும் இல்லே சாஹிப்.
பெரியவர் ஒன்றும் சொல்லாது காலர் உள்ளில் செருகி வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து உதறிப் பின்னர் லேசாக முகத்தைத் துடைத்துக்கொண்டார்.அவன் கொஞ்சம் தர்மசங்கடத்துடன் உணர்ந்தான். எதையோ நினைத்துக் கொண்டவன் போல் கூலர் வரை சென்று ஒரு தம்ளரில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து அவரிடம் நீட்டினான். வாங்கிக் குடிக்காமல் மேஜை மேல் வைத்துவிட்டு சட்டைப் பையைத் துழாவி ஒரு மாத்திரையை எடுத்து உறையைக் கிழித்து எறிந்து கை நடுக்கத்துடன் மாத்திரையை நாக்கின் நுனியில் வைத்து அதே கைநடுக்கத்துடன் தண்ணீரை அவசரமாக எடுத்துக் குடித்தார்.

மீண்டும் ஒருமுறை தொலைபேசி ஒலித்தது. சோட்டேலால் பாஷையை உடனே மாற்றிக் கொண்டான். புரியாத ஒரு மொழியில் எதையோ மிகவும் கடுப்பாக, ஏறக்குறைய திட்டுவதைப் போன்ற தொனியில் ஏதோ பேசிவிட்டு தொலைபேசியை மிகக்கடுமையாக வீசுவதுபோல அதன் தாங்கியில் எறிந்தான்.

உள்ளே கட்டிப் போடப்பட்டிருந்த போதை சாமி தீனமான குரலில் உரக்கக் கத்தினான். சோட்டேலால் மிகுந்த எரிச்சலுடன் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு விருட்டென்று உள்ளே போனான். உள்ளிருந்த சாமியின் கூச்சல் வலுத்தது. உயிர்நிலையில் அடிபட்ட நாய் கத்துவது போல மிகவும் பரிதாபமாகக் குரல் எழுப்பிக் கத்தினான். இவன் அவனை இன்னும் ஓங்கி மிதித்திருக்க வேண்டும். வெளியில் வந்ததும் அந்த அறையின் கதவை ஓங்கி சாத்தினான்.''ஹராமி மாதர்சோத்... எல்லாம் சரஸ் போதை கேஸ்கள் சாஹிப். நான் படே சாஹிப் கிட்டே எவ்வளவோ சொல்லிட்டேன். இந்தப் பசங்களைப் பிடித்துக்கொண்டு வரவேண்டாம்னு. ராத்திரி எல்லாம் இப்படியே கூச்சல் போட்டு என் உயிரை எடுப்பான். கொஞ்ச நேரம் னதும் ரத்தம் வழிய சுவர்லே தலையை மோதிக்குவான். இவன்களுக்கு அந்த போதை கண்டிப்பா வேணும். இங்கேயே செத்துத் தொலைஞ்சா நாளைக்கு எங்க தலைமேலே விடியும். உயிரோட கோர்ட்டுக்கு அழைச்சிக்கிட்டுப்போனா இவனை அடிச்சீங்களான்னு ஜட்ஜ் எங்களை வாட்டி எடுத்துடுவாரு.


''ஐயோ...''

''சொல்லக்கூடாதுதான். எத்தனையோ தடவை இந்த மாதிரி சாமிகள் போதை மருந்து கிடைக்காத அவஸ்தையிலே எங்க கஸ்டடியிலே செத்துத் தொலையக் கூடாதேன்னு நாங்களே கூட சில சமயம் வெளியிலே போயி இவங்களுக்காக சரஸ் வாங்கி வந்து குடுக்க வேண்டிய நிலைமை வந்திருக்கு சாஹிப்.

''அடக் கர்மமே... அப்புறம்?''

''ஒரு தடவை இந்த மாதிரித்தான் எங்க படே சாஹிப் பிடிச்சிக் கொண்டு வைத்திருந்த ளுக்கு அப்படி யிடிச்சி. நடு ராத்திரி. செவத்துலே முட்டி முட்டி சாகிற மாதிரி யிட்டான். மண்டை உடைஞ்சி உடம்பெல்லாம் ரத்தம் வழியுது. பயங்கரமாக் கத்த ரம்பிச்சிட்டான். கிட்டே போயிருந்தா என்னைக் கையாலேயே கிழிச்சிக் கொன்னிருப்பான். என்ன பண்றது? எப்பவோ ஒரு கேஸ்லே பிடிச்சப்போ வச்சிருந்த கொஞ்சம் சரஸ்ஸை எடுத்து அவனுக்கு படே சாஹிப் குடுத்திருக்கார். எல்லா஡ம் முடிச்சி அவன் ஹாய்யா படுத்துத் தூங்கி எழுந்து காலைலே மறுபடி போதை மருந்து கேட்டு மண்டையை மோதிக்க ரம்பிச்சான். அவன் பெயர் எங்கேயும் என்ட்ரி கலே. அவனோட செலவுக்குக் காசு குடுத்து நான் அனுப்பி வச்சேன் சாஹிப். இந்த ஹராமியோட பேரை வேறே படே சாஹிப் ரிஜிஸ்டர்லே எழுதி வச்சிட்டுப் போயிட்டார். இவனை அவுத்து விடலாம்னா ராத்திரி யாராவது பெரிய அதிகாரி சோதனைக்கு வந்தா வம்பாப் போயிடும்.
மீண்டும் தொலைபேசி ஒலித்தது. எடுத்துக் காதில் வெறுமனே வைத்துக்கொண்டான். ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்து திடீரென மிகப்பெரிய குரலில் சத்தம் போட்டான். ஹரியான்வியிலோ அல்லது பஞ்சாபியிலோ மிகப்பெரிய கெட்ட வார்த்தையாக அது இருந்திருக்க வேண்டும். அவனுடைய முகத்தின் கடுமை அதைச் சொல்லியது. சந்தர்ப்பமில்லாமல் சிவராமன் பரிவுடன் கேட்டார்."வீட்லே இருந்து பேசறாங்களா?"

