Friday, June 6, 2008

நம் தாய்மொழியும் நமது குழந்தைகளும்...

நம்முடைய தமிழ் திரைப்படங்களில் நமக்கு அதிகம் காணக்கிடைக்கும் காட்சி இது. கதாநாயக வேடம் புனையும் முதியவர் வழக்கமாகக் கடும் உழைப்பாளி. காலத்தின் கொடுமையால் அவர் சுமார் 20 வயதுள்ள தமிழ் பேசத்தெரியாத ஏதாவது ஒரு சேட்டுப் பெண், தெலுங்கு கன்னடம் அல்லது மலையாளப் பெண் நடிக்கும் கதாநாயகிப் பாத்திரத்தின் வீட்டில் வேலைக்காரராக இருப்பார். இரவல் குரலின் கருணையால் செயற்கையாகத் தமிழ் பேசும் அந்தக் கதாநாயகிப் பெண் நம்முடைய கதாநாயகப் பெரியவரை ஏகத்துக்கும் கேவலப்படுத்திக் கொண்டு இருப்பாள். தோழியருடன் பந்து விளையாடும் போது பந்தைப் பொறுக்கிப் போடச் சொல்வாள். சாணி பொறுக்கச் சொல்வாள். தரையை மெழுகச் சொல்வாள். விறகு பிளக்கச் செய்வாள். வண்டியைத் துடைக்கச் சொல்வாள். தன்னுடைய தோழிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவரை மிகவும் கேவலமாக நடத்துவாள். நம்முடைய கதாநாயக வேடம் அணிந்த பெரியவர் எல்லாவற்றையும் இன்முகத்துடன் பொறுத்துக்கொள்வார். அவள் காலால் இட்ட பணிகளைத் தலையால் செய்வார். பொறுத்துப் பொறுத்து, ஒரு கட்டத்தில் அவமானம் தாங்காது சுனாமி அலையின் சீற்றத்துடன் பொங்கி எழுவார். Look Madam!! What do you think o yourself? You know who I am? I am B.A., Economics from Krishnagiri Government Arts College you know? First of all, you learn how to give respect and take respect. Understand? You better understand... என்கிற ரகத்தில் கைகால்களை ஆட்டி எழுச்சிமிகு வசனங்களைப் பேசுவார். அரங்கில் விசில் சத்தமும் கரவொலியும் வானை முட்டும். நம்முடைய கதாநாயகப் பெரியவரின் ஆங்கில வசனத்தைக் கேட்டு திக்கு முக்காடிப் போவாள் அந்தக் கதாநாயகிப் பெண். அவளுடைய போக்கு உடனடியாகத் தலைகீழாக மாறிப் போய்விடும். அவளுடைய மனதில் சொல்லொணா வண்ணம் காதல் கரைபுரண்டு ஓடும். உடனடியாக வரும் அடுத்த காட்சியில், இருவரும் நைல் நதி அல்லது தேம்ஸ் நதிக்கரையோரத்தில் கைகோர்த்துக் கொள்வார்கள். அல்லது கதாநாயகப் பெரியவர் தலைமுதல் கால்வரை போர்த்திய ஆடையுடனும் கதாநாயகி அந்தக் குளிரில் அரைக்கால் மீட்டர் துணியை உடுத்திக் கொண்டு, ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் புரியாத தமிழில் ஏகப்பட்ட வாத்திய இரைச்சல்களுடன் பாடி ஆடுவார்கள். அங்கே இருமனங்களும் செம்புலப் பெயல் நீர் கலந்தாற்போல் கலந்து விடும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்தக் கதாநாயகியின் மனமாற்றத்துக்கு மூலகாரணமாக அமைவது நம்முடைய கதாநாயகப் பெரியவர் பொரிந்து தள்ளிய ஆங்கிலம்தான். அவர் பேசிய ஆங்கிலம் தான் அந்த அம்மணியின் மனத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த அளவு ஆங்கிலம் தெரிந்த இவர் கண்டிப்பாக நல்லவராகவும் வல்லவராகவும் இருந்துதான் ஆகவேண்டும். இந்த அளவு ஆங்கிலம் பேசும் இவருக்குத் தெரியாதது ஒன்றும் இருக்க முடியாது என்றமுடிவுக்குக் கதாநாயகிப் பெண் தள்ளப்பட்டு விடுவாள்.


நம்முடைய குழந்தைகளின் அறிவுத் திறனை அளப்பதற்கும் நாம் இந்தத் தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகிப் பெண் மேற்கொள்ளும் இது போன்ற அளவு கோலைத்தான் அதிகமாகப் பயன் படுத்துகிறோம். குழந்தைகள் புத்திசாலிகள் ஆகத்திகழ வேண்டும் என்றால் அவர்கள் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களை அநியாயமாக வற்புறுத்துகிறோம். அதற்காக சைக்கிளையோ, ஸ்கூட்டரையோ காரையோ வீட்டையோ விற்றாவது அந்தக் குழந்தை ஆங்கிலம் படிக்க வேண்டும். நல்ல ஆங்கிலத்தில் பேசியே ஆகவேண்டும் என்று அவர்கள் மீது திணிக்கிறோம். இந்த வன்முறையின் கொடுமையான விளைவாக நம்முடைய குழந்தைகளுக்கு நம் தாய்மொழியின் அருமை, அதன் இனிமை, அதன் வளமை, அதன் பெருமை பிடிபடாமல் போய்விடுகிறது. பல குடும்பங்களில் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு குடும்ப வழக்கமாகக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று அவர்கள் மீது ஒருவகையான வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு எந்தவகையான இன்பத்தை மறுக்கிறோம் என்பதனை உணர்ந்து கொள்ளாமல் அவர்களை ஆங்கிலம் ஒப்பிக்கும் கிளிகளாக மாற்ற முயற்சிக்கிறோம்.


உலகில் உள்ள எத்தனையோ ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வது அல்லது அதில் பாண்டித்தியம் பெறுவது என்பது ஒன்றும் தவறான காரியம் அல்ல. கண்டிப்பாகத் தாய்மொழியைத் தவிர இன்னும் பிறமொழிகளைக் கற்றுக்கொள்வது மனநல ரீதியில் மிகவும் அற்புதமான விஷயம்தான். ஆனால் தாய்மொழியை முற்றாகப் புறக்கணிக்க வைத்து ஒரு மேட்டிமை பாவனைக்காக ஆங்கிலத்தை அவர்கள் மீது திணிப்பது என்பது நம்முடைய குழந்தைகளுக்கு எதிராக நாம் கருத்து ரீதியாகத் திணிக்கும் ஒருவகையான வன்முறைதான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.


மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியாது. இங்கே தில்லியில் அந்தக் கொடுமை சற்று அதிகம்தான் என்று நினைக்கிறேன். தாங்கள் தமிழர்கள் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் என்று வெளியில் காட்டிக்கொள்வதை ஒரு அவமானமாக நினைக்கும் ஒரு மனப்பாங்கை குழந்தைகளிடத்தில் இங்குள்ள தலைநகர்த் தமிழர்கள் வளர்த்து வருகிறோம். இது குறித்து ஏற்கனவே ஒரு சனிமூலை கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன். தன்னைத் தமிழர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பாத நல்லவர்களின் மனப்பாங்கு மற்றும் போக்கு குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதனை மீண்டும் இங்கு விவரிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இங்கு நான் சொல்ல விரும்புவது நம்முடைய குழந்தைகளை, நம்முடைய மொழியில் இருந்து விலக்கி வைக்கும் மனப்பாங்கைப் பற்றித்தான். தலைநகரில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் என்பது அவர்கள் வீட்டில் எப்போதாவது பேசிக்கொள்ளும் ஒரு காட்டுமிராண்டி பாஷை. தொலைக் காட்சிகளில் பெற்றோர்கள் பார்க்கும் அசட்டுத்தனமான தொடர்களில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொண்டும் எப்போதும் அழுது கொண்டும் பேசப்படும் ஒரு மொழி. அவ்வளவுதான். தமிழுக்கு அதற்கு மேல் அங்கே வேலையும் பயன்பாடும் இல்லை.

அதிலும் சில தமிழ்ப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் எதிரில் மிகவும் கவனமாகத் தமிழ் பேசுவதைத் தவிர்த்துத் தனியறையில் காதல் செய்யும் போதும் சண்டை போடும் போது மட்டுமே தமிழ் பேசிக்கொள்கிறார்கள். சில வீடுகளில் தமிழ்த் திரைப்படங்களைக் கூடக் குழந்தைகள் எங்காவது வெளியில் விளையாடப் போகும்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டியில் போட்டுப் பார்க்கிறார்கள். (ஆனால் இது ஒருவகையில் இது அந்தக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும் காரியம்தான். அதனால், இதனை சற்று சகித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது). சில வீடுகளில் சிறுகுழந்தைகளிடம் தமிழ் பேசினால் அந்தக் குழந்தை பேயைக் கண்டது போல மிரண்டு போகிறது என்று பெருமையுடன் விருந்தாளிகளிடம் சொல்பவர்களும் உண்டு.


எதையும் சிந்திக்கும்போது நமக்குப் பழக்கமான, நமக்குள் ஊறிப்போன ஒரு மொழியில் சிந்திக்கும்போது சற்று உருப்படியாகச் சிந்திக்கலாம் என்று மொழியியல் அறிஞர்கள் அடிக்கடி வலியுறுத்துகிறார்கள். சிந்தனை அளவில் நமக்குப் பரிச்சயமான மொழியின் தளத்தில் இயங்கும்போது அதன் ஓட்டம் சீராக அமையும் என்பதும் இயற்கை. எனவே அடிப்படை மொழியான தாய்மொழியை மனத்தளவில் சிந்தனை அளிவல் வலுப்படுத்தினாலே பல பெரிய காரியங்களை சாதிக்கலாம். ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால், சிந்தனை ஓட்டத்தில் நமக்குச் சரளமான தாய்மொழியை ஒதுக்கி வைத்து, அந்நிய மொழிகளையும் அறைகுறையாகக் கற்றுக்கொடுத்து, சிந்தனை ஓட்டத்தைத் தடைபடச் செய்கிறோமோ என்றும் தோன்றுகிறது. இதனை என்னால் சரியாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மொழியியல் அறிஞர்களும், மனவியல் அறிஞர்களும் இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகவும் சொல்லலாம். என்னுடைய சிற்றறிவுக்கு எட்டுவது என்ன என்றால், குழந்தைகளின் மீதான இந்த அறைகுறை மொழித் திணிப்பு என்பது அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சொல்ல வருவதை சரியான முறையில் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு அசௌகர்ய நிலைக்குத் தள்ளப் படுகிறார்களோ என்றும் தோன்றுகிறது. இங்கு தலைநகரில் இந்தியில் சிந்தித்து அதனை மனத்தளவில் உடடினயாக மொழிமாற்றம் செய்து வார்த்தைக் கோர்வைகளைத் தவறாக முன்வைக்கும் பலரைக் காணமுடிகிறது. இதற்கான உடனடி உதாரணமாக என்னுடைய இருமகள்களின் தமிழைச் சொல்லலாம். எங்கள் வீட்டில் வலுக்கட்டாயமாகத் தமிழில் பேசி, அவர்களைத் தமிழ் படிக்க வைத்தே இந்த நிலை என்றால், தமிழை முற்றாக ஒதுக்கி வைத்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே பேசவைத்து, வளர்க்கப்படும் குழந்தைகளின் நிலை என்ன என்று நினைத்துப் பாருங்கள். தமிழ் புழங்கும் சூழல் அவர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி இருக்கும்போது ஆங்கிலத்தை மட்டுமே அவர்கள் மீது திணித்து வளர்ப்பது என்பது எந்தக் கொடுமையில் சேர்ப்பது என்று சொல்லத் தெரியவில்லை. இதன் விளைவு என்னவென்றால் அந்தக் குழந்தைகளுக்கு எந்த மொழியின் பாலும் பற்றும் பாண்டித்யமும் ஆழமும் ஞானமும் இல்லாமல் போய்விடும். எல்லாமே அறைகுறையாகத் தான் இருக்கும்.


இந்த நிலையில் தலைநகரில் மரபிசை கற்றுக் கொள்ளவும் மரபுசார் நடனவகைகளைக் கற்றுக்கொள்ளவும் திருப்புகழ், பாசுரங்கள், திருவருட்பா போன்றவற்றைக் கற்றுக்கொள்ளவும் தங்கள் குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் பெற்றோர்களைத் தலைவணங்கத் தோன்றுகிறது. இவை நம்முடைய குழந்தைகளை நம்முடைய மரபுடன் ஒத்திசைய வைக்கும் காரியத்தை ஆற்றுபவவை. ஒரு சிறிய அளவிலாவது நம்முடைய மொழியின் வளமையை, பெருமையை, அவர்கள் வளர்ந்த பிறகாவது உணர்ந்து கொள்ள வழிவகை செய்பவவை.


நம்முடைய குழந்தைகளுக்கு நம்முடைய மொழியுடன் நாம் செய்து வைக்கும் பரிச்சயம் குறித்தும், அவர்களுடைய அறிவுத் திறனை ஆங்கிலம் வழி அளப்பதையும் குறித்து நான் சற்று மிகைப்படுத்திச் சொல்வது போலக்கூடச் சில சமயம் தோன்றும். இந்த விஷயத்தை எனக்கே உரிய மிகச் சிறிய அளவிலான ஞானத்தின் விளைவால் சற்றுப் பகிடி செய்வது போலத் தோன்றினாலும் இதன் அடிநாதமாக மிக ஆழமான வேதனை தொக்கி நிற்பதை எப்படி சரியாக விளக்கிச் சொல்வது என்று தெரியவில்லை.

ஏப்ரல் 2008 வடக்கு வாசல் இதழில் வெளியான கட்டுரை.22 comments:

 1. ஹா ஹா ஹா.. சேம் பிளட்...

  இது மாதிரி நான் எழுதின பதிவு படிச்சீங்களா..

  பல வருடங்களா இருக்குற நீங்களே இன்னும் அழறீங்களே..

  ReplyDelete
 2. படிச்சேன். பிரமாதமாக வந்திருந்தது.

  எத்தனை வருடங்கள் இருந்தால் என்ன? நானும் வேறு எங்கே முறையிடுவது?

  இன்னொன்று, இதை எழுதுவதால் ஏதாவது நடக்கப்போகிறதா?

  எல்லாம் ஒரு நம்பிக்கையில், ஒரு ஆதங்கத்தில, ஒரு எதிர்பார்ப்பில் எழுதுகிறதுதான்.

  பாப்பாத்தியம்மா மாடு மேயுது கட்டிப் போட்டுக்கோ என்று சொல்ல முடியவில்லை.

  ராகவன் தம்பி

  ReplyDelete
 3. Popularity of a language among people is decided by market forces. This is an inexorable law. Not restrictred to any one people. Even the people most loyal to their language gets crushed under this social law. For e.g the French. Today paper reported that the Korean couples are leading separate lives to teach English to their children.

  If you travel to Lucknow and to its main market area Habib Ganj, you will see the sign plates of every shop in English; this, despite the fact, for outside appearance, the UPites are Hindi fanatics.

  Thus, everyone succumbs to this law. If, on the contrary, there is demand in market places, moeny-wise, for a language other than English, or one's own mother-tongue, then, the people will be attracted to that langauge like bees.

  Didnt you see today's paper? It says, the cut-off for Hindi Course in Delhi University this year going up, that is due to the new demand of Hindi grads in Hindi tele and print media which pay handsome salaries

  Thus, there is no use lamenting the disinterest that Tamil parents show in making their children learn their ancient language. Things will fall into their fine places if the aspect of money is well taken care of!

  A language, first and foremost, should be utilatarian. Having high merit as literature is not being utilatarian. Tamil in poetry and written by scholars are not the Tamil of the masses.

  Tamil as used by scholars and poets and that as used by common masses are always different, even from the Sangam period = a conclusion arrived at by Rev. Robert Caldwell and Fr. Beski. RC spent his life time in reaserching Tamil language.

  Even today, his conclusion is valid. The common man does not bother about what the poets and the scholars write! That is why, film songs become a huge hit if they are scripted in coloquial Tamil (ammaadi...aaththaadi....).

  Your article refers to திருப்புகழ், பாசுரங்கள், திருவருட்பா. Alas, they were not for common Tamil masses; but for one tiny section of Tamil population who could savour literary Tamil and who want to pray their gods using that Tamil. God has not asked you to sing such literary hymns at all. It is your choice!! Need not be every one choice, let alone the choice of man who cant even know what a literary Tamil is!! So you see, even here, there is a wide gap between the literary and the unliterary devotees.

  I dont think a Tamil child will lose anything if it does not know these திருப்புகழ், பாசுரங்கள், திருவருட்பா. Even without knowing all these things, a Tamil child can be as devotional as you are, with all the help of திருப்புகழ், பாசுரங்கள், திருவருட்பா!!

  ReplyDelete
 4. சினிமா விரும்பிJune 9, 2008 at 12:33 PM

  அன்புள்ள ஆசிரியருக்கு,

  'நம் தாய்மொழியும் நமது குழந்தைகளும்' கட்டுரைக்கான என் இந்தப் பின்னோட்டத்தை அனானிமஸ்க்கு நான் எழுதும் பதிலாகக் கொள்ளலாம் !

  ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்கள் (உபயோகிக்கும் மொழி உட்பட) வணிகரீதியாகவே முடிவெடுக்கப் படுகின்றன என்பது பெருமளவில் உண்மைதான்! ஆனால் அத்தனை வ&#! 2979;ிகத்தின் இடையேயும் பாசம், அன்பு, பரிவு, நட்பு, காதல் போன்ற விஷயங்கள் உயிர்ப்புடன் இருக்கவில்லையா? வாழ்க்கையில் எல்லாவற்றையும் பணம் என்னும் தராசில் எடை போட்டĬ! 9; விட முடியு 990;ா? சற்றே நாடக பாணியில் சொல்வதென்றால் தாய்ப்பாலை விலை பேச முடியுமா? தாய்மொழியை அப்படி அரக்கத்தனமாக நசுக்கி விட்டு வாழ்க்கையில் அடையும் வெற்றி உண்மையில் இனிக&#! 3021;கத்தான் செய்யுமா?

