Saturday, May 19, 2012

மீண்டும் பாரதமணி

கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக பலத்த பொருளாதார நெருக்கடியிலும் எவ்வித சமரசங்களையும்  செய்து கொள்ளாது விடாப்பிடியாக காந்திய நெறிகளைப் போற்றும் கட்டுரைகள் மற்றும் படைப்புக்களைத் தாங்கி வெளிவரும் பாரதமணி இதழ் தேசிய அளவில் நம்முடைய மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமை அளிக்கும் இதழியல் செயல்பாடாகும்.  வெள்ளிவிழா காணும் பாரதமணிக்கும் அதன் ஆசிரியர் பெரியவர் சீனுவாசனுக்கும் எங்கள் தலைவணக்கங்கள்.  பாரதமணி பிப்ரவரி இதழில் ஆசிரியர்  பாரதமணி சீனுவாசன்  அந்த இதழை நிறுத்தப்போவதாக அறிவித்து இருந்தார்.    அந்தச் செய்தி மிகவும் வருத்தம் அளித்தது.  வடக்கு வாசல் இதழில் திரு.சீனுவாசன் அவர்களின் அறிவிப்பு குறித்து பதிவு செய்திருந்தோம்.  காந்தியச் சுவட்டில் வெளிவரும் ஒரு இதழ் நின்றுபோவது பெரும் வருத்தம் அளித்தது.
இப்போது ஒரு நல்ல செய்தி.    பாரதமணி ஏப்ரல் மற்றும் மே இதழ் இன்று அஞ்சலில் வந்தது. பாரதமணி சீனுவாசன் அவர்கள் விடாப்பிடியாக  மீண்டும் புத்துணர்ச்சியுடன் இதழை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.  அவருக்கு உதவி செய்ய அவருடைய மகன் திரு.வெங்கட்ராகவன், திரு.ரவி, பேத்தி செல்வி அர்ச்சனா,ஆகியோர் முன்வந்திருப்பதாலும்  ஆண்டவன் கிருபையால் இனி பாரதமணி இனி தொடரும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.   

இந்த இதழில் வேதாரண்ய சத்தியாக்கிரகம் பற்றி கே.அருணாச்சலம் எழுதிய கட்டுரையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.ர.நல்லசிவம் எழுதிய தேசிய காங்கிரசுக்கு முந்தைய சுதந்திரப்போரட்டங்கள் என்ற குறிப்பும், எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நலனே என்ற பெ.சு.மணி அவர்களின் கட்டுரை அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் பிறந்த நாளையொட்டி ஒரு நெருக்கமான வாழ்த்துரையை வழங்கியிருக்கிறார்.
புத்துணர்ச்சியுடன் வெளிவந்திருக்கும் பாரதமணி இதழுக்கு பெருமளவில் ஆதரவு தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

சந்தா விபரம்

ஆண்டுச்சந்தா - ரூ.100
ஆயுள் சந்தா ரூ.1000

கடிதம்/பணவிடை/காசோலை
“பாரதமணி” என்ற பெயரில் அனுப்பவேண்டிய முகவரி

பாரதமணி
நிர்வாக அலுவலகம்
1,5வது குறுக்குத் தெரு
சர்வமங்களா நகர்
சிட்லபாக்கம்
சென்னை-600064.
தொலைபேசி-22234453
மின்னஞ்சல் bharathamanisrinivasan@gmail.com

No comments:

Post a Comment