அவன் மிகவும் பொறுமையாக இருக்க எக்கச்சக்கமாகப் பிரயாசைப் படுவது அவனுடைய அசைவுகளிலும் முகபாவத்திலும் தெரிந்தது. அவருடைய முகத்தைப் பார்க்காது, "நீங்க அப்படி உக்காருங்க சாஹிப். இல்லேன்னா என்ன புகார்னு ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க. பன்னிரண்டரை கப்போகுது. படே சாகிப் வர்ற மாதிரித் தெரியலை" என்றவாறே உள்ளே சென்றான். உள்ளே போதை சாமி மீண்டும் உயிரே போவது போலக் கத்தியது அறைகுறையாகச் சாத்திய கதவிடுக்கில் வலுவாகக் கேட்டது. ஒரு துண்டால் ஈரக்கையைத் துடைத்துக் கொண்டு மீண்டும் தன் நாற்காலியில் வந்து அமர்ந்தான் சோட்டேலால்.
"எதுக்கும் நீ ஒருமுறை அவர் கிட்டே கேட்டுச் சொல்ல முடியுமா?" என்று கெஞ்சுவது போலக் கேட்டார்.

ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க சாஹிப்? அவசரம் இல்லைன்னா காலைலே வாங்க சாஹிப். கட்டும் ஹவில்தார்ஜி. நான் நாலு ஸ்டேஷன் ஏறி இறங்கித்தான் இங்கே வந்தேன். எல்லோரும் தன்னோட ஸ்டேஷன்லே இந்தக் கேஸ் வராதுன்னு சொல்றாங்க. இங்கேதான் பதிவு செய்யணும்னு சொல்றாங்க. விஷயம் கொஞ்சம் அவசரமானதுதான். கொஞ்சம் பெரிய அதிகாரிகளைக் கூப்பிட்டா விபரமா பதிவு செய்யலாம்னு பாத்தேன். எனக்கு ரொம்ப பெரிய அளவுலே அதிகாரிகளைத் தெரியும். னா ராத்திரிக்கு அவங்களைத் தொந்தரவு செய்யவேணாம்னு பார்த்தேன்"
சிவராமன் பேசிக்கொண்டிருக்கும்போது சோட்டேலாலின் மொபைல் தொலைபேசி ஒலித்தது. கையைச் சற்றுத் தூரமாகக் கொண்டு போய் அழைக்கும் எண்ணைப் பார்த்து விட்டு தொலைபேசியை அணைத்து சட்டைப்பையில் போட்டுக்கொண்டான். மீண்டும் மேஜையில் இருந்த தொலைபேசி ஒலித்தது. கோபமாக எடுத்து,