  மறைந்த டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் சொன்னது போல் ' தமிழை நேசி! பிற மொழிகளை வாசி!' என்ற கொள்கை எவ்வளவு இதமானது!

  தாய்மொழியில் நல்ல பரிச்சயம் இல்லாத ஒரு குழந்தை என்னதான் தலைகீழாய் நின்றாலும் ஆங்கிலமோ அல்லது மற்ற வேற்று மொழிகளிலோ புலமை பெறமுடியாது என்பது என் உறுதியான நம்&! #2986;ிக்கை! சொல்லப் போனால் மொழிகளுக்கான ஆர்வம் (aptitude, flair) இல்லையென்றால் எத்தனை புகழ் பெற்ற பள்ளியும் ஒரு குழந்தைக்கு ஆங்கிலமோ அல்லது வேறு மொழிகளோ கற்பிப்பதில் கணிசமான &! #2997;ெற்றி காண ம ;ுடியாது. அதே போல் மொழி ஆர்வம் உள்ள குழந்தை தன் சொந்த முயற்சியிலேயே பல மொழிகளிலும் புலமை பெற்று விடும்!

  திருப்புகழ் போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த தமிழை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டுமா? அது இல்லாமலே காலம் தள்ள முடியாதா? என்றால் கண்டிப்பாக முடியும்! இதெல்லாம் ஒரு தேர்Ī! 4;்த சுவையின் அடையாளம். அவ்வளவுதான்!

  கடைசியாக ஒரு வார்த்தை! ஒரு வெட்டி பந்தாவுக்காகத்தான் பல பெற்றோர்கள் முரட்டுத்தனமாக குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்! நம் நாடு பல நூறு ஆண்டுகள் ஆங்கி&! #2994;ேயரிடம் அடிமைப்பட்டிருந்த நாடு என்ற உண்மையும் இதில் உள்ளே புதைந்திருப்பது மூளையைக் கசக்கிக் கொள்ளாமலே புரியும்!

  அன்புடன்,


  சினிமா விரும்பி

  ReplyDelete
 5. மொழி பற்றிய நமது புரிதலில் உள்ள நோக்கில்தான் பிரச்சனையே. ஒரு தமிழ் தெரிந்தவர் மற்றொரு தமிழ் தெரிந்தவரிடம் வேறு மொழியில் பேசுவது என்பது வேறு. ஆனால் புலம் பெயர்ந்தவர்கள் அங்கு பேசும் மொழி என்பது அரசியல், வணிகம் மற்றும் வட்டார நிர்ப்ந்தங்கள் சார்ந்தது. அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தைக்கு வட்டார நிர்பந்தத்தால் தமிழ் ட்ங் வர சாத்தியமில்லை அம்மா தமிழ் ட்ங் ஆக இருந்தாலும். அரசியல், வணிகம், பூகோள ஆளுகை இவையனைத்தும் சேர்ந்து இருந்தால் ஒழிய மொழி ஆளுகை சாத்தியமில்லை. ஸ்பானிஷ், பிரஞ்சு, ஆங்கிலம் போன்றவை அதிகம் பேசப்படுவதற்கு காரணம் அவர்களின் ஏகாதிபத்திய ஆதிக்கமே காரணம். தமிழ் இந்தியாவில் கூட ஆதிக்க மொழியாக் இல்லாத போது இந்த உணர்வுகளுக்கு அர்த்தம் இல்லை. எனக்கு தெரிந்த தமிழில் நான் உரையாடுவது ஒரு சொளகரியம் என்பதைத் தவிர வேறில்லை.தமிழர் ஆதிக்கம் இல்லாமல் தமிழ் ஆதிக்கம் தனியாக சாத்தியம் இல்லை.

