“சௌத்ரி... ஓ சௌத்ரி... கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்”
கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார்.
“உஷ்... உஷ்”...
கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார்.
“உஷ்... உஷ்”...
“எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கே?”
“எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு”
“மரியாதையா சும்மா உட்காரு. இல்லேன்னா...”
“இனிமேலும் என்னால உட்கார முடியாது. இங்கே பாரு. உக்காந்து உக்காந்து முதுகெல்லாம் பலகை மாதிரி ஆகிப்போச்சு. ஹே ராம்”
“ச்சு... ச்சு...
“எனக்கு அப்படியே உடம்பெல்லாம் நடுக்கமா இருக்கு”
சௌத்ரி ஒன்றும் சொல்லவில்லை.

