Thursday, June 14, 2007

தலித் எழுச்சியின் முதல் தடம் - அயோத்திதாச பண்டிதர்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
18-11-2006

அனைவருக்கும் வணக்கம்.

தடம் பதித்த தமிழர்கள் சொற்பொழிவுத் தொடரில் பங்கேற்க வந்திருக்கும் வந்திருக்கும் உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள். சில நாட்கள் இடைவெளிக்குப்பின் கடந்த மூன்று மாதங்களாக இந்தத் தொடருக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கும் தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு என் நன்றி.

தகவல் தொடர்பு ஊடகங்களின் அசுரப் பெருக்கத்திலும் பல நேரங்களில் இதுபோன்ற கட்டுரைகளுக்குத் தேவையான நு¡ல்கள் அல்லது தகவல்களைத் திரட்டுவது என்பது மிகக் கடினமாக காரியமாக அமைந்து விடுகிறது. பல நேரங்களில் வலைத்தளங்களும் மிகக் குறைந்த அளவிலேயே தகவல்களை நமக்குத் தருகின்றன. அல்லது ஒரு சிறிய தகவல் மட்டுமே பல தளங்களில் பரவலாக நமக்குக் கிடைக்கும். அயோத்திதாசர் குறித்த இந்த உரையை எழுத முனைந்தபோது இந்தப் பிரச்னை மிகவும் பூதாகாரமாக முன்வந்தது. ஒரு தீவிரமான ய்வுக்கட்டுரை என்றில்லாமல் பரவலான தளத்தில் அறிமுகப்படுத்துதலை மட்டுமே இங்கு பிரதான நோக்கமாக வகுத்துக் கொண்டு இருந்தாலும் அதற்கும் தேவையான நு¡ல்கள், அதுவும் அயோத்திதாசரைப் பற்றிய நேரடி நு¡ல்கள் மிகக் குறைவாகவே கிடைத்தன. மிகவும் முக்கியமான நு¡லான அயோத்திதாசர் சிந்தனைகள் மிகவும் தாமதமாகக் கிடைத்தது. இந்த நு¡ல் தொகுதியை வெங்கடேஸ்வரா கல்லு¡ரியின் நு¡லகத்திலிருந்து எனக்காக ஏற்பாடு செய்த அருமை நண்பர் க.திருநாவுக்கரசு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ய்வு மாணவரான இவர் நவீன கலை இலக்கியங்களிலும் பொதுவுடைமைக் கொள்கைகளிலும் தீவிர ஈடுபாடு உடையவர். வடக்கு வாசலில் நல்ல நு¡ல் மதிப்புரைகளை எழுதி வருகிறார். திருநாவுக்கரசுவுக்கு என் நன்றி.

சித்த வைத்திய சிம்ஹம் என்ற பட்டப்பெயர் கொண்ட அயோத்திதாசர் குறித்த இந்தக் கூட்டத்துக்குத் தலைநகரின் முன்னணி சித்த மருத்துவர் குமார் அவர்கள் தலைமையேற்பது எனக்குக் கிடைத்த இன்னொரு பாக்கியம். அயோத்திதாசர் பற்றிய பரவலான அறிமுகம் உள்ளவர் டாக்டர் குமார். தில்லித் தமிழ்க் கல்விக் கழகம். தில்லித் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புக்களின் செயல்பாடுகளில் ழமான பற்றும் ஈடுபாடும் உடையவர். அவருக்கு என் நன்றி.

என்னுடைய இந்த உரையில் கலந்து கொள்ள என்னுடைய நண்பர் கருப்பையா பாரதி அவர்களை நீண்ட நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்தேன். அவருடன் பல நாட்கள் அயோத்தி தாசர் பற்றியும் திராவிட அரசியல் பற்றியும் நீண்ட நேரங்கள் பல கருத்துக்களைப் பறிமாறிக்கொள்வது உண்டு. அவசமாக சில அரசியல் பணி நிமித்தம் அவர் வெளியூர் போக நேர்ந்ததால் இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஒரு வாழ்த்துச் செய்தியினை அனுப்பியிருக்கிறார். என் மேல் அன்பும் என் செயல்பாடுகளின் மேல் நம்பிக்கையும் கொண்ட என் அன்பு நண்பர் கருப்பையா பாரதிக்கு நன்றி.

சனிக்கிழமை அயோத்தி தாசருக்காக படையப்பாவைத் தியாகம் செய்து வந்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

இனி அயோத்தி தாசருடன் நாம்.

தொண்டை மண்டல வல்ல காளத்தி தெய்வப்புலமை. வைத்திய சிம்ஹம். சங்கை கவிராஜ பண்டிட் க.அயோத்தி தாஸ தம்ம நாயகர் - ஸ்ரீலஸ்ரீ அயோத்தி தாச பண்டிதர் வாழ்ந்த காலம் 1845 லிருந்து 1914 வரை.

