அன்பு நண்பர்களுக்கு
வணக்கம்.
இந்த சனிமூலை வலைப்பூவில் இதுவரை நான் பதிவேற்றம் செய்து வந்த கட்டுரைகள் இனி வடக்கு வாசல் இணையதளத்தில் 
(http://www.vadakkuvaasal.com)  மேளதாங்களுடன் இனிதே தொடரும்.
இந்த http://www.sanimoolai.blogspot.com வலைப்பூவில் பல சமயங்களில் மாதக்கணக்கில் நான் மௌனமாக இருந்தது உண்டு.  தொடர்ச்சியாக எழுதாததினால் நிறைய வாசகர்களை இழக்க நேரிட்டது.  ஆனாலும் எப்போதாவது எதையாவது எழுதும்போது நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பி வதைத்து வந்தேன்.  
இனி சனிமூலை வலைப்பூவில் எழுதப் போவதை ஒரு நாள் விட்டு (என்ன நடந்தாலும்) வடக்கு வாசல் இணையதளத்தில் (
http://www.vadakkuvaasal.com) தொடர்ச்சியாக எழுதுவது என்று தீர்மானித்து இருக்கிறேன்.   நிகழ்ச்சிகள், செய்தி விமர்சனங்கள், மதிப்புரைகள் என என்னுடைய மனப்பதிவுகளை வடக்கு வாசல் இணையதளத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் தொடரும் எண்ணம் இருக்கிறது. பார்ப்போம்.  எதுவரை போகிறது என்று.
இனி வடக்கு வாசல் இணைய தளத்தில் (
http://www.vadakkuvaasal.com) மாத இறுதியில் அந்தந்த மாதத்தின் வடக்கு வாசல் மாத இதழை பதிவேற்றம் செய்வோம்.  அந்த வலைத்தளத்தில் விட்டு ஒருநாள் நான் எழுதும் பதிவுகள் 
ராகவன் தம்பி பக்கங்கள் என்ற பெயரில் இனி தொடர்ச்சியாக வெளிவரும்.
இது தவிர 
தலைவாசல் என்னும் பகுதியில் உலகெங்கும் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திரைப்பட விழாக்கள், புத்தக விழாக்கள் போன்ற நிகழ்வுகள் குறித்த பதிவுகளை புகைப்படங்களுடன் எங்களுக்கு அனுப்பி வைத்தால் மிக்க மகிழ்ச்சியுடன் அவற்றை வடக்கு வாசல் இணையதளத்தின் தலைவாசல் பகுதியில் பதிவேற்றம் செய்வோம்.  ஒவ்வொரு வாரமும் இந்தப் பகுதி புதுப்பிக்கப்படும்.  இரண்டு மாதங்களுக்கு இவற்றை எங்கள் ஆவணப்பகுதியில் வைத்திருப்பாம்.
எனவே நண்பர்களுக்கு இங்கே இரு வேண்டுகோள்களை சமர்ப்பிக்கின்றேன்.
ஒன்று, வடக்கு வாசல் இணைய தளத்துக்கு நீங்கள் வருகை புரிந்தால் என்னுடைய பதிவுகளை ராகவன் தம்பி பக்கங்கள் என்னும் பெயரில் அங்கே தினமும் வாசிக்கலாம்.
இரண்டு, உங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்த பதிவுகளை புகைப்படங்களுடன் அனுப்பி வைத்தால் நாங்கள் தலைவாசல் பகுதியில் வெளியிட்டு அதனைப்  பல நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.  எனவே உங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்து 
vadakkuvaasal@gmail.com என்னும் முகவரிக்கு மின்மடல் வழியாகவோ, அஞ்சல் வழியாவோ தொலைநகல் எண் 011/25815476 வழியாகவோ அனுப்பி வையுங்கள்.
இனி நாளை முதல் http://www.vadakkuvaasal.com வலைத்தளத்தில் சந்திப்போம்.
கண்டிப்பாக வாருங்கள்.
ஓரிரு முறை மின்மடல் வழியாகவும் உங்களுக்குத் தகவல் அனுப்புகிறேன்.  தயவு செய்து கோபப்படாதீர்கள்.
உங்கள் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் ஊக்கமும் என்றும் எனக்கு வேண்டும்.
மிக்க அன்புடன்
ராகவன்தம்பி01 மே 2009