"நான் ரொம்ப அவசர வேலையா இருக்கேன். கொஞ்சம் இரேன். கட்டாயம் கூப்பிடுறேன்" என்றான். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல் தெளிவில்லாமல் கேட்டது. அவள் ரொம்பவும் கோபப்பட்டு இரைவது சிவராமன் வரை கேட்டது. அவனும் கோபத்துடன் இரைந்து கத்தி விட்டுப் பேச்சைத் துண்டித்து தொலைபேசியை அறைந்து வீசினான். இவரை நோக்கித் திரும்பி "சாஹிப். நீங்க உங்க புகாரை எழுதி என்கிட்டே குடுக்க முடியும்னா குடுங்க. இல்லேன்னா காலைலே வந்து படே சாஹிப்பை பாருங்க. உங்களுக்குத்தான் பெரிய அதிகாரிகளை எல்லாம் தெரியும்னு சொல்றீங்களே. அவங்களையும் காலைலே பாருங்க. இப்போதைக்குக் கிளம்புங்க. நேரத்தைப் பாருங்க. ராத்திரி ஒரு மணிக்கு மேலே ச்சு. கிளம்புற வழியைப் பாருங்க".
சிவராமன் ஒன்றும் பேசாமல் மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத் தாளை எடுத்து நிதானமாக எழுதத் தொடங்கினார். கான்ஸ்டபிள் சோட்டேலால் அவரையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளே அறையில் போதை சாமி உயிரே போவது போல அலறுவது கேட்டது. "ஹராமி... மாதர் சோத்... என்று உறுமிக்கொண்டே கதவை உதைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான் சோட்டே லால். அந்த போதை சாமி மிகவும் உரத்த குரலில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் யாரையோ திட்டிக் கொண்டிருந்தான். இடையில் நிறுத்தி நிறுத்தி உயிர்நிலையில் உதைக்கப்பட்ட நாயைப் போல உரத்து ஓலமிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய ஓலம் மெல்ல மெல்லக் குறையத் துவங்கியது. ங்காரத்துடன் தலையைச் சுவற்றில் வலுவாக மோதும் ஒலி கேட்டது. ஓலம் முழுக்க அடங்கியபின் துண்டினால் கையைத் துடைத்துக் கொண்டு வெளியில் வந்து நாற்காலியில் சோர்வுடன் உட்கார்ந்து கொண்டான் சோட்டேலால்.
வெளியில் சிவராமன் உட்கார்ந்திருந்த நாற்காலி காலியாக இருந்தது. ஒரு வெள்ளைத்தாளில் புகாரை எழுதி மின்விசிறிக்காற்றில் காகிதம் பறக்காது இருக்க சற்றுப் பெரிய அளவுள்ள கல்லை வைத்திருந்தார். புகார் கிறுக்கலான இந்தியில் எழுதப்பட்டிருந்தது. அறைக்கு வெளியே வந்து தெருமுனை வரை பார்த்து விட்டு வந்தான் சோட்டேலால். பெரியவர் கண்ணில் படவில்லை.
மீண்டும் நாற்காலியில் சரிந்து அமர்ந்தான். தயக்கத்துடன் பெரியவர் எழுதியிருந்த புகாரை சற்று சிரமத்துடன் படிக்கத் துவங்கினான்.
"காவல் நிலைய பொறுப்பாளருக்குவணக்கம்.நான் மத்திய அரசில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது மயூர் விஹாரில் வசித்து வருகிறேன். எனக்கும் என்னுடைய வயதான மனைவிக்கும் துணையாக எங்கள் வீட்டில் சிவகாமி என்று ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறாள். தமிழ்நாட்டின் கிராமத்திலிருந்து வந்த அப்பெண்மணிக்கு இந்தியோ ங்கிலமோ சுத்தமாகத் தெரியாது. மேலும் அவள் இங்கு வந்து புகார் கொடுக்கும் நிலையில் இல்லை. மதியத்தில் இருந்து மயக்கத்தில் இருக்கிறாள். பக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறாள். எனவே அவள் சார்பாக இந்தப் புகாரை நான் இங்கு சமர்ப்பிக்கிறேன். எங்கள் வீட்டில் பணிபுரிந்து வரும் திருமதி சிவகாமியின் எட்டு வயது மகள் இன்று காலையில் இருந்து திடீரெனக் காணவில்லை. நாங்கள் மாலைவரை எல்லா இடங்களிலும் தேடினோம். இரவு எட்டு மணிக்குப் புகார் அளிக்க பக்கத்தில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்குச் சென்றேன். அப்படி கிட்டத்தட்ட நான்கு இடங்களுக்கும் மேல் சென்றேன். யாரும் விஷயம் தங்கள் எல்லைக்குள் வரவில்லை என்று மறுத்துவிட்டார்கள். இறுதியாக இந்த இடத்தில் புகாரைப் பதிவு செய்யுமாறு கூறினார்கள். எனவே இந்தப் புகாரை தயவு செய்து ஏற்றுக்கொண்டு குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் வீட்டுக்கு தென்னிந்திய மளிகைப் பொருள்களைக் கொண்டுவந்து போடும் பையன் ஒருவன் இன்று மதியம் அந்தக் குழந்தையை நொய்டா எல்லை அருகே யாருடனோ பார்த்ததாக சொன்னான். இந்தத் தகவலையும் கருத்தில் கொண்டு அந்தக் குழந்தையைத் தேடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்குத் தங்கள் உண்மையுள்ள

சிவராமன்

புகாரை நான்காக மடித்து மேஜை மேல் குவியலாகக் கிடந்த ஒரு கோப்புக்குள் சொருகிவிட்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான் சோட்டேலால். உள்ளிருந்து அந்த போதை சாமி தீனமான குரலில் முனகிக் கொண்டிருந்தான். முனகல்களின் நடுவே சோட்டேலாலின் உறவினர்களை கெட்டகெட்ட வார்த்தைகளால் முறைபோட்டுத் திட்டிக் கொண்டிருந்தான்.
மேஜை மேலிருந்த தொலைபேசி சிணுங்கியது. தொலைபேசியை எடுத்தவன் குரலில் அன்பும் சல்லாபமும் வழிய, "நீ வச்சிடு. நான் கூப்பிடுறேன்" என்று தொலைபேசியைத் துண்டித்துவிட்டு மீண்டும் காதில் பொருத்திக் கொண்டு உடனே எண்களை உற்சாகத்துடன் சுழற்றத் துவங்கினான்.