நீலகிரியை சோந்த அயோத்தி தாசர் பிறப்பால் ஒரு தலித். தி திராவிட வகுப்பை சேர்ந்தவர். தமிழகத்தின் அரசியல் அரசியல் சரித்திரத்தில் மிக நீண்ட காலம், அதாவது சுமார் எண்பது ண்டுகளுக்கு மேலாக இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு மாபெரும் மனிதர் அயோத்திதாசர் என்று சொன்னால் அது மிகையான வார்த்தையாக இருக்காது. தமிழ்ச் சூழலில் இவை போன்ற காரியஙகள் துரதிருஷ்டவசமாக அதிர்ச்சி தரும் காரியமாக அமைவதில்லை. சமத்துவம். பகுத்தறிவு. நவீனத்துவம் முதலான கொள்கைப் போக்குகளில் தமிழக அளவில் பெரியாருக்கும் தேசிய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கியவர் அயோத்தி தாசர். இலக்கிய சமூக சமய வரலாற்று ய்வுகளின் அடிப்படையில் புதிய சமுதாயம் படைக்கும் பணியில் தம்மை முழுதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர். தி திராவிடர்களை அரசியல் பேசவைத்தவர். ஏற்கனவே சொன்னதுபோல, சுமார் ஒரு எண்பது ண்டு காலம் பகுத்தறிவுச் செம்மல்கள், சமூகநீதிப் போராளிகளான திராவிட இயக்க மாமன்னர்களின் பார்வையில் கூட அவர்கள் தங்களுடையதாக எடுத்தாளும் பல கருத்தாக்கங்களின் முன்னோடியான அயோத்தி தாசர் அகப்படும் பாக்கியம் செய்திருக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமான விஷயம். இதற்கான காரணங்களை வரலாறு என்றாவது ஒரு நாள் இவர்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் முன் எடுத்து வைக்கும். இதுவும் நம் தமிழ் சமூகத்துக்குப் பழக்கப் பட்ட ஒரு விஷயம்தான்.

சமூக நீரோட்டத்தில் கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றில் தி திராவிடர்கள் அக்காலத்தில் மிக அருமையானதொரு பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். னால் மிகவும் துரதிருஷ்டவசமாக 1860லிருந்து 1910 வரை சுமார் 50 ண்டுகள் தி திராவிடர்களால் படைக்கப்பட்ட இந்த கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் எங்கும் கிடைக்காமல் போனதால் அவர்களது வரலாற்றையும் அயோத்தி தாசர் போன்ற கிருதிகளின் வரலாற்றையும் விரிவாகத் தெரிந்து கொள்ள அரிதாகிப்போனது. அயோத்தி தாசர் பரவலாக தலித்துகள் இடையிலும் பேசப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

தி திராவிடன். மகாவிகடது¡தன். பூலோக வியாசன். பறையன். தி திராவிட மித்திரன் போன்ற பத்திரிகைகள் அக்காலகட்டத்திய தலித்துகளால் கொண்டுவரப்பட்டவை. இந்தப் பத்திரிகைகள் எதுவும் பின்னாளில் ய்வாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இவை கிடைத்திருந்தால் அக்காலத்திய தி திராவிடர்களின் போராட்டங்கள் மற்றும் அயோத்தி தாசரைப் பற்றிய முழு விபரங்கள் கிடைத்திருக்கும்.

இந்நிலையில் அயோத்திதாசரை இருபதாம் நு¡ற்றாண்டின் இறுதியில் கண்டெடுத்த பெருமை - இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் தலித்துக்கள் இடையே அயோத்தி தாசரை மறுபிறப்பு எடுக்க வைத்த பெருமை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ய்வு மாணவராக இருந்த தோழர் ஞான.அலாய்சியஸை சேரவேண்டும். அயோத்திதாசரின் எழுத்துப் பணிகளுக்கு சாகாவரம் அளித்து இருக்கிறார் அலாய்சியஸ் என்று சொன்னால் மிகையாகாது. அயோத்தி தாசரைப் பற்றி நமக்கு மிக அதிக அளவில் கிடைக்கும் பதிவுகள் என்பவை அவர் 1907 லிருந்து 1914 அதாவது அவருடைய இறப்பு வரை சிரியராக இருந்து வெளியிட்ட ஓரணாத் தமிழன் என்னும் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் வாயிலாகத்தான். அயோத்தி தாசரின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் க.அ.பட்டாபிராமன் 1922 வரை தமிழன் இதழ்களை நடத்தியிருக்கிறார்.

மிகுந்த சிரமத்தின் பேரில் இக்கட்டுரைகளை ஓரிடத்தில் தொகுத்து அயோத்தி தாசர் சிந்தனைகள் என்னும் தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிட்ட அரும்பணியை செய்தவர் ஞான அலாய்சியஸ். இவருடைய இந்த அற்புதப் பணிக்கு ஊக்கமளித்து பெரும் செலவில் அயோத்தி தாசர் சிந்தனையின் இரு தொகுதிகளையும் வெளியிட்டவர்கள் நாட்டார் வழக்காற்றியல் மையம், து¡ய சவேரியார் கல்லு¡ரி, பாளையங்கோட்டை. பின்னர் தலித் சாகித்ய அகாடமியால் அயோத்தி தாசர் சிந்தனைகள் மூன்றாம் பகுதி வெளியிடப்பட்டது.

ஞான அலாய்சியசுக்கும் பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையத்துக்கும் தமிழ்ச் சமூகம் மிகப்பெரிய அளவில் கடமைப்பட்டுள்ளது.

ஞான அலாய்சியசுக்கு தமிழன் இதழ்களை தந்து உதவியவர் தோழர் அன்பு பொன்னோவியம். அவர் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார் -
தமிழகத்தின் புதைக்கப்பட்ட களஞ்சியமாகக் கிடந்த இது, நான் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் பல நு¡று பக்கங்களைக் கொண்ட இரு தொகுதிகளாக வெளியாவதை தமிழன் பத்திரிகையின் மறு பிறப்பாக எண்ணி மகிழ்கிறேன். இது தமிழினத்திற்கே கூட அதிர்ச்சியுடன் வியப்பூட்டும் நிகழ்வாகத் தெரியக்கூடும் என்று கருதுகிறேன்...என்று கூறுகிறார். இருந்தும் இந்த இரு தொகுதிகளிலும் கூட எங்கும் அயோத்தி தாசரின் இளமைப் பருவம். கல்வி குறித்த பதிவுகள் எங்கும் கிடைக்கவில்லை. சமூகம். தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள் குறித்த சிந்தனைப் பதிவுகள். பெளத்த மதப் பிரச்சாரம் போன்றவற்றுக்கே வாழ்க்கையை அதிகமாக அர்ப்பணித்த அயோத்தி தாசர் தன்னைப் பற்றிய குறிப்பைக்கூட எங்கும் பதிவு செய்யவில்லை. ஓரிடத்தில் அவருடைய முன்னோர்களைப் பற்றி வருகிறது. இதுவும் நம் தமிழ் இலக்கிய சரித்திரம் குறித்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக இருக்கிறது.

பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் துரை 1796ல் சென்னை வருகிறார். இவர் திருக்குறள் மீது ங்கிலத்தில் உரையும் விமர்சனக் கட்டுரையும் எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியச் சுவடிகளை சேகரிப்பதில் தன் வாழ்நாளை அதிகம் செலவழித்தவர் இந்த எல்லிஸ் துரை. இவரைப்பற்றி மீனாட்சி சுந்தரம்பிள்ளை தன்னுடைய கட்டுரை ஒன்றில் மிகவும் சிலாக்கியமாக சொல்லியிருப்பார். இந்த எல்லிஸ் துரையின் நண்பர் ரிங்டன் துரையிடம் பட்லராக வேலை பார்த்தவர் கந்தப்பன். இவர் அயோத்தி தாசரின் பாட்டனார். இந்தக் கந்தப்பன், திருக்குறள், நாலடி நானு¡று போன்ற சில ஓலைச் சுவடிகளை எல்லிஸ் துரை வசம் ஒப்படைத்திருக்கிறார். அப்போது சில பிராமணர்கள் துரையிடம் சென்று கந்தப்பன் தீண்டத்தகாத வகுப்பில் பிறந்தவன் என்றும் அவன் கூறுவதையும் அவன் கொடுப்பதைப் பற்றி அதிகம் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் அறிவுரை கூறியிருக்கின்றனர். அவற்றைப் பொருட்படுத்தாத எல்லிஸ் துரை திருக்குறளையும் நாலடி நானு¡றையும் நு¡லாக அச்சிட்டு வெளியிட்டார். இத்தகவலை அயோத்திதாசர் தன்னுடைய தமிழன் இதழில்.

''எனது பாட்டனார் ஜார்ஜ் ரிங்டியன் துரை பட்லர் கந்தப்பன் என்பவர் ஓலைப்பிரிதியாயிருந்த திருக்குறளையும். நாலடி நானு¡றையும் ஈஸ்ட் இன்டியா கம்பெனியார் காலத்தில் தமிழ்ச் சங்கம் கூட்டி வைத்த கனம் எல்லீஸ் துரை அவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வந்திருக்கிறது"...
இதுவழியாக அந்தக் காலத்தில் தி திராவிடர்கள் தமிழின் மிக அரிய நு¡ல்களைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பது இங்கு தெளிவாகப் பதிவாகிற விஷயம்.

மேலே குறிப்பிட்டது போல அயோத்தி தாசரின் காலகட்டம் 1845லிருந்து 1914 வரை. அரசியல், சமயம், இலக்கியம் போன்றவற்றில் அவர் தீவிர ஈடுபாட்டுடன் செயலாற்றிய காலகட்டம் சுமார் 1865ல் துவங்குகிறது. அந்தக் காலகட்டத்திய தலித் வாழ்வு நிலை மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றி இங்கு எதுவும் சொல்லித் தெரிய வேண்டிய காரியமில்லை. இனி இங்கு சொல்லப்போகும் தாசரின் சிந்தனைகளும் இலட்சியங்களும் சாதி மதமற்ற அற வாழ்க்கையும், கருணையும் அன்பும் மிக்க மேம்பட்ட மனித உறவுகளைப் பற்றியிருப்பதால் அவை அனைத்தும் மானிட இனத்துக்கே சொந்தமானவை என்று உறுதி பட எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் தாசரின் சிந்தனைகளும் லட்சியங்களும் உலகுக்கு ஒளியாக உதித்த கெளதம புத்தனின் அகிம்சையில் இருந்து உருவானவை. சனாதனம், இன-நிறவாதம், ணாதிக்கம், மதவாதம், பயங்கரவாதம் கிய சகலவிதமான வன்முறைகளுக்கும் எதிரானவை.

