
பிகார்   மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல்கள் அக்டோபர் 21-ம் தேதி தொடங்கி நவம்பர்  20  வரை ஆறு கட்டங்களாக நடைபெற உள்ளது. 243 தொகுதிகளின் 56,493 வாக்குச்   சாவடிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை 5,50,88,402   வாக்காளர்கள் நிர்ணயிக்கப் போகிறார்கள். 
இந்தியாவில்  வறட்சி மற்றும் வறுமை  மிகுந்த மாநிலமாக எப்போதும் அடையாளம் காணப்படுவது  பிகார். அடிப்படைக்  கல்வி, தொழிற்கல்வி, மருத்துவ வசதிகள் போன்றவற்றில்  மிகவும் பின்தங்கிய  மாநிலம் இது. எது எப்படி இருந்தாலும் தேசிய அளவில்  ஐஏஎஸ் மற்றும் ஐஐடி  தேர்வுகளில் பிகார் மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும்  பலமுறை முதலிடம்  பெற்று வருகிறார்கள். இந்த நாட்டின் மென்பொருள் துறை  வளர்ச்சியில் பிகார்  மாநிலத்தின் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு மிகவும்  பெருமைக்குரிய ஒன்று.  அதே போல, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில்  தச்சுவேலை, கட்டட வேலை,  தையல் வேலை, வாகனங்கள் பழுதுபார்த்தல் போன்ற  அடிப்படையான, மிகவும்  முக்கியமான வேலைகளில் மிகவும் திறமையுடன் பல  ஆண்டுகளாகத் தொடர்ந்து  சிறப்புடன் செயல்பட்டு வருகிறவர்கள் பிகார்  மாநிலத்தைச் சேர்ந்த  முஸ்லிம்கள். எண்பதுகளில் டெல்லியில் உள்துறை  அமைச்சகத்தில் நான் பணியில்  சேர்ந்தபோது அரசுத் துறையின் பல மேலதிகாரிகள்  பிகார் மாநிலத்தைச்  சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
 
 
No comments:
Post a Comment