Friday, November 9, 2007

நந்திகிராமில் மார்க்சிஸ்டுகளின் ஊழிநடனம்

கொல்கத்தாவில் பணிபுரிந்து விட்டு தில்லிக்கு மாற்றலாகி வரும் நண்பர்கள் பலரும் அங்கு பெரும்பான்மையாக உள்ள மார்க்சிஸ்டு கட்சித் தொண்டர்களின் வீரபராக்கிரமங்களைப் பற்றிக் கதைகதையாகச் சொல்வார்கள்.

தசரா நாட்களில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் - மிரட்டல், பணம் பிடுங்குதல் போன்ற காரியங்களில் எப்படி ஈடுபடுவார்கள், அரசியல் எதிரிகளை எப்படி நடத்துவார்கள் போன்ற விஷயங்களை ஒரு மர்மநாவலின் சுவாரசியம் குறையாமல் சொல்லுவார்கள்.



மார்க்சிஸ்டு கட்சியின் தலைவர்கள்தான் முகங்களை மிகவும் தீவிரமாக வைத்துக்கொண்டு உலக அரசியலை மிகவும் மென்மையான குரலில் பேசுவார்கள். காங்கிரஸ் கட்சியுடன் ஒருசில பேரங்களுக்காக அவர்கள் அடிக்கும் அந்தர் பல்டிகளையும் மிகவும் மென்மையாகத்தான் அடிப்பார்கள். ஆனால் அவர்களுடைய தொண்டர்களோ நம்மூர் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் அவற்றின் தோழமைக்கட்சிகளின் அணுக்கத் தொண்டர்களின் வன்முறைக்கு எந்த அளவிலும் குறையாது மாற்றுக் கருத்து உடையவர்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்று நண்பர்கள் சொல்வார்கள்.


இப்போது மேற்கு வங்காளத்தின் அந்தக் கொள்கை சிங்கங்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் வீரபராக்கிரமத்தைக் காட்டி இருக்கிறார்கள். நேற்று மேதா பட்கர் இரண்டு கார்களில் தங்கள் இயக்கத் தோழர்களுடன் நந்திகிராம் போயிருக்கிறார். நந்திகிராமில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேதாவை அவருடைய இயக்கத்தினர் சிலர் அங்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களுடைய அழைப்பின் பேரில் நந்திகிராம் பகுதியின் கபேúஸபேரியா என்னுமிடத்தில் அவர் உள்ளே நுழையும்போதே சிபிஎம் கட்சிக் கொடிகளை ஏந்திய தொண்டர்கள்(?) ஆக்ரோஷமாக வண்டிகளின் மீது கல்லெறிந்து தாக்குதலைத் தொடங்கியிருக்கிறார்கள். வண்டிகளை நிறுத்தி மேதா பட்கர் மற்றும் உடன் இருந்தவர்கள் வெளியே இழுத்துப்போட்டு முகத்தில் குத்தி மிகவும் வன்முறையுடன் தாக்கியிருக்கிறார்கள். மேதா பட்கரின் தலைமுடியைப் பற்றி இழுத்துக் கீழே தள்ளி அவர் முகத்தில் குத்தித் தாக்கியிருக்கிறார்கள். மேதா பட்கர் உள்ளே நுழையக்கூடாது என்று மிகவும் ஆவேசத்துடன் கூச்சல் இட்டு எல்லோரையும் தாக்கியுள்ளது அந்த வன்முறைக் கும்பல். ஓரு கார் மிகவும் மோசமாக அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மேதா குழுவினருடன் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் மிகவும் சமர்த்தாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருக்கின்றனர்.திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பூமி உச்சேத் பிரதிரோத் கமிட்டியின் இயக்கத்துக்கு எதிராகத் துவங்கிய சிபிஎம் கட்சியின் வன்முறைத் தாக்குதல்களால் இருபுறமும் வெடித்த வன்முறையில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து இதுவரை நான்கு அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். வன்முறை அங்கு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அங்கு நிகழ்ந்த வன்முறைகளைப் பார்த்து சிபிஎம் தலைவர் ஜோதி பாசுவே இப்போது தன் குரலை மாற்றிக்கொண்டு பேசத்துவங்கியிருக்கிறார். மைய அரசு காவல் படையை அனுப்புவதை சற்று ஒத்திவைத்து திரிணமூல் காங்கிரசின் தலைவி மம்தா பேனர்ஜியுடன் பேச்சுவார்த்தைகளைத் துவங்கி ஒரு தீர்வைக் காண முயற்சிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்".

