Wednesday, October 20, 2010

பிகார் தீபாவளி - தமிழ் பேப்பர் கட்டுரை


பிகார் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல்கள் அக்டோபர் 21-ம் தேதி தொடங்கி நவம்பர் 20 வரை ஆறு கட்டங்களாக நடைபெற உள்ளது. 243 தொகுதிகளின் 56,493 வாக்குச் சாவடிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை 5,50,88,402 வாக்காளர்கள் நிர்ணயிக்கப் போகிறார்கள்.
இந்தியாவில் வறட்சி மற்றும் வறுமை மிகுந்த மாநிலமாக எப்போதும் அடையாளம் காணப்படுவது பிகார். அடிப்படைக் கல்வி, தொழிற்கல்வி, மருத்துவ வசதிகள் போன்றவற்றில் மிகவும் பின்தங்கிய மாநிலம் இது. எது எப்படி இருந்தாலும் தேசிய அளவில் ஐஏஎஸ் மற்றும் ஐஐடி தேர்வுகளில் பிகார் மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும் பலமுறை முதலிடம் பெற்று வருகிறார்கள். இந்த நாட்டின் மென்பொருள் துறை வளர்ச்சியில் பிகார் மாநிலத்தின் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு மிகவும் பெருமைக்குரிய ஒன்று. அதே போல, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் தச்சுவேலை, கட்டட வேலை, தையல் வேலை, வாகனங்கள் பழுதுபார்த்தல் போன்ற அடிப்படையான, மிகவும் முக்கியமான வேலைகளில் மிகவும் திறமையுடன் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட்டு வருகிறவர்கள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள். எண்பதுகளில் டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் நான் பணியில் சேர்ந்தபோது அரசுத் துறையின் பல மேலதிகாரிகள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

Monday, October 18, 2010

சாரு நிவேதிதாவும் ஒரு வாசகியும்

சாரு நிவேதிதா என்ற முது பெரும் எழுத்தாளர் , தனது பதிவுகளில் கண்டதை உளறிக்கொண்டும் தன்னைத் தானே புகழ்ந்து எழுதிக்கொண்டும் சக எழுத்தாளர்களின் மீது விழுந்து பிடுங்கிக்கொண்டும் இருக்கிறார். சமீபத்தில் பாமினி என்ற பெண்(?!) சாருவின் ஆங்கிலப் புலமை மீது 'கவலையுற்று' எழுப்பிய கேள்விக்கு தனது 'மொழியில்' பதில் சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் வாசகியின் கேள்விக்கு சாருவின் வார்த்தைப் பிரயோகங்கள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை. இடையில் என்னவோ புதைபொருள் ஆராய்ச்சியாளர் கணக்குக்கு ஒரு 'எலக்கிய ஆய்வுக்கு' எழுபதாயிரம் செலவானதாக ஒரு புருடா வேறு. தமிழில் சமீப காலமாக உலவும் இப்படிப் பட்ட ஒரு போக்கு குறித்து உங்கள் கருத்து என்ன?

சந்திரமோகன் வெற்றிவேல்
புது டெல்லி
chandrabuwan@gmail.com This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


அன்புள்ள சந்திரமோகன்

உங்கள் பல கேள்விகளுக்கு நீங்களே விடையும் தந்திருக்கிறீர்கள்.

நீங்கள் சொல்லும் அந்தச் சரித்திரப் புகழ் பெற்ற பதிவினை நானும் படித்தேன். சாரு நிவேதிதாவை ரவியாகவும் அறிவழகனாகவும் நானும் என்னுடைய டெல்லி நண்பர்களும் அறிவோம். அடிப்படையில் மிகவும் மிருதுவானவர் சாரு. சற்று பயந்த சுபாவம் உண்டு அவருக்கு. நேருக்கு நேராக யாராவது அவரிடம் மோதினால் பதுங்கி நழுவுவதை நாங்கள் நிறைய பார்த்து இருக்கிறோம். அவர் பறைசாற்றிக் கொள்ளும் உலக ஞானங்கள் பற்றிய ஆச்சரியம் அவருடைய பதிவுகளைப் படிக்கும் பலரைப் போலவே எங்களுக்கும் உண்டு. ஏறத்தாழ ஒரு மனநோயாளியின் மனநிலையில் இருப்பது போல வேண்டுமென்றே அவர் எழுதுகிறார் என்பது அவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த வேஷத்தை அவர் விரும்பி அணிந்து கொள்கிறார் என்பது அவருடைய வாசர்கள் மற்றும் நண்பர்களைப் போலவே அவருக்கும் நன்கு தெரியும்.

