சாரு  நிவேதிதா என்ற முது பெரும் எழுத்தாளர் , தனது பதிவுகளில் கண்டதை  உளறிக்கொண்டும் தன்னைத் தானே புகழ்ந்து  எழுதிக்கொண்டும் சக  எழுத்தாளர்களின் மீது விழுந்து பிடுங்கிக்கொண்டும் இருக்கிறார். சமீபத்தில்  பாமினி என்ற பெண்(?!) சாருவின் ஆங்கிலப் புலமை மீது 'கவலையுற்று' எழுப்பிய  கேள்விக்கு தனது 'மொழியில்' பதில் சொல்லி இருக்கிறார்.  அந்தப் பெண்  வாசகியின் கேள்விக்கு  சாருவின் வார்த்தைப் பிரயோகங்கள் வரலாற்று  முக்கியத்துவம் பெற்றவை. இடையில் என்னவோ புதைபொருள் ஆராய்ச்சியாளர்  கணக்குக்கு ஒரு 'எலக்கிய ஆய்வுக்கு' எழுபதாயிரம் செலவானதாக ஒரு புருடா  வேறு.  தமிழில் சமீப காலமாக உலவும் இப்படிப் பட்ட ஒரு போக்கு குறித்து  உங்கள் கருத்து என்ன?
சந்திரமோகன் வெற்றிவேல்
புது டெல்லி
 chandrabuwan@gmail.com 
அன்புள்ள சந்திரமோகன்
உங்கள் பல கேள்விகளுக்கு நீங்களே விடையும் தந்திருக்கிறீர்கள்.
நீங்கள்  சொல்லும் அந்தச் சரித்திரப் புகழ் பெற்ற பதிவினை நானும் படித்தேன்.  சாரு  நிவேதிதாவை ரவியாகவும் அறிவழகனாகவும் நானும் என்னுடைய டெல்லி நண்பர்களும்  அறிவோம்.  அடிப்படையில் மிகவும் மிருதுவானவர் சாரு.    சற்று பயந்த  சுபாவம்  உண்டு அவருக்கு.  நேருக்கு நேராக யாராவது அவரிடம் மோதினால்  பதுங்கி நழுவுவதை நாங்கள் நிறைய பார்த்து இருக்கிறோம்.  அவர் பறைசாற்றிக்  கொள்ளும் உலக ஞானங்கள் பற்றிய ஆச்சரியம் அவருடைய பதிவுகளைப் படிக்கும்  பலரைப் போலவே எங்களுக்கும் உண்டு.  ஏறத்தாழ ஒரு மனநோயாளியின் மனநிலையில்  இருப்பது போல வேண்டுமென்றே அவர் எழுதுகிறார் என்பது அவருக்கும் நன்றாகத்  தெரியும்.  இந்த வேஷத்தை அவர் விரும்பி அணிந்து கொள்கிறார் என்பது அவருடைய  வாசர்கள் மற்றும் நண்பர்களைப் போலவே அவருக்கும் நன்கு தெரியும். 
அதனால் உங்களுக்கோ எனக்கோ வேறு யாருக்கோ இதில் எவ்விதமான ஆட்சேபணையும் ஆச்சரியமும் இருக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறேன்.
 
 
No comments:
Post a Comment