நான்
 முதல் முறை பதவிக்கு வரும் முன்பாக நடந்த ஒரு பேரவைக்  கூட்டத்தில் - 
சங்கத்தின் செயல்பாடுகள், மாதக் கணக்கு வழக்குகள், எல்லா  உறுப்பினர் 
விபரங்கள் ( இது தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு சமமானது ) -  ஆகியவைகள் 
முதல் கட்டமாக சங்க வரலாற்றில் முதல் முறையாக வலயத்தில்   ஏற்றப்பட 
வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தேன்.  நான் பதவி ஏற்ற  பிறகு  அத்தனை
 விபரங்களும் கணணி  மயமாக்கப்பட்டும் - அதனை செய்ய  விட்டார்களா? உரிய 
பயனர்  மற்றும் கடவுச் சொல்லுடன்.  சிதறிக் கிடந்த (  அதாவது பல முறை 
செயலராக இருந்து  தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்,  தன உதவியின்றி 
பிறர் வாக்காளர் விபரம் பெறக் கூடாது என்று ரகசியமாக  வைத்திருந்த  திரு. 
கிருஷ்ணமூர்த்தியின்) உறுப்பினர் விபரத்தைத் தரம்  பிரித்து- அதாவது சாதாரண
 உறுப்பினர், அசோசியட் உறுப்பினர், ஆயுள்  உறுப்பினர், Patron உறுப்பினர் 
என்பதையெல்லாம் தரம் கண்டு அவைகளைப்  பிரித்து முறையே - அடையாளக் குறியாக 
உறுப்பினர் எண்ணுக்கு முன்      O, A, L  and P என்று குறிப்பிட்டு 
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும்  வழங்கினோம்.  இன்று வரை 
அதுதான், நான் வகுத்த அந்த முறை தான் அடிப்படையாகப்  பின்பற்றப்பட்டு 
வருகிறது. 

 
