Thursday, June 14, 2007

தமிழ் தந்த தியாகராஜர் - பாபநாசம் சிவன்

ராகவன் தம்பி

17-12-2006

இத்தொடருக்கு - தமிழ் தந்த தியாகராஜர் - பாபநாசம் சிவன் என்ற தலைப்பைக் கொடுத்த பிறகு ஒரு விஷயம் சிறு கீற்றாகக் கிளம்பியது. அந்த எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. அது என்னவென்றால், தியாகராஜரையும் தமிழ்தான் தந்தது. தமிழகம்தான் தந்தது. தமிழில் தன் வீட்டு உயிலை எழுதிய தியாகய்யர், தன்னுடைய காதலிக்கும் மனைவிக்கும் தமிழில் கடிதங்கள் எழுதிய தியாகய்யர் பாட்டென்று வரும்போது தெலுங்கில் எழுதியிருக்கிறார். அதேபோல, முத்துசாமி தீட்சிதரும் சியாமா சாஸ்திரியும் சம்ஸ்கிருதத்தில் மட்டுமே பாடல்களை இயற்றியிருக்கிறார்கள். அது அவர்களின் காலகட்டத்தில் நிலவிய ஒரு சூழல், ஒரு போக்கு என்று எடுத்துக்கொள்ளலாம். திணைகளைச் சார்ந்து அமைந்த தமிழ்ப்பண் மரபினை பக்தி இயக்கம் மற்றும் கர்நாடக இசை முற்றாக உள்வாங்கி வேறு ஒரு ரூபமாக வரித்துக்கொண்ட காலகட்டம் அவர்களுடையது. இது விரிவான ய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டிய ஒரு விஷயம். இதனை விரிவாக வேறொரு காலகட்டத்தில் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு சிவன் மட்டுமே நம் கவனத்தில்.


சங்கீத மும்மூர்த்திகளின் பின்னொட்டாய் தமிழ் இசை வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு தடத்தைப் பதித்தவர் பாபநாசம் சிவன் என்று மிகவும் அழுத்தமாக இங்கு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. னால் இங்கு பொருள் அதுவல்ல என்பதால் இங்கு சிவன் மட்டுமே நம்மிடையே.


26-09-1890ல் தஞ்சைக்கு அருகில் உள்ள போலகம் என்னும் சிறு கிராமத்தில் ராமாமிருத ஐயருக்கும் யோகாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தவர் சிவன்.
வீட்டாருக்கும் சுற்றத்தினருக்கும் அவர் ராமையா. தஞ்சைக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் உள்ள பாபநாசத்தில் தன் மூத்த சகோதரர் வீட்டில் தன்னுடைய பிள்ளைப்பருவத்தை கழித்திருக்கிறார். று வயதுப் பிராயத்தில் தந்தையை இழந்த ராமையா, தன் தாயார் மற்றும் மூத்த சகோதரருடன் 1898லிருந்து 1910 வரை இரண்டு வருடங்கள் திருவனந்தபுரத்துக்குக் குடி பெயர்ந்திருக்கிறார். திருவனந்தபுரத்து அரