வடக்கு வாசல் இதழ் துவக்கிய நேரத்தில் இதழுக்குப் படைப்புக்கள் வரத் துவங்கி இருந்தன. கவிதையும் கட்டுரைகளும் சிறுகதைகளும் வரத் துவங்கிய நேரம் அது. அநேகமாக 2005 இறுதி மாதங்களில் ஒன்றாக இருக்கலாம்,
வடக்கு வாசல் அலுவலகத்துக்கு வந்த கவிதைகளில் ஒன்று தனியாகக் கவனத்தை ஈர்த்தது. ஒற்றைக் கவிதை அது.
வடக்கு வாசல் அலுவலகத்துக்கு வந்த கவிதைகளில் ஒன்று தனியாகக் கவனத்தை ஈர்த்தது. ஒற்றைக் கவிதை அது.
தன்னைப் பற்றிய அறிமுகம் ஏதும் இல்லை. நேரடியாக ஒரு கவிதை. வெறும் பெயரும் முகவரியும் தாங்கிய ஒற்றைத்தாளில் வந்த படைப்பு.
கவிதை எழுதியவர் பெயர் சுமதி ராமசுப்பிரமணியம் என்று இருந்தது. இது போன்ற நேரடிப் பெயருடன் கவிதை அல்லது கவிதை எழுதுபவர்கள் அதிலும் பெண் படைப்பாளிகளை அதிகம் காண நேருவதில்லை. இந்த நேரடிப் பெயர் எனக்கு சற்று ஆச்சரியம் அளித்தது.
