Sunday, June 28, 2009

கிழக்கில் உதயமாகும் வன்முறை

மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் அசுர வளர்ச்சிக்கு அங்குள்ள ஆளுங்கட்சியான சிபிஐ (எம்) கட்சியினர் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட வன்முறை நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை நாம் இங்கே மறந்துவிட முடியாது. ஒரு காலத்தில் மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை அரசியல் வாதங்கள் அல்லது அரசியல் சார்ந்த எதிர்ப்பு என்பது அறிவார்ந்த விஷயங்களின் அடிப்படையில் அமைந்த விவாதங்களாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது அங்கும் நம்முடைய ஊரைப்போலவே வாதங்களை எல்லாம் அடி உதை கவனித்துக் கொள்கிறது. தடி எடுத்தவன் தண்டல் காரன். பலத்தை நிரூபிக்கிறவன் அறிவாளி.

ராகவன் தம்பி
9910031958

Monday, June 15, 2009

கருப்பி - கொலைக்குப் பின்தான் நீதியா

இன்று வடக்கு வாசல் இணையதளத்தில் கருப்பி - கொலைக்குப் பின்தான் நீதியா கட்டுரையை எழுதியிருக்கிறேன். சனிமூலை வலைப்பூவில் எழுதி வந்த கட்டுரைகளை இப்போது வடக்கு வாசல் இணையதளத்தில் எழுதத் துவங்கி விட்டேன்.எங்கள் இணையதளத்துக்கு வருகை தந்து என்னுடைய கட்டுரையை வாசித்து raghaavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள்.உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்.



மிக்க அன்புடன்
ராகவன் தம்பி
புது டெல்லி
9910031958