இந்தப் பக்கங்களில் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. தனி இணையதளத்துக்குப் புதுக்குடித்தனம் போனதால் இந்த வீடு நீண்ட காலமாகப் பூட்டிக் கிடந்தது.
இப்போது அந்த வீட்டை யாரோ சில பங்களாதேஷ் விஷமிகள் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார்கள். திங்கட்கிழமை என்னுடைய வலைத்தளத்தை திறந்தபோது தொடர்பே இல்லாமல் என்னென்னவோ வந்தது. சில படங்களில் கெட்ட காரியங்களும் இருந்தன- அடி வயிறு கலங்கி விட்டது.
Thursday, February 16, 2012
Sunday, January 9, 2011
மனசில் பதிஞ்ச இன்னொரு காலடிச் சுவடு...
மனசில் பதிஞ்ச இன்னொரு காலடிச் சுவடு...
கடந்த பத்தாண்டுகளில் இணையம் அளிக்கும் சௌகரியங்களை, சௌஜன்யங்களை அராஜகமான வகையில் பயன்படுத்தி தமிழ் இதழ்களிலும் இணையத்திலும் எழுதப்படும் ஆரவாரமான, வெளிப்பூச்சான பொய்மையான எழுத்துக்கள் பெரும் சலிப்பும் ஒவ்வாமையும் அளிக்கத் துவங்கியுள்ளன. திடீர் பிள்ளையார்கள் போல, திடீர் தத்துவவாதிகளும், திடீர் மாய்மாலக்கார அறிவு ஜீவிகளும் திடீர் சினிமா வல்லுநர்களும் திடீர் நாடகப் பிதாமகர்களும் வலைப்பின்னல்களில் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருக்கிறார்கள்.
சில ஜாம்பவான்கள் மாய்மாலங்களுடனும் தந்திரங்களுடனும் பொய்மையுடனும் கபடத்தனமான எண்ணங்களுடனும் அறிவுலகத்தை ஆக்கிரமிக்க முயற்சித்து ஓரளவு தற்காலிகமான வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தங்களுக்குத் தாங்களே இணையத்தில் கடிதங்கள் எழுதிக் கொண்டு தங்களைத் தாங்களே வெற்று ஆரவாரத்துடன் சிலாகித்துக் கொண்டு தங்களைத் தாங்களே கேள்விகள் கேட்டுக் கொண்டு தங்களுக்குத் தாங்களே மர்மமான இடங்களில் சொறிந்து கொடுத்துக் கொண்டுக்கிறவர்களின் ஜனத்தொகை தமிழில் அதிகரித்து வருகிறது.

Subscribe to:
Posts (Atom)