மேற்கு வங்கத்தின் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் சிறப்பான முயற்சிகளையும் கடந்து, நந்திகிராமில் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறப்பட்டிருக்கிறது'' என்று மேதா பட்கர் கொல்கத்தாவில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் ஆவேசப்பட்டு இருக்கிறார்.

இந்தியா முழுக்க வேறு மாதிரியான முகங்களைக் காட்டும் மார்க்சிஸ்டு கட்சியினர் அங்கு வேறுவகையான ஒரு கோரமுகத்தைக் காட்டுகிறார்கள் என்றால் அங்குள்ள காவல்துறையினரும் அவர்களுடைய அக்கிரமமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று குமுறுகிறர்கள் அங்கு செல்லும் மனித உரிமை இயக்கத் தொண்டர்கள். மாற்றுக் கருத்து உடையவர்களை குண்டாந்தடி கொண்டு துரத்தியடிக்கிறார்கள் அங்குள்ள குண்டர்கள். மைய அரசு உடடினடியாகத் தலையிட்டு அங்கு முற்றுகையிட்டுள்ள சிபிஎம் கட்சிக்காரர்களை அகற்ற வேண்டும். சிபிஎம் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரும் சேர்ந்து கொண்டு நந்திகிராம் பகுதி முழுவதையும் தங்கள் ஆளுமைக்குள் வைத்திருப்பதாக ஊடகங்களிலும் இதழ்களிலும் பல தொண்டர்கள் குமுறியிருக்கிறார்கள்.

இவர்களின் நியாயமான குமுறல்கள் கேட்கப்படவேண்டும்.மற்ற விஷயங்களில் வாய் கிழிய ஊர் நியாயம் பேசும் பிரகாஷ் காரத் போன்றவர்களும் இந்த விஷயத்தில் தங்களுடைய திருவாயைத் திறந்து மேற்கு வங்காளத்தின் மார்க்சிஸ்டுகளுக்கு அறிவுரை சொல்லவேண்டும். மாநில அரசைய வற்புறுத்த வேண்டும்.

நந்திகிராமில் நடக்கும் ஊழி நடனத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

6 comments:

  1. அருமையான கட்டுரை. காம்ரேடுகள் தங்கள் நிஜமான முகங்களை மே வங்கத்தில் காட்டுகிறார்கள். கராத்ஸும், யெச்சூரிகளும் போடும் மென்மை வேடம் எல்லாம் போலி என்பதும் ஸ்டாலின் லெனின் பாணி கம்னியுசம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கும் நந்திகிராம் சாட்சி. இவர்களை வளர விட்டால் இந்தியா முழுக்க தங்கள் ஆதர்ச நாயகனான ஸ்டாலின் ஆட்சியை ந்ந்திகிராம் பாணியில் நடத்திக் காட்டுவார்ர்கள். உண்மையை உரக்கச் சொல்ல முன் வந்த நீங்கள் வாழ்க, தமிழ் இணையத்துக்க்கு உங்கள் வரவு நல்வரவாகுக

    அன்புடன்
    ச.திருமலை

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி, திருமலை அவர்களே.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  3. politics and politics

    ReplyDelete
  4. KP, Your Muthu from Madurai. The CPIM has abandoned the Nandhigram project well early this year. Then why somuch of incidents. Violence has two faces one is violence and the other is counter vioence. Anyway no vioence can be a solution to any problem. One thing is sure. Mamta cannot allow WB CPIM to have a peaceful sleep. That is what happening.

    ReplyDelete
  5. வருகைக்கும் பதிவுக்கும் நன்றி, அனானி அவர்களே.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  6. வருகைக்கும் பதிவுக்கும் நன்றி, முத்து.

    ரொம்ப நாள் கழித்து இந்த வலைப்பூவில் சந்தித்தாலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

    //The CPIM has abandoned the Nandhigram project well early this year. Then why somuch of incidents. Violence has two faces one is violence and the other is counter vioence.\\

    இது கொஞ்சம் அதிகமாக இல்லையா?

    சிபிஎம் தோழர்கள் வங்காளத்தில் இங்கு தமிழகத்தில் செயல்படும் அரசியல் குண்டர்களுக்கு எந்தவகையிலும் குறையாமல் அசாத்வீக முறைகளைக் கையாளுவதை எப்போதும் கேள்விப்பட்டதே இல்லையா?

    ராகவன் தம்பி


    அன்புடன்

    ராகவன் தம்பி

    ReplyDelete