Monday, October 11, 2010

சிநேகமான நடையில் சுவையாக ஒரு நூல்


உணவின் வரலாறு
பா.ராகவன்
கிழக்கு பதிப்பகம்

33/15 எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை,, சென்னை- 600018.
தொலைபேசி-044/4309701 - Email- support@nhm.in This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it - Web site: nhm.in

உணவின் வரலாறு குறித்து ஆங்கிலத்திலும் இந்தி போன்ற மொழிகளில் வண்டி வண்டியாக நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும் குப்பை குப்பையாகத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு தானியம் பற்றியும் பானங்கள் பற்றியும், உணவுப் பதார்த்தங்களின் மூலப் பொருட்கள் பற்றிய கட்டுரைகளும் பல குப்பை லாரிகள் கொள்ளும் அளவுக்கு இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. டெல்லியின் புத்தகக் கடைகளில் Table Top Books என்று சொல்லக்கூடிய புத்தகங்கள், திரவ பதார்த்தங்கள் பற்றியும் மற்ற உணவுகள் பற்றியும் கொட்டிக் கிடக்கின்றன. ஏறத்தாழ நம்முடைய சொத்துக்களை விற்று வாங்கக் கூடிய விலைகளில் கிடைப்பன இவை. அனில் அம்பானி, முகேஷ் அம்பானி அல்லது அவர்களின் தூரத்து உறவினர்கள் அல்லது நம்முடைய மாநில மைய அமைச்சர்கள் அல்லது அவர்களுடைய தூரத்து உறவினர்கள் என்ற அந்தஸ்தில் இருப்பவர்கள் மட்டுமே வாங்கக் கூடிய விலையில் இந்த நூல்கள் இருக்கும்.

மேலும்...


Wednesday, October 6, 2010

விளையாட்டு அரங்கத்துக்கு கோமணத்துடன் போகலாம்...

பிரம்மாண்டமான துவக்க விழாவுக்குப் பிறகு மூன்றாவது நாளாக விளையாட்டுக்கள் தொடர்ந்து வருகின்றன. நான் ஏற்கனவே சொன்னது போல எனக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களில் விளையாட்டு பிரதானமானது. எந்த விளையாட்டைப் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆண்டவனின் அலகிலா விளையாட்டைப் போலவே பூமியில் விளையாடப்படும் எந்த விளையாட்டும் எனக்குப் புரிந்தது இல்லை. படிக்கும் காலத்திலேயே விளையாட்டு மைதானத்துக்கு வெளியே நின்று வெட்டி அரட்டை அடித்துப் பொழுது போக்கிய பாவத்தின் விளைவு இது.

விளையாட்டுக்குக் கூட விளையாட்டு மைதானம் பக்கம் போகாத ஜென்மம் நான்.

சரி. இப்போது விஷயம் அதுவல்ல. திங்கட்கிழமை மாலையில் இருந்து இந்தியா தங்கம் வாங்கியது. பித்தளை வாங்கியது. எவர்சில்வர் வாங்கியது போன்று தொலைக்காட்சிகளில் வரும் எந்த செய்தியும் என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. எனவே அதைப்பற்றி இங்கே எழுதப்போவது இல்லை என்றும் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன

Read more...