எனக்கு ஒரு குட்டிக் கதை ஞாபகத்துக்கு வருகிறது.
தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தான் மாப்பிள்ளை. இருவரும் வெளியில் கடைக்குக் கிளம்பினார்கள். வழியில் மாமனாருக்குக் கடன் கொடுத்திருந்த ஒருவன் எதிர்பாராமல் எதிர்ப்பட்டு மாமனாரின் சட்டையைப் பிடித்துக் கொண்டான். மாமனாருக்கு தர்மசங்கடமாகி விட்டது. சமாளிக்கும் வகையில் சொன்னான்.
“உனக்கு எப்படா கடன் கொடுக்கணும்? குடுக்கலைன்னா என்னடா பண்ணுவே?”
“இப்படி எல்லாம் பேசினா உன்னை செருப்பாலேயே அடிப்பேன்”
“தைரியம் இருந்தால் அடிடா பார்ப்போம்”
கடன் கொடுத்தவன் சடாரென்று செருப்பை உருவி பளீரென்று ஒன்று கொடுத்தான்.
மாமனார் அரண்டுவிட்டாலும் சமாளித்தான்.
என்னை அடிச்சிட்டே... தைரியம் இருந்தா என் மாப்பிள்ளை மேலே கை வைடா பார்ப்போம்...
“உன் மாப்பிள்ளை என்னடா புடுங்கி. இப்ப பாரு” என்று மாப்பிள்ளையையும் இரண்டு வெளுவெளுத்தான்.
சரி வாங்க மாப்பிள்ளை போகலாம் என்று மாப்பிள்ளையை அழைத்துச சென்றான் மாமனார்.
மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் மாமனார் செருப்படி பட்டான் என்று சொல்ல முடியாது பாருங்கள். அவனும் பட்டிருக்கிறானே.
ஏறத்தாழ இதுபோன்ற வேலைதான் டெல்லி தமிழ்ச் சங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது என்று தோன்றுகிறது. தமிழ்ச் சங்கத்தின் செயலாளரின் செட்டப் பட்டம் மற்றும் விருது வாங்கும் சுயமோகம் நாளுக்கு நாள் அதிகரித்து ஏறத்தாழ மனோவியாதி போல மாறிவிட்டது.
யாராவது இரண்டு பேர் சேர்ந்து கிடைத்தாலும் உடனடியாக அந்த இருவருக்கும் கற்பனையான அமைப்பு ஒன்றை உருவாக்கி அவர்கள் வழியாக தனக்கு செட்டப் விருதுகள் மற்றும் பாராட்டுக்களை உடனடியாக ஏற்பாடு செய்து கொள்ளும் அவருடைய சுயமோகம் குறித்து மூலைக்கு மூலை (சிலருக்கு தைரியம் இல்லைவிட்டாலும் மறைமுகமாவது) கிண்டல் செய்து வருகிறார்கள்.
பலரும் மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என்பது அவருக்கும் தெரியும்.
என்னைப் போன்றவர்கள் இதைப் பார்த்து சத்தம் போட்டு சிரித்தாலும் பொறாமையில் சிரிக்கிறான் என்று தன்னுடைய ஜால்ராக்களை விட்டுக் கூறவைக்கிறார். அவர்களும் தங்கள் முன்பு எறியப்படும் சில பிஸ்கட்டுக்களுக்காக நேரம் கிடைக்கும் போது என்னைக் கடித்து குதற சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருக்கிறார்கள். சிலர் ஏற்கனவே பலமாக் கடித்தும் விட்டார்கள்.
சரி. விஷயத்துக்கு வருகிறேன்.
இந்த செட்டப் விருதுகளை வைத்து தன்மேல் எழும் கடுமையான விமர்சனங்களை சமாளிக்க ஒரு வழியைக் கண்டுவிடித்து விட்டார் தமிழ்ச் சங்கதிதின் செயலாளர் என்று தோன்றுகிறது. இப்போது தன்னுடன் கூட இருக்கும் தொண்டரடிப் பொடியாழ்வார்களுக்கும் அதே போல செட்டப் விருதுகள் ஏற்பாடுசெய்யத் தொடங்கிவிட்டார்.