சாதி இழிவை அகற்றுவதை மட்டுமே தன்னுடைய முழுக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி இருக்கிறார் தாசர். தீண்டாமை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திணிக்கப்பட்டதே ஒழிய அது திகாலம் தொட்டே இருந்தது கிடையாது என்பது அயோத்தி தாச பண்டிதரின் கருத்து. இதன் அடிப்படையிலேயே அவர் சாதி எதிர்ப்புக் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டார். இது போன்ற கருத்தாங்கங்களையே பின்னாளில் பாபா சாகிப் அம்பேத்கர் போன்ற ய்வாளர்கள் கையாண்டார்கள் என்பது மிகவும் குறிப்பிடத் தகுந்தது. தீண்டப்படாத மக்களின் அன்றைய இழிவான வாழ்வுக்கு அவர்களையே குறை சொல்லும் கருத்துக்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்ததோடு தீண்டாமை நிலவுவதால் பலன் பெறும் சக்திகளாலேயே இக்கருத்து திணிக்கப் பட்டது என்னும் முடிவை தாசர் எட்டுகிறார்.

அக்காலத்திய தீண்டாமைக் கொடுமை மற்றும் சாதிய இழிவுகளுக்கு சரியான சவுக்கடி தி திராவிடர்கள் ஒவ்வொரும் கல்வி மற்றும் தொழில் துறைகளில் மேன்மையான இடங்களைப் பெறுவது என்ற முடிவுக்கு வருகிறார் தாசர். அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய சித்த வைத்தியத் துறையைத் தனதாக்கிக் கொள்கிறார் அவர். உள்ளுக்குள் உறைந்து கிடந்த அரசியல் விழிப்புணர்வு அவரை தீவிரமாக செயல்பட வைத்திருக்கிறது.

நல்லவை. பயனுள்ளவை. சுகாதாரமானவை. பொருளாதார தாயமும் திக்கமும் தரக்கூடியவை கியற்றிலிருந்து மிகவும் திட்டமிட்டுத் தலித்துக்கள் சாதி அடிப்படையில் இந்து சாஸ்திரங்களின் சார அடிப்படையில் விலக்கி வைக்கப்பட்டதை எடுத்துக் காட்டினார். உதாரணமாக, பிரிட்டிஷ் ராணுவத்திலும். மருத்துவத்துறையிலும், கிறிஸ்துவ மிஷனரிகளின் பள்ளிக்கூடங்களிலும், கிறிஸ்துவ மதத்திலும் ரம்பகாலத்தில் உயர்சாதியார்கள் சாதி, மத சாரம் பார்த்து சேர மறுத்து வந்தார்கள். இப்படி தலித்துக்கள் சாதி, மத சாரம் பார்க்க அவசியமில்லாததாலும் சாரக் கேடான விஷயங்கள் அவர்களுக்கு உரியவை என்று பிறர் கருதியதாலும், தலித்துக்கள் அந்தத் துறைகளில் சேர்ந்து நவீன வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து வந்தார்கள். னால் தலித்துக்களின் புதிய வாழ்க்கை முன்னேற்றத்தைக் கண்ட மேல் சாதி இந்துக்கள் சாரக்கேடெல்லாம் பார்க்காமல் அந்த நவீனத் துறைகளிலும், கிறித்துவ மதத்திலும் சேர்ந்து தலித்துகளைப் பழைய சாதி சாரம் காட்டி வெளியே துரத்திய சம்பவத்தை தாசர் வேதனையோடு குறிப்பிட்டார். (1908)

"இத்தனைக்கும் சாதி மத சாரம் பார்த்த அந்தப் பெரிய சாதியோர் என்போர். காலங்காலமாக 'மதவித்தைகளையும் விருத்தி செய்கிறார்களேயன்றி, பூமியை உழும் நவீனக் கலப்பையையோ, விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ, நெல்லையும் அரிசியையும் பிரிக்கின்ற எந்திரத்தையோ, போட்டோகிராப், டெலிகிராப், போனோ கிராப், மோனோ கிராப், ஸ்டீம் ரயில்வே, டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்களையோ கண்டுபிடிக்கவில்லை. னால் அவர்கள் பராமரித்து வரும் பழைய சாதி மத திக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புக்களை அபகரிக்க முடிகிறது" என்று வேதனைப்படுகிறார்.

இந்து சமுதாயத்தில் நல்ல இந்து கெட்ட இந்து என்பதை விட உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏறுவரிசைதான் முக்கியம் என்று அம்பேத்கார் குறிப்பிடுவார். இது போன்ற வரிசைகள் இல்லாத காரணத்தால் அன்று கிறிஸ்துவ மதத்துக்கு ஏராளமான தலித்துக்கள் மாறினார்கள். னால் கிறிஸ்துவத்தின் ர்.சி.பிரிவும், புராடஸ்டென்டு பிரிவும் இந்து மதம் போலவே சாதி பேதங்களை ஏற்றுக்கொண்டதால் அதற்கு இந்தியக் கிறிஸ்துவ மிஷனரிகளே காரணமாகிப் போனதால் அயோத்தி தாசர் அதையும் நிராகரித்தார். கிறிஸ்துவ மதம் மாறிய தி திராவிடர்கள் சாதி அடையாளத்தோடு வாழ நேர்ந்ததோடு, பாதிரியார்கள், ஞானஸ்நானம், வாரக்காணிக்கை, அர்ச்சிஷ்டவர்களின் உற்சவம், புதுநன்மை, விசுவாசம், புதைக்கக்குழி தோண்டுதல், மணியடித்தல், து¡ம்பா, குருசு, தேன், மெழுகுவர்த்தி கியவற்றுக்கு விதித்த தொகைகளைக் கொடுத்து ஓட்டாண்டிகள் கிறார்கள் இந்த தி திராவிடர்கள் என்று தாசர் எழுதினார். புராட்டஸ்டண்டு மார்க்கத்தில் சேர்ந்து படித்துப் பதவிகள் வகித்த தலித்துக்களை சாதி இந்துக்கள் அடித்துத் துரத்தித் தாங்களே கிறிஸ்தவம் மாறினார்கள். பழைய கிறிஸ்துர்களைப் பறைக்கிறிஸ்துவர்களாக்கினார்கள். பாதிரிமார்களும் இதற்கு இடம் கொடுத்தார்கள் என்று தாசர் குறிப்பிட்டார். இந்தியச் சூழலில் நடைமுறையில் சாதியில் இந்துவாகவும் மதத்தில் கிறிஸ்தவனாகவும் ஏககாலத்தில் பார்ப்பனனையும், கிறிஸ்துநாதரையும் ஏற்றுக்கொள்பவன் அரைக்கிறிஸ்துவன், அரை இந்து என்றார் தாசர்.