அதனால் உங்களுக்கோ எனக்கோ வேறு யாருக்கோ இதில் எவ்விதமான ஆட்சேபணையும் ஆச்சரியமும் இருக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறேன்.

மேலும்...


Friday, October 15, 2010

கழுநீர்ப் பானையில் கையை விட்ட மைய அரசு...

டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுக்களைப் பற்றி விளையாட்டாக எழுத ஆரம்பித்தேன். விளையாட்டு பற்றி எழுதமாட்டேன் என்றும் விளையாட்டைச் சுற்றி இருக்கும் அரசியலையும் அக்கப்போர்களைப் பற்றி மட்டுமே எழுதுவேன் என்று சொல்லியே ஆரம்பித்தேன். சொன்னது போலவே அதைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். நான் எழுதியதற்கும் மேல் பலமடங்கு நீங்கள் தினசரிகளிலும் காட்சி ஊடகங்களிலும் நீங்கள் இன்னும் சுவாரசியமான பல விஷயங்களைப் படித்து இருக்கலாம். காட்சி ரூபமாகக் கண்டிருக்கலாம். டெல்லியில் வசிக்க நேர்ந்ததால் லேசாக சில அக்கப்போர் கலந்த அலசல்களை சுத்தமாக மேம்போக்காக இந்தப் பக்கத்தில் பதிந்து வந்தேன். இந்தப் பதிவுகளை சில நாட்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்த்தீர்கள் என்றால் உண்மையாகவே சுவாரசியமாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் காலமும் வாழ்க்கையும் ஓடும் ஓட்டத்தில் காலை நடந்ததை மாலையே மறந்து விடுகிறோம். மாலைக்கும் இரவுக்கும் வேறொன்று புதிதாக முளைத்து எதிரில் நின்று விளையாட்டுக் காட்டிக் கொண்டு இருக்கும். எனவே இந்தப் பதினொரு நாட்களில் என்னால் முடிந்த நாட்களில் ஒருசில பதிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கத் துவங்கினேன். விளையாட்டுக்கள் பற்றியும் அந்தப் போட்டிகளில் இந்தியாவின் சாதனைகள் குறித்தும் நான் எதுவும் எழுதவில்லை. ஏனென்றால் அவை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. புரியாது. புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. இங்கு நான் கொடுக்க முயற்சித்தது எல்லாமே மேம்போக்கான சில அக்கப்போர்களைத்தான்.

மேலும் வாசிக்க...

Wednesday, October 13, 2010

சகஜத் தன்மையை நோக்கி நகரும் டெல்லி...