  ReplyDelete
 6. மொழி பற்றிய நமது புரிதலில் உள்ள நோக்கில்தான் பிரச்சனையே. ஒரு தமிழ் தெரிந்தவர் மற்றொரு தமிழ் தெரிந்தவரிடம் வேறு மொழியில் பேசுவது என்பது வேறு. ஆனால் புலம் பெயர்ந்தவர்கள் அங்கு பேசும் மொழி என்பது அரசியல், வணிகம் மற்றும் வட்டார நிர்ப்ந்தங்கள் சார்ந்தது. அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தைக்கு வட்டார நிர்பந்தத்தால் தமிழ் ட்ங் வர சாத்தியமில்லை அம்மா தமிழ் ட்ங் ஆக இருந்தாலும். அரசியல், வணிகம், பூகோள ஆளுகை இவையனைத்தும் சேர்ந்து இருந்தால் ஒழிய மொழி ஆளுகை சாத்தியமில்லை. ஸ்பானிஷ், பிரஞ்சு, ஆங்கிலம் போன்றவை அதிகம் பேசப்படுவதற்கு காரணம் அவர்களின் ஏகாதிபத்திய ஆதிக்கமே காரணம். தமிழ் இந்தியாவில் கூட ஆதிக்க மொழியாக் இல்லாத போது இந்த உணர்வுகளுக்கு அர்த்தம் இல்லை. எனக்கு தெரிந்த தமிழில் நான் உரையாடுவது ஒரு சொளகரியம் என்பதைத் தவிர வேறில்லை.தமிழர் ஆதிக்கம் இல்லாமல் தமிழ் ஆதிக்கம் தனியாக சாத்தியம் இல்லை.

  ReplyDelete
 7. தாய்மொழியில் நல்ல பரிச்சயம் இல்லாத ஒரு குழந்தை என்னதான் தலைகீழாய் நின்றாலும் ஆங்கிலமோ அல்லது மற்ற வேற்று மொழிகளிலோ புலமை பெறமுடியாது என்பது என் உறுதியான நம்&! #2986;ிக்கை! சொல்லப் போனால் மொழிகளுக்கான ஆர்வம் (aptitude, flair) இல்லையென்றால் எத்தனை புகழ் பெற்ற பள்ளியும் ஒரு குழந்தைக்கு ஆங்கிலமோ அல்லது வேறு மொழிகளோ கற்பிப்பதில் கணிசமான &! #2997;ெற்றி காண ம ;ுடியாது.

  Very sweeping statements.

  First of all, please understand what is meant by learning a language. It means just getting proficiency: ability to read, write and handle the language, for whatever purpose, with confidence and clarity. This is the primary aim of education.

  To achieve this primary aim, it is not necessary that one should have 'aptitude', flair' for languages etc. It is enough to practise as taught by teachers; and, read books written by good authors as a routine practice, which your teachers will recommend to you.

  The aim of school education in teaching a language should be to make the pupils achieve the aforesaid aim. Everything else comes later.

  However, we see certain pupils go on achieving the higher objective of appreciating literature; and, also, creating literature in future by becoming writers. Some use their written and spoken skills gainfully and get employed where 'flair' for languages is desired, like media.

  Life is not all about language; and we dont want everyone to be poet and wordsmiths. They dont contribute anything to society in material terms. They add just recreational value to life.

  First and foremost, the hunger of man should be appeased; only then, he can go on doing other things. Literature is therefore possible only in a society where people are fully satisfied with their lives. Gandhi said, 'For a hungry man, God appears in the form of bread'

  Kadvalukkee antha nilai enRaal, ilakkiyaththin nilai enna?

  There are many great men who are not men of letters or wordsmiths, in different fields of life, like politics, law, history, even science (Julian Huxley), who handled the language for their own purpose, with just the proficiency they acquired in schools. There was a writer John Bunyan who did not go to school; read only one book the Bible who is now read as a part of English literature curriculam world over.

  Therefore, get rid of the illusion that schools and teachers are there to make you poets! Success in teaching a language to pupils consists not in making them poets, but in making them handle the language, in their own field of activity like science, law, medicine etc., in later life, with clarity. Flowery language is an idle fools!! Such fools are narcissists and time wasters. People take you for the matter you put across using a clear medium of language. Not how flowery your language!

  Another illusion that is found in the above extracts of cinema fan is that one must first become skilled in one's mother-tongue; if not, he cannot master any other language தலைகீழாய் நின்றாலும் !

  It is a compete travesty of truth. A lot of children who dont live in their own country or state, and who have no chance of learning their mother-tongue, have become writers in English langauge. Today writers in England comprise many stalwart asians whose mother tongues are Asian languages. Ishiguro is a japanese. He does not know Japanese. Naipaul does not know Hindi, his mother tongue. The former won Booker Prize; and the latter won the Noble Prize. R.K.Narayan never wrote in Tamil which is his mother tongue.

  A lot of examples can be adduced here to dump your theory into garbage din that one must first master one's own mother tongue in order to master another language.

  I, however, agree, that children have the innate ability to pick up more languages at their tender age and, therefore, it is possible to teach mother tongue and other tongues to them successfully.