தலித்துகளிடம் இருந்து வந்த பாரம்பரியமாக இருந்து வந்த குலதெய்வ மற்றும் கிராம தேவதை வழிபாட்டையும் கூட தாசர் ஏற்கவில்லை. தலித்துகளுக்கு மாற்று மதமாக அவர் முன்மொழிந்தது பெளத்த தன்மமே. புத்த தன்மத்தை தலித்துக்களின் தன்மமாக உலகுக்கு முன்மொழிந்த முதல் தலித் அறிஞர் அயோத்தி தாசரே. இந்த வகையில் அவர் டாக்டர் அம்பேத்கருக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். தாசருக்குப்பின் சுமார் அறுபது ண்டுகள் கழித்தே அம்பேத்கர் தலித்துகளுக்கான மதமாக நவயான பெளத்த இயக்கத்தை முன் மொழிந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

போதி சத்துவத்தின் புதிய நவீன வளர்ச்சியை, இந்தியத் துணைக்கண்டத்தின் சரித்திரத்தை புத்தமத தத்துவத்தின் அடிப்படையில் விளக்கம் தந்தார் தாசர்.
1896-98 ம் ண்டுகளில் சென்னையில் ல்காட் துரையுடன் தாசருக்குத் தொடர்பு ஏற்பட்டது. தாசரும் கிருஷ்ண சாமியார் என்னும் அவருடைய நண்பரும் ல்காட்டுடன் இலங்கை சென்று மலிகண்ட விகாரையில் சுமங்கல மஹாநாயக என்னும் பெளத்தத் துறவியிடம் பஞ்சசீலம் பெற்று பெளத்தர்கள் னார்கள்.

பிறகு ல்காட் துரையின் ஒத்துழைப்புடன் சென்னை ராயப்பேட்டையில் பெளத்த விகாரையையும் பெளத்த சங்கத்தையும் நிறுவினார். சமூக வரலாற்றினை மறுவாசிப்பு செய்தல், சமய அடையாளங்களைக் கட்டி எழுப்பல் என இந்த பெளத்த சங்கங்கள் செயல்பட்டன.

1899ல் புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி என்னும் நு¡லை எழுதினார்.

1907லிருந்து 1914 வரை தாம் சிரியராக செயல்பட்டு நடத்திய ஓரணாத் தமிழன் வார இதழில் தொடர்ச்சியாக புத்த சமயம், அரசியல், சமூகம், இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்தார். தமிழனில் சி.எம்.இ.குருமூர்த்தி, சுவப்னேஸ்வரி அம்மாள் (இவர் Tamil Woman, தமிழ்ப் பெண் போன்ற இதழ்களை வெளியிட்டவர்), டி.சி.நாராயணபிள்ளை, ஏ.பி.பெரியசாமி புலவர் போன்றோர் தொடர்ச்சியாக எழுதி வந்தனர். அந்தக் காலத்திலேயே தமிழன் இதழ்களில் வெளியான கேள்வி பதில் பகுதி வழியாக அதற்கான வாசகர்கள் பரவலாக இருந்தமையை அறியமுடிகிறது.

தாசர் மற்றும் அவருடைய நண்பர்களின் முயற்சியால் பெளத்த மத செயல்பாடுகளை சென்னை, செங்கற்பட்டு, வட ற்காடு போன்ற தமிழகத்தின் வடபகுதிகளிலம் கர்நாடகத்தில் தி திராவிடர்கள் பரவியிருந்த கோலார் தங்கவயல், பெங்களூர், ஹ¥ப்ளி மற்றம் பர்மா தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் வசித்த தமிழர்கள் இடையேயும் பரவியது.

ங்கிலேயர் காலத்தில் கோலார் தங்கவயல் பணிகளுக்கு வட ற்காடு மாவட்டத்தை சேர்ந்த தலித் மக்களே அதிகம் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு சுயமரியாதை மிக்க வாழ்வு அங்கு கிடைத்தது. அவர்கள் பெளத்த செயல்பாடுகளை அங்கு சாத்தியமாக்கினர். தங்கள் நம்பிக்கையை இவர்கள் வட ற்காடு மாவட்டத்தின் கிராமங்களில் பரப்பினார்கள்.

அயோத்தி தாசரோடு இணைந்து செயல்பட்ட க.அப்பாதுரையார், நகுலப்பிள்ளை, சின்னப்புட்டு சாமியார், கே.சி.கிருஷ்ணசாமி, டி.எஸ்.சுந்தரம், முத்து மேஸ்திரி கியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெளத்த மதப் பணிகளை மேற்கொண்டனர். தாசருக்குப் பின்னாலும் இவர்கள் சாக்கைய பெளத்த சங்க செயல்பாடுகளை உயிரோட்டத்தோடு எடுத்துச் சென்றவர்கள்.