ப்ளூலைன் பேருந்துகள் எனப்படும் எமவாகனங்களைப் பற்றித் தனியாக ஒருமுறை சனிமூலையில் எழுதவேண்டும். இவர்களைப் போலப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்கள். காசுகொடுத்துப் பயணம் செய்யும் பயணிகள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்து வரும் அயல்நாட்டு மன்னர்கள். இந்த வண்டிகளின் ஓட்டுநர்களின் தோள்களில் எப்போதும் ஒரு எமப்பாசக்கயிறு தொங்கிக் கொண்டே இருக்கும். இந்த ப்ளூலைன் வண்டிகளின் நடத்துனர்களுக்கு எப்போதும் அவர்களின் வண்டி போகாத இடமே தலைநகரில் எப்போதும் கிடையாது. என்னைப் போன்ற ஏமாளிப் பயணி யாராவது வண்டி “கிருஷ்ணகிரி போகுமா?” என்று கேட்டாலும் நடத்துனன் அந்தப் பயணியின் கையை அவசரமாக இழுத்து “போகும் போகும். சீக்கிரம் ஏறு” என்று வண்டிக்குள் தூக்கிப் போட்டுக் கொள்வான். பத்து ரூபாய்க்கு பயணச் சீட்டைக் கிழித்துக் கொடுப்பான். வண்டி கொஞ்சதூரம் போனதும் நிறுத்தி அந்தப் பயணியிடம் ஒரு வழியைக் காட்டுவான். “இப்படியே கொஞ்சதூரம் நடந்து போனா அங்கே இன்னொரு வண்டி வரும். அதுலே ஏறிப்போனா நீ சொல்ற கிருஷ்ணகிரி வந்துடும்”. அந்த பளூலைன் வண்டியின் நடத்துனன் ஏமாளிப் பயணியை இறக்கி விட்ட இடத்திலிருந்து நேராக ஒரு ஆறு கிலோமீட்டர் நடந்தால் புது தில்லி ரயில் நிலையம் வரும். இதுதான் எங்கள் ஊர் ப்ளூலைன் பேருந்துகளின் பராக்கிரமம். இதுவே இப்படி என்றால் இவர்கள் போக்குவரத்து விதிகளை எவ்வளவு மதித்து நடப்பார்கள் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்...

Monday, October 11, 2010

சிநேகமான நடையில் சுவையாக ஒரு நூல்


உணவின் வரலாறு
பா.ராகவன்
கிழக்கு பதிப்பகம்

33/15 எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை,, சென்னை- 600018.
தொலைபேசி-044/4309701 - Email- support@nhm.in This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it - Web site: nhm.in

உணவின் வரலாறு குறித்து ஆங்கிலத்திலும் இந்தி போன்ற மொழிகளில் வண்டி வண்டியாக நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும் குப்பை குப்பையாகத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு தானியம் பற்றியும் பானங்கள் பற்றியும், உணவுப் பதார்த்தங்களின் மூலப் பொருட்கள் பற்றிய கட்டுரைகளும் பல குப்பை லாரிகள் கொள்ளும் அளவுக்கு இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. டெல்லியின் புத்தகக் கடைகளில் Table Top Books என்று சொல்லக்கூடிய புத்தகங்கள், திரவ பதார்த்தங்கள் பற்றியும் மற்ற உணவுகள் பற்றியும் கொட்டிக் கிடக்கின்றன. ஏறத்தாழ நம்முடைய சொத்துக்களை விற்று வாங்கக் கூடிய விலைகளில் கிடைப்பன இவை. அனில் அம்பானி, முகேஷ் அம்பானி அல்லது அவர்களின் தூரத்து உறவினர்கள் அல்லது நம்முடைய மாநில மைய அமைச்சர்கள் அல்லது அவர்களுடைய தூரத்து உறவினர்கள் என்ற அந்தஸ்தில் இருப்பவர்கள் மட்டுமே வாங்கக் கூடிய விலையில் இந்த நூல்கள் இருக்கும்.

மேலும்...


Wednesday, October 6, 2010

விளையாட்டு அரங்கத்துக்கு கோமணத்துடன் போகலாம்...

பிரம்மாண்டமான துவக்க விழாவுக்குப் பிறகு மூன்றாவது நாளாக விளையாட்டுக்கள் தொடர்ந்து வருகின்றன. நான் ஏற்கனவே சொன்னது போல எனக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களில் விளையாட்டு பிரதானமானது. எந்த விளையாட்டைப் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆண்டவனின் அலகிலா விளையாட்டைப் போலவே பூமியில் விளையாடப்படும் எந்த விளையாட்டும் எனக்குப் புரிந்தது இல்லை. படிக்கும் காலத்திலேயே விளையாட்டு மைதானத்துக்கு வெளியே நின்று வெட்டி அரட்டை அடித்துப் பொழுது போக்கிய பாவத்தின் விளைவு இது.

விளையாட்டுக்குக் கூட விளையாட்டு மைதானம் பக்கம் போகாத ஜென்மம் நான்.