தங்கள் கழுத்துக்களில் ஜவ்வந்தி மாலையும் தலையில் மஞ்சள் தண்ணீரும் தெளிக்கப்படுவதை உணர்ந்து கொள்ளாமல் இப்போது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சில செயற்குழு ஜம்பவான்கள் தங்கள் செயலாளரைப் போலவே
செட்டப் விருதுகளை வாங்கி பெரிதாக ஃப்ளெக்ஸ் பேனர்களும் வைத்துக் கொள்ளத் துவங்கி விட்டார்கள்.
நாளை செயலரை மட்டும் தனியாக யாரும் விமர்சிக்க முடியாது இல்லையா? ஏம்பா. நான் மட்டும் தான் விருதுகள் வாங்கினேனா? ஒண்ணுக்கும் லாயக்கில்லாத இவன்களும் வாங்கலையா? என்று கேட்கலாமே.
டெல்லி தமிழ்ச் சங்கத்தில் இனி இப்படி நிறைய கேளிக்கை அம்சங்கள் கிடைக்கும்.
ஹை.. ஜாலிதான்.
Saturday, October 12, 2013
Monday, July 15, 2013
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் திரு.பி.கன்னியப்பன் அவர்களின் எதிர்வினை.
தில்லித்
தமிழ்ச் சங்க வரலாற்றிலேயே, ( நான் இருமுறை பொருளாளராக இருந்த காலம்
உட்பட ) எந்த செயலருக்கும், தலைவருக்கும் தங்கள் நடவடிக்கைகளை திறந்த
மனதுடன் ( அதாவது வெளிப்படைத் தன்மையோடு (- with transparecy ) எந்த
உறுப்பினர்களுடனும் பகிர்ந்து கொண்டதாக வரலாறே இல்லை. அப்படி இருக்க
நீங்கள் மட்டும் இப்போது அப்படி அவர்கள் இருக்க வேண்டும் என்று
எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது ?
நான்
முதல் முறை பதவிக்கு வரும் முன்பாக நடந்த ஒரு பேரவைக் கூட்டத்தில் -
சங்கத்தின் செயல்பாடுகள், மாதக் கணக்கு வழக்குகள், எல்லா உறுப்பினர்
விபரங்கள் ( இது தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு சமமானது ) - ஆகியவைகள்
முதல் கட்டமாக சங்க வரலாற்றில் முதல் முறையாக வலயத்தில் ஏற்றப்பட
வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தேன். நான் பதவி ஏற்ற பிறகு அத்தனை
விபரங்களும் கணணி மயமாக்கப்பட்டும் - அதனை செய்ய விட்டார்களா? உரிய
பயனர் மற்றும் கடவுச் சொல்லுடன். சிதறிக் கிடந்த ( அதாவது பல முறை
செயலராக இருந்து தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும், தன உதவியின்றி
பிறர் வாக்காளர் விபரம் பெறக் கூடாது என்று ரகசியமாக வைத்திருந்த திரு.
கிருஷ்ணமூர்த்தியின்) உறுப்பினர் விபரத்தைத் தரம் பிரித்து- அதாவது சாதாரண
உறுப்பினர், அசோசியட் உறுப்பினர், ஆயுள் உறுப்பினர், Patron உறுப்பினர்
என்பதையெல்லாம் தரம் கண்டு அவைகளைப் பிரித்து முறையே - அடையாளக் குறியாக
உறுப்பினர் எண்ணுக்கு முன் O, A, L and P என்று குறிப்பிட்டு
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் வழங்கினோம். இன்று வரை
அதுதான், நான் வகுத்த அந்த முறை தான் அடிப்படையாகப் பின்பற்றப்பட்டு
வருகிறது.
Subscribe to:
Posts (Atom)