சென்னை ராயப்பேட்டை பெளத்த சங்கத்தில் அயோத்தி தாசர் பேசும் போது துவக்க காலத்தில் தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாண சுந்தரனார் தன் இளமைப் பருவத்தில் கற்கள் கொண்டு எறிந்து எதிர்ப்பினைத் தெரிவித்தார். பின்னாளில் அவர் காலில் ஏற்பட்ட கட்டி ஒன்றினை சித்த வைத்திய முறையில் அயோத்தி தாசர் குணமாக்கி இருக்கிறார். அயோத்தி தாசர் மறைவுக்கு மிக அற்புதமான இரங்கற்பாவினை எழுதியிருக்கிறார் திரு.வி.க. (அந்த இரங்கற்பா இந்தக் கூட்டத்தில் வாசிக்கப்போகும் கருப்பையா பாரதியின் வாழ்த்துரையில் வந்திருக்கிறது)

1906ம் ண்டு வட ற்காடு மாவட்டம் திருப்பத்தூர் பெரிய பறைச்சேரி எனப்பட்ட தலித்துக்கள் வாழ்ந்த பகுதியின் பெயர் கெளதம புத்தர் வழி வந்தோர் வாழும் ஊர் என்னும் பொருளில் கெளதமாப்பேட்டை என்று மாற்றப்பட்டது. திருப்பத்தூரை சேர்ந்த ஏ.பி.பெரியசாமிப் புலவர், அனுமந்த உபாசகர் கியோர் பெளத்த சங்க செயல்பாடுகளை முடுக்கி விட்டார்கள். கெளதமாப்பேட்டையில் 1904ம் ண்டில் திட்டமிடப்பட்டு 1906 சாக்கைய பெளத்த லயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ண்டு அந்த லயத்துக்கு நூறு ண்டுகள் முடிவடைகின்றன. பர்மாவில் கொண்டுவரப்பட்ட ஐம்பொன்னால் ன புத்தர் சிலை அங்கு நிறுவப்பட்டது. அயோத்தி தாசரின் வழிகாட்டுதலுடன் அந்தப்பேட்டையில் 87 தி திராவிடர்கள், முடிவெட்டுபவர்கள், சலவைத் தொழிலாளிகளின் குடும்பங்கள் பெளத்த மதத்துக்கு மாறினார்கள்.

இந்து மதத்தின் பல கூறுகளை பெளத்த மதத்தில் இருந்து தோன்றியவை என்பதைத் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார் தாசர். புத்தர் இறந்த நாளை புத்தர் பலி விழாவாக போதிப்பண்டிகை என்று பூர்வ பெளத்தர்கள் கொண்டாடி வந்தார்கள். பிராமணர்கள் இதனை போகிப்பண்டிகை என்று திரித்து விட்டார்கள் என்றார் தாசர். அதேபோல திருக்குறளை திரிக்குறள் என்றும் தமிழின் பல பண்டை நூல்களை பெளத்த மத நூல்கள் என்றும் விவாதித்து வந்தார்.

வள்ளுவரை பெளத்தர் என்றும் வள்ளுவர் சொன்ன தி பகவன் தி பகலவன் என்றும் அது கெளதம புத்தர்தான் என்றும் இதேபோல பல குறள்களையும் பெளத்த வழியில் மறுவாசிப்பு செய்து பொருள்கூறினார்.

அயோத்தி தாசரின் முனைப்பால் உயிர்க்கொலை மறுப்புக்காக மாடு அறுக்கும் பழக்கம் பல ஊர்களின் சேரிகளை விட்டு வெளியேற்றப்பட்டது. சேரிக்கு வெளியே மாடு அறுக்கும் தொட்டி என அவை மாறின. ஊரிலும் சேரியிலும் இல்லாத பல தொட்டிகளை சேலம் மாவட்டத்திலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வட ற்காடு மாவட்டங்களிலும் பார்க்க முடியும்.

பெரியாரால் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலக் கருத்தியல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் பின் வந்த பெளத்த செயல்பாட்டாளர்களோடுதான் அமைந்திருந்தன என்பதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

இந்தி மொழி, இந்துச் சாதி மதத்தோடு தொடர்பு உடையது கையால் அதற்கு இந்தியாவின் பொதுமொழியாகும் தகுதி கிடையாது. ங்கிலமே அதற்குத் தகுதி கொண்டது என்று தாசர் பெரியாருக்கு முன்பே எழுதினார். (1911) (ங்கில மொழியைத் தாய்மொழியாக்க வேண்டும் என்று கூடச் சொன்னார். அதன் தாத்பர்யத்தை இன்றைய சூழலை வைத்துப் பார்க்கக்கூடாது).

அயோத்தி தாசரின் முனைப்பினாலும் முயற்சியாலும் சென்னையில் பல பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஏழைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதில் முன்னோடியாக இருந்தார் தாசர். இப்போது நான் சொல்லும் விஷயம் உண்மையிலேயே உங்களுக்கு ச்சரியமாக இருக்கும். மதிய உணவுத் திட்டத்தினை 1894ம் ண்டிலேயே அறிமுகப்படுத்தியவர் தாசர். சென்னை மற்றும் வட ற்காடு மாவட்டங்களில் நடந்த பள்ளிகளில் பகல் உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அயோத்தி தாசர். இதை நான் சொல்லும்போது இந்த முன்னோட்டமான காரியம் நடந்த ண்டினையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் அயோத்தியா தாசரின் வாழ்வும் செயல்பாடுகளும் தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருந்திருந்திருக்கிறது.

