Sunday, January 9, 2011

மனசில் பதிஞ்ச இன்னொரு காலடிச் சுவடு...

கடந்த பத்தாண்டுகளில் இணையம் அளிக்கும் சௌகரியங்களை, சௌஜன்யங்களை அராஜகமான வகையில் பயன்படுத்தி தமிழ் இதழ்களிலும் இணையத்திலும் எழுதப்படும் ஆரவாரமான, வெளிப்பூச்சான பொய்மையான எழுத்துக்கள் பெரும் சலிப்பும் ஒவ்வாமையும் அளிக்கத் துவங்கியுள்ளன. திடீர் பிள்ளையார்கள் போல, திடீர் தத்துவவாதிகளும், திடீர் மாய்மாலக்கார அறிவு ஜீவிகளும் திடீர் சினிமா வல்லுநர்களும் திடீர் நாடகப் பிதாமகர்களும் வலைப்பின்னல்களில் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறார்கள்.

சில ஜாம்பவான்கள் மாய்மாலங்களுடனும் தந்திரங்களுடனும் பொய்மையுடனும் கபடத்தனமான எண்ணங்களுடனும் அறிவுலகத்தை ஆக்கிரமிக்க முயற்சித்து ஓரளவு தற்காலிகமான வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தங்களுக்குத் தாங்களே இணையத்தில் கடிதங்கள் எழுதிக் கொண்டு தங்களைத் தாங்களே வெற்று ஆரவாரத்துடன் சிலாகித்துக் கொண்டு தங்களைத் தாங்களே கேள்விகள் கேட்டுக் கொண்டு தங்களுக்குத் தாங்களே மர்மமான இடங்களில் சொறிந்து கொடுத்துக் கொண்டுக்கிறவர்களின் ஜனத்தொகை தமிழில் அதிகரித்து வருகிறது.
உண்மையான, நேரடியான வாசிப்புத் திறன் ஏதுமற்று, வெற்றுப் பெயர்களை மட்டுமே உதிர்த்து அடுத்தவர்களின் உடுப்பைக் களைந்து எறிய முயற்சித்து தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு இணையத் திணைகளில் நிர்வாணமாக அலைகின்ற கூட்டமும் அதிகரித்து வருகின்றதை கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.

மேலும் வாசிக்க...

No comments:

Post a Comment