  The question here, is, what, if such children grow up in places where their mother-tongue is not spoken and taught at all. You cant condemn them, can you, with your half-baked theory?

  There are many other sweeping statements in your rejoinder; but, it is sufficient now to lay bare a few only for want of space.

  ReplyDelete
 8. மொழி என்பது ஓர் இனத்தின் உயிராகும். மொழி என்பது ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள பயன்படும் கருவி மட்டுமன்று. மாறாக, மொழிக்குள் ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, நாகரிகம், வரலாறு என பல்வேறு கூறுகள் மறைந்துள்ளன. மொழியைக் காக்கத் தவறுகின்ற இனம் தன்னுடைய வரலாற்றுத் தொடர்ச்சியை இழந்துபோகும்.

  ஆங்கிலம் என்பது முகாமையான மொழி என்பது உண்மையே. ஆனால், ஆங்கிலம் இன்னும் எத்தனைக் காலத்திற்கு உலகின் முக்கிய மொழியாக இருக்கப் போகிறது என்பது கேள்விக்குறி. அடுத்த இன்னொரு மொழி உலகின் முக்கிய மொழியாக உருவாகினால் ஆங்கிலம் கற்றவர்களின் நிலையென்ன?

  சப்பான், சீனா, கொரியா முதலான கிழக்கத்திய நாடுகள் ஆங்கிலத்தின் துணை இல்லாமலே உலக வல்லரசுகளாக உருவாகிவிட்டிருப்பதை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

  ஆக, முன்னேற்றம் என்பது முற்றும் முழுவதுமாக மொழியைச் சார்ந்தது அன்று.

  அன்புடன்,
  திருத்தமிழ்ப் பணியில்,
  சுப.நற்குணன், மலேசியா.

  ReplyDelete
 9. நன்றி ரமேஷ் (சினிமா விரும்பி).

  நன்றி. சுபநற்குணன்.

  உங்களுடையது போன்ற அற்புதமான பெயர்களை நாங்கள் இழந்து நிற்கிறோம்.

  இங்கே எதையும் யோசனை செய்துதான் வருத்தப்பட வேண்டும்.

  பிறகு புலம்புகிறேன் என்று சொல்வார்கள்.

  இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. வேறொரு பதிவில் அந்த இம்சையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.

  அதாவது பின்னூட்டம் இடுபவருக்கு என்னுடைய கண்ணோட்டத்தை சற்று நகைசசுவையாகச் சொன்னால் அதன் நேரடி அர்த்தத்தை எடுத்துக் கொண்டு என்னைக் கன்னா பின்னா என்று விமர்சித்து உனக்குப் பிடித்த மாதிரி பின்னூட்டம் வருமாறு கணிணியை சரி செய்து கொள் என்று இலவச ஆலோசனைகளும் கிடைக்கின்றன.

  ராகவன் தம்பி

  ReplyDelete
 10. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி விஜயன்.

  ராகவன் தம்பி

  ReplyDelete
 11. உங்களுடையது போன்ற அற்புதமான பெயர்களை நாங்கள் இழந்து நிற்கிறோம்.//

  ரமேஷ் என்பதும், சினிமா விரும்பியும் அழகானத் தமிழ்பெயரா? 'விரும்பி' மட்டும்தான் தமிழ் இங்கே?

  வலை பதிவாளரின் தமிழறிவு நச்சல் தாங்க் முடியல!

  அய்யா ராகவன் தம்பி! பல புனைப்பெயர்களில் பின்னுட்டங்கள் போட்டு ஒரு நாடகம். அவ்வளவு கேனையன்களா மற்றவர்கள்?

  nalla thamaasuu...

  ReplyDelete
 12. ஐயா அனானி

  என்னுடைய நண்பர் ரமேஷ் சினிமா விரும்பி என்னும் பெயரில் எழுதுகிறார்.

  நான் நல்ல தமிழ்ப் பெயர் என்றது சுப.நற்குணன் அவர்களுக்கு.

  என்னுடைய வெளிப்பாட்டுத் தவறு இது.

  அதற்காக நீங்கள் இந்தக் குதியாட்டம் போட்டிருக்கத் தேவையில்லை.

  வேறு பெயர்களில் பின்னூட்டம் போடும் அவசியம் எனக்கு எப்போதும் இல்லை.

  நீங்கள் கேனையனாக இருப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையும் கிடையாது.

  என்னுடைய தமிழறிவு மிகவும் கேவலமானது என்று எனக்கே தெரியும்.

  அன்புடன்
  ராகவன் தம்பி

  ReplyDelete
 13. oru poyyai maRaikka onbathu poykaL solla veeNdum.

  நீங்கள் கேனையனாக இருப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையும் கிடையாது.

  It is better to remain a kenaiyan than a liar.

  Even without your approval.

  Penneswaraa! Your maturity comes out in how you handle your critics.

  No more from me.

  ReplyDelete
 14. God bless you! Please ignore all.

  ReplyDelete
 15. சினிமா விரும்பிJune 12, 2008 at 3:25 AM

  அன்புள்ள அனானி அவர்களே,
  என் பெயர் ரமேஷ். 'சினிமா விரும்பி' என்ற புனைபெயரில் 2002 ஜூலை முதல் பல இணையத்தளங்களிலும் வலைப் பதிவுகளிலும் எனக்கு ஆர்வமுள்ள சில தலைப்புகளில் மட்டும் நான் என் கருத்துக்களைப் பதிவதுண்டு. zine5.com,tfmpage.com,dhool.com போன்றவை சில உதாரணங்கள். 'வடக்கு வாசல்' இதழிலும் சில முறை என் சிந்தனைகள் வெளிவந்திருக்கின்றன. என் email ID ramesh_vee@cooltoad.com.
  நன்றி
  சினிமா விரும்பி

  ReplyDelete
 16. Dear anani,

  I need prove anything to you. Still Ramesh's mail was received yesterday and due to my laziness, i put this today.

  Is not attrocious to throw some charges and advice me how to receive critics?

  My friends know what i am and i do not need any certificate from you.

  If you know me personally, you should have put your comments in your name.

  Writing some comments on one's own name requires some etiquets.

  Is it that if I put something in public, i have to bear everything?

  Raghavanthambi

  ReplyDelete
 17. While reading d last few comments and counters, I last track of the subject on which it started. Again I came to the home page and found it is :Nam Thai mozhiyum namadu kuzhandaijalum. Started with this subject, all ended with "kenaiyan"remarks. But whatever said and done, can this word "kenaiyan" be expressed in any other language with such an effect! There are some proverbs, jokes, stories, which could not be enjoyed in any other language. So being a child born in a Tamil family, if it is taught the language, it will have the advantage of a language with the taste of nativity. Why we should deprive our children of this advantage.

  It is better to keep d comments going on the subject, rather than deviating from that, so that some useful purpose will be served.

  With love to all,
  S. Ganesan, Dwarka, New Delhi

  ReplyDelete
 18. vanakkam...
  ungal KADDURAI miga arumail..
  VAZHTHUGAL


  m.khathiravan
  mumbai

  ReplyDelete
 19. erana18@yahoo.com

  Anpudan Raakavan Thampikku,

  Ungka'l Kaddurai padiththean. Meatku naaduka'lil u'l'la pulam peyarntha Thamizhar choozhalilum ithea nilaithaan. Thamizhp pa'npaadum, vaazhkkai mu'raika'lum perumaikkuriyathaaka maa'rumvarai innilai thodaraththaan cheyyum.

  Ungka'ludaiya kadduraiyaip padikkumpozhuthu thoanriya e'n'nam ennaven'raal, intha Aiyangkaarka'l eppadi e'n'noo'ru aa'nduka'laaka pulampeyarntha choozhalilum thamizhai veeddukku'l'lea paathukaaththaarka'l enpathuthaan.

  Ennidam thmizh ezhuthuru vasathi illai. Uroama ezhuththukku mannikkavum.


  Ragupathy,

  Oslo, Norway.

  ReplyDelete
 20. அன்பான கணேசன், கதிரவன், ரகுபதி பொன்னம்பலம்,

  உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் உங்களுடைய எண்ணங்களுக்கும் நன்றி.

  அன்புடன்

  ராகவன் தம்பி

  ReplyDelete
 21. சினிமா விரும்பிJune 18, 2008 at 2:23 AM

  திரு எஸ் கணேசன் , துவாரகா அவர்களுக்கு,

  'கேனையன்' என்ற முத்தான (!) தமிழ் வார்த்தைக்கு ஆங்கில மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்பை
  முயன்று பார்த்தேன்! தோல்விதான்!

  'nikammaa' (Hindi) and 'nincompoop' (English) கொஞ்சம் கிட்டத்தட்ட நெருங்கி வருகின்றன!

  அன்புடன்,

  சினிமா விரும்பி
  ____________________________________________________________

  ReplyDelete
 22. //தமிழர்கள் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் என்று வெளியில் காட்டிக்கொள்வதை ஒரு அவமானமாக நினைக்கும் ஒரு மனப்பாங்கை//
  இப்படி ஒரு மனப்பான்மை ஏற்பட காரணம் என்ன?

  ReplyDelete