தலித்துக்களுக்கு பிராம்மணரல்லாத திராவிட அடையாளத்தை நிலை நிறுத்தியதில் முதன்மையானவர் தாசர்.

ஏற்கனவே சொன்ன ச்சரியத்தைப் போல இன்னும் சில ச்சரியங்களும் உண்டு தாசர் சரித்திரத்தில். 1895 முதல் 1907 வரை தலித்துகளுக்காக இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக அரசு வேலை வாய்ப்புக்களில் இட ஒதுக்கீட்டினை வற்புறுத்தினார் தாசர். இதற்காக பல ங்கில துரைமார்களை சந்தித்து மனுக்களை அளித்து, பல இடங்களில் பேசியும், அதிகாரிகளையும் கவர்னர்களையும் சந்தித்து தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார். இந்திய அளவில் இந்த விஷயத்தில் முன்னோடி நம் தமிழகத்தின் அயோத்தி தாச பண்டிதர்தான் என்று நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம். னால் யாரும் சொல்லவில்லை. அது வேறு விஷயம்.
அயோத்தி தாசரின் இந்த இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை அவருக்குப் பிறகு பல மாநிலங்களில் தொடர்ந்தது. மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான சத்ரபதி சாஹ¥ மஹராஜ் 1902 தன்னுடைய அரசாங்கத்தில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார்.
அவர் வாழ்ந்த காலத்தைப் பார்க்கும் போது அயோத்தியா தாசர் சிந்தனைத் தொகுப்பில் உள்ள பல விஷயங்கள் பல நிலைகளில் முன்னோடியானவை. இக்கால தாத்பரியத்துடன் பார்க்கும்போது சில விஷயங்கள் விவாதத்துக்கு உரியன. உதாரணத்துக்கு பண்டைய தமிழ்நூல்கள் பற்றிய அவருடைய கணிப்பு, மொழி பற்றிய கருத்துக்கள், விஞ்ஞான அடிப்படையில் அமையாத மதங்கள் பற்றிய அவருடைய கருத்துக்கள், பிரிட்டிஷ் அரசு மீது அவர் கொண்டிருந்த தேவதா விசுவாசம் போன்றவை பெரிதும் விவாதத்துக்கு உரியவை. னால் பல விஷயங்களில் அவர் வாழ்ந்த காலத்தைத் தாண்டிய பெரும்பாய்ச்சலைத் தன் சிந்தனைத் தளங்களில் நிகழ்த்தியிருக்கிறார்.
1914ம் ண்டு மே மாதம் 5ம் நாள் பண்டிதர் மறைந்தார்.

பண்டிதரின் இறுதி நாட்களைப் பற்றிய குறிப்பினை அவருடைய குமாரர் பட்டாபிராமன் அவர்களுடைய வார்த்தைகளிலேயே முடிக்கிறேன்.

அவர் வியாதியைப் பற்றிக் கொஞ்சமேனும் கவலைப்படவில்லை. தாமே கைதேர்ந்த வைத்திய பண்டித சிகாமணியாயிருந்ததினாலும் தமக்கே தம்மாயுளைக் குறித்து உணர்ச்சி இருந்ததினாலும் வைத்தியரொருவருடைய உதவியையும் அவர் கோரவில்லை. மே மாதம் 3ம் தேதி திவாரம் காலை 5 மணிக்கு பண்டிதரவர்கள் எல்லோரையும் பார்த்து இந்த தேகம் விழப்போகிறது என்றனர். அவருக்கு நெருங்கின பந்துக்களும் நண்பர்களும் அவர்களுடைய கதியைப் பற்றி அவரிடம் வினாவிய போது அவர், தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று திருவாய் மலர்ந்தருளினர். அடியேன் பத்திரிகையைக் குறித்து விண்ணப்பித்தபோது, அவர், திரிக்குறள் உரை இதுவரையிலும் நாம் எழுதியதோடு மாத்திரம் நிற்கவேண்டியிருக்கிறதே என்பதுதான் குறை. இந்தப் பொய்ச் சடலம் கூடியிருந்தவரையில் அவ்வளவுதான் செய்யமுடிந்தது. தமிழன் கிய குழந்தையை உன் கையில் ஒப்பித்து விடுகிறேன். உன்னால் வளர்க்க முடியுமல்லவா என்றனர்.