சரி. இப்போது விஷயம் அதுவல்ல. திங்கட்கிழமை மாலையில் இருந்து இந்தியா தங்கம் வாங்கியது. பித்தளை வாங்கியது. எவர்சில்வர் வாங்கியது போன்று தொலைக்காட்சிகளில் வரும் எந்த செய்தியும் என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. எனவே அதைப்பற்றி இங்கே எழுதப்போவது இல்லை என்றும் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன

Read more...

Monday, October 4, 2010

ஆடம்பரத்தின் குரூர வெளிப்பாடு - எந்திரன்


கடந்த பல மாதங்களாக இசைக்குறுந்தகடு வெளியீடு, ட்ரெயிலர் வெளியீடு, அது குறித்த சிறப்புக் காட்சிகள் என்று தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் மீது தொடர்ச்சியாக ஒருவகையான மனோரீதியான தாக்குதலை நிகழ்த்தி வந்த எந்திரா திரைப்படம் ஒருவழியாக இப்போது திரைக்கு வந்துள்ளது.சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்புக்கள் வழியாக மட்டுமன்றி அநேகமாக இந்தியாவின் அனைத்து மொழி சார்ந்த ஊடகங்கள் வழியாகவும் திரைப்படம் பார்ப்பவர்களின் ஒரு வகையான மிகப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு கலந்த கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டது. இந்தக் கருத்து உருவாக்கத்தினை வலுவாகத் திணிப்பதில் சன் பிக்சர்ஸ் மற்றும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய வணிக நிறுவனங்களின் வியாபார தந்திரம், அதை ஒட்டிய ஆடம்பரம் கலந்த அணுகுமுறை போன்றவை இந்தத் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே அனைத்துத் தரப்பிலும் பெருத்த எதிர்பார்ப்பினை உருவாக்கி வைத்தது.

மேலும் வாசிக்க



நேற்று (03 செப்டம்பர் 2010) காமன்வெல்த் போட்டிகளின் துவக்க விழாக்களை தொலைக்காட்சியில் கண்டு களித்து இருப்பீர்கள். அநேகமாக உலகின் பல பகுதிகளிலும் இந்தத் துவக்க நிகழ்ச்சியை மிகவும் ஆவலாகப் பார்த்து ரசித்து இருப்பார்கள். மிகவும் கோலாகலமாகவும் அழகாகவும் அமைந்திருந்தது விழா. எந்த வகையிலும் தொய்வில்லாது மிகவும் சுவாரசியமாகவும் பார்க்கும்போதே ஒருவகையான பெருமிதத்தையும் பெருமையையும் அளித்த விழா அது என்று சொல்லவேண்டும். இந்தக் கொண்டாட்டங்களை நேரில் பார்த்தவர்களை விட என்னைப் போல நிம்மதியாக சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொரிக்க பலகாரங்களும் சூடான டீயும் வைத்துக்கொண்டு பார்த்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். விழா நடந்த நேரு கலையரங்கில் பயங்கர கெடுபிடிகள். முந்தைய கட்டுரையில் எழுதியது போல ஒரு போருக்கு ஆயத்தம் செய்து கொள்ளும் கோட்டையைப் போல நிகழ்ச்சி நடக்கும் நேரு கலையரங்கம் கடந்த ஒரு வாரமாக இருந்தது.

மேலும் வாசிக்க...

Friday, October 1, 2010

விசில் அடித்த முதல்வர்...


72 வயதான டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் பிரமாதமாக விசில் அடித்தும், காமன்வெல்த் இசைக்கு நடனமாடிக் குதூகலித்து இருக்கிறார். விளக்கெண்ணெய் குடித்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சில நாட்களாக அலைந்து வரும் சுரேஷ் கல்மாடிக்குப் பாராட்டு மழையாகப் பொழிந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சி இத்தனை வெற்றிகரமாக நடக்கக் காரணமாக இருக்கும் கல்மாடிக்கு முதுகில் ஒரு ஷொட்டு தரவேண்டும் என்றும் இன்றைய இளைஞர்கள் சுரேஷ் கல்மாடியிடம் இருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பாராட்டி இருக்கிறார். (அது சரி).

மேலும் வாசிக்க...