Saturday, July 21, 2007

அன்புமணி ராமதாசுக்கு வாழ்த்துக்கள்...

உப தலைப்பு - நான் ஆணையிட்டால்.... அது நடந்து விட்டால்...

ராகவன் தம்பி


மைய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு நேற்று உலக சுகாதார மையத்தின் ""புகையிலைக் கட்டுப்பாடு-2007'' விருது புது தில்லியில் வழங்கப்பட்டிருக்கிறது.
2003ம் ஆண்டில் Cigarettes and Other Tobacco Products (Prohibition of Advertisement and Regulation of Trade and Commerce, Production, Supply and Distribution) Act 2003 என்னும் சட்டத்தின் வழியாக பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்ய வழிவகை செய்தும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் புகைபிடிக்கும் காட்சிகளைத் தடைசெய்ததிலும் மேலதிகப் பங்கு வகித்ததைப் பாராட்டும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.


புகையிலைக்கு எதிரான நடவடிக்கைககள் மற்றும் மதுவிலக்கு சார்ந்த நடவடிக்கைகள் என அவர் சார்ந்த கட்சி தீவிரமாக இருப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்குப் பிறகு (நான் சொல்வது காந்தி காலத்து, ராஜாஜி, காமராஜ் காலத்துக் காங்கிரஸ். இப்போதைக்கு உள்ள சோனியா காந்தி கார்ப்பொரேட் லிமிடெட் என்று தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம்) இந்த விஷயங்களில் ஒரு அரசியல் கட்சி இவ்வளவு தீவிரம் காட்டுவது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் விஷயம் தான்.


அன்புமணி ராமதாஸ் அமைச்சரானதும் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடை செய்தது, சிகரெட் விளம்பரங்களைத் தடை செய்தது, தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் புகைபிடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை விதித்தது போன்ற மிகவும் நல்ல காரியங்கள் நடக்க முன்னோடியாக இருந்து வருகிறார்.


பொதுவாகவே, உலக அரசியல் அரங்கில் இது போன்ற, புகையிலை, மது போன்ற லாகிரி வஸ்துக்களை தடை செய்வது அல்லது அவற்றை மீண்டும் அனுமதிப்பது போன்ற விஷயங்களில் எப்போதும் பணம் விளையாடும் என்று சொல்வார்கள். ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வார்கள்.


இது போன்ற விஷயங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. நம் கண் முன்னால் தெரிவதெல்லாம் அன்புமணி ராமதாஸ் போன்ற இளையதலைமுறை அமைச்சர்கள் எடுக்கும் நடவடிக்கைகளின் விளைவாக நடக்கும் நல்லவைகள் மட்டுமே.


இந்த விருதுக்கு முற்றிலும் தகுதி பெற்றவர் ஆகிறார் அன்புமணி. விருது பெற்றதும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளின்போது அவர் சொன்னவை மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களாக இருக்கின்றன.


இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் உணவகங்கள், விமான நிலையங்கள் போன்ற பணியிடங்களில் புகை பிடிப்பது அறவே தடை செய்யப்படும் என்றும், வீடுகளில் புகைபிடிப்பதைக் கூடத் தடை செய்யும் சட்டங்கள் கொண்டு வரலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீதான தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்.


இந்திய மக்களுக்கு, குறிப்பாக புகையிலை பாவித்ததினால் அகால மரணமடைந்த இளம் தலைமுறையினருக்கு இந்த விருதினை தான் சமர்ப்பணம் செய்வதாக அவர் அறிவித்திருப்பது மிகவும் அற்புதமான விஷயம்.


அன்புமணி ராமதாசுக்கு என்னைப்போன்ற முன்னாள் புகைபோக்கிகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எனக்கு சக்தி இருந்தால், எனக்கு பலம் இருந்தால், எனக்கு யோக்கியதை இருந்தால், என்னிடம் பணம் இருந்தால், என்னிடம் ஆள் பலம் இருந்தால், என்னிடம் அரசாங்கம் இருந்தால் அன்புமணி ராமதாசுக்கும் அவருடைய கட்சித் தலைவருக்கும் நான் தனியாக இன்னும் ஒரு விருது கொடுத்து இருப்பேன்.


அது என்னவென்றால், மாவீரன், தன்மானத் தலைவன், தமிழனப் புயல் ரஜினிகாந்த் போன்ற அதிருகின்ற புயல்களையெல்லாம் சிகரெட்டை உள்ளே சுருட்டி வைக்கச் செய்து வெறும் பப்பிள் கம்மைத் தூக்கிப் போட்டுப் பிடிக்க வைத்த பெருமை அன்புமணிக்கும் அவருடைய கட்சித் தலைவருக்கும் தான் உண்மையிலேயே சேரும்.


இதற்காகவே தமிழர்கள் இவர்களுக்குத் தனியாக ஒரு விருது வழங்க வேண்டும்.


வாழ்த்துக்கள்.

5 comments:

 1. Very good. Really apprecited.

  ReplyDelete
 2. Good things are always appreciated ,
  the person doing good deeds and one who is writing about it.

  ReplyDelete
 3. article on shekawat and anbumani refers. i agree with the views on anbumani. particularly, the pmk has compelled rajinikanth to stop his style with cigar. shekawat - the whole nation - knows about the fate of the election. so "parattu konjan thaasthithan"

  ReplyDelete
 4. அன்பு பீட்டர் - ஜகா - சுரேஷ்,

  வருகைக்கும் பதிவுக்கும் பாராட்டுக்கும் சுட்டிக் காட்டலுக்கும் என்றும் நன்றி.

  ராகவன் தம்பி

  ReplyDelete
 5. சமீபத்திய தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் மாற்றமில்லை என்றாலும் பல காட்சிகளில் மாற்றம் வருமோ என்ன்வோ தெரியாது. பொது இடத்தில் புகைப்பதற்கான தடை தொடரும் என நம்புவோம். இதுகுறித்த எனது பதிவு: http://tamilamudam.blogspot.com/2008/10/blog-post_20.html

  ReplyDelete