................
பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்த பிறகு அவரது திருமுக விலாசத்தை யாவரே வருணிக்கத்தக்கவர். அன்று பகலெல்லாம் அவரது உறவினரும் நண்பர்களும் சீடர்களும் நூற்றுக்கணக்காக வந்து பார்த்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். பகல் 3 மணிக்கு அவருக்குப் பரிசளித்திருந்த 3 மெடல்களையும் அணிந்து அலங்கரித்து அவரைத் தரிசித்தோம். மாலை 5.30 மணிக்கு புஷ்பமாரி பெய்தாப்போல தூறி நிலத்தைக் குளிரச் செய்தது மனோகரமாயிருந்தது.
..........
மாலை 6 மணிக்கு சர்வாலங்கதிருதங்களோடு அவரை வெள்ளைப் பெட்டியில் வைத்து புஷ்பங்களால் அலங்கரித்திருந்த விமானத்தில் இருக்கச் செய்து பெளத்தன்ம சின்னங்களுடன் முன்னால் புத்தருடைய திவேதத்திலிருந்து உருக்கமான பாடல்களைப் பாடிக் கொண்டு வர கோலம் புறப்பட்டது. அநேக பர்மிய பெளத்த பிட்சுக்களும், இந்திய பெளத்தர்களும், பர்மிய பெளத்தர்களும் யிரங்கணக்கான ஜனங்களும் கோலத்துடன் வந்தனர். பண்டித பெருமான் அவர்களே காருண்யம் பொருந்திய பிரிட்டிஷ் கவர்ன்மெண்டிலிருந்து பெளத்தர்களுக்காக வாங்கிய மயானத்திற்கு தேவ விமானம் கொண்டுபோகப் பட்டது. விமானத்தை இறக்கினதும் சென்ற 1500 வருடங்களாக நடந்திராத பெளத்த சடங்குகள் வெகு சிரத்தையுடன் நடத்தப்பட்டன....

ஏறத்தாழ எண்பது ண்டுகளுக்கும் மேலாக சரித்திரத்தில் முழுதும் மறக்கப்பட்ட ஒரு மாமனிதரை இந்த உலகுக்கு மீண்டும் உயிர்ப்பித்துக்கொடுத்த ஞான அலாய்சியஸ் அவர்களையும் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையத்தையும் மீண்டும் ஒருமுறை நன்றியுடன் நினைத்துக்கொண்டு என் உரையை முடிக்கிறேன். அயோத்தி தாசரை தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பினை எனக்கு சாத்தியப்படுத்தியவர்கள் இவர்களே.

நன்றி. வணக்கம்.

அயோத்தி தாசரின் எழுத்துப்பணிகள் :

1. புத்தரது திவேதம் (1912)
2. Buddhist Doctrines - Questions and Answers (1912)
3. இந்திரர் தேச சரித்திரம் (1931)
4. விவாக விளக்கம் (1926)
5. ஹரிச்சந்திரனின் பொய்கள் (1931)
தமிழன் பத்திரிகை சென்னையில் 14 வருடங்களாக வெளிவந்தது. 1907 முதல் 1914 வரை அவரது சிரியத்துவத்திலும், அவருக்குப்பின் அவரது புதல்வர் பட்டாபிராமன் அவர்களை சிரியராகக் கொண்டு 1919 வரையிலும் பின்னர் 1919லிருந்து 1922 வரை யார் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பின்னர் 1922ல் அப்பாதுரையை சிரியராகக் கொண்டு 1926லிருந்து 1935 வரை வெளிவந்ததாகவும் குறிப்புக்கள் உள்ளன.

இந்தக் கட்டுரையை எழுத எனக்குக் கிடைத்த தாரங்கள்:

1. அயோத்தி தாசர் சிந்தனைகள் - தொகுப்பு 1 மற்றும் இரண்டு - ஞான அலாய்சியஸ், நாட்டார் வழக்காற்றியல் ய்வு மையம். (2003ல் ஞான அலாய்சியஸ் தொகுத்த 3வது தொகுப்பும் வெளிவந்துள்ளது. இது எனக்குப் படிக்கக் கிடைக்கவில்லை)

2. தலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கெளதமன் (காலச்சுவடு வெளியீடு)

3. க.அயோத்திதாசர் ய்வுகள் (ராஜ் கெளதமன் - காலச்சுவடு வெளியீடு)

4. அயோத்திதாச பண்டிதர் வழியில் வாழும் தமிழ்ப் பெளத்தம் - ஸ்டாலின் ராஜாங்கம் - காலச்சுவடு மாத இதழ்

4 comments:

 1. பென்னீஸ்வரன்,
  அயோத்திதாஸ பண்டிதர் பற்றி முதன்முறையாக தெரிந்துகொண்டேன். நன்றி. உங்கள் 'தியாகராஜபாகவதர்' பேச்சு - வடக்கு வாசலில் படித்தேன். நிறைய விஷயங்கள் தெரிந்தது.

  தேவன் பற்றி நான் சமீபத்தில் என்னுடைய 'www.vamsadhara.blogspot.com இல் அவருடைய 50 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலியாக சில சிற்றுரைகள் எழுதிய்யுள்ளேன். படித்து உங்கள் கருத்துகளைக் கூறவும்.
  அன்பன்
  திவாகர்.

  ReplyDelete
 2. அன்புள்ள திவாகர்

  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

  தாமதமான என் நன்றியறிவித்தலுக்கு என்னை மன்னிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டு வருகிறேன். எல்லாவற்றையும்.

  தேவன் பற்றிய உங்கள் பார்வைகளும் பதிவுகளும் அற்புதம்.

  வாழ்க்கை குறித்த கூர்மையான பார்வை உங்களிடம் இருக்கிறது.

  அன்புடன்

  ராகவன் தம்பி

  ReplyDelete
 3. அருமையான கட்டுரை .
  வாழ்த்துக்கள்
  கமலம்

  ReplyDelete
 4. அயோத்திதாசர் மேலும் விரிவாக அறிய http://www.ayothidhasar.com/
  http://www.ayyothidhasapandithar.blogspot.com/
  paari.chelian

  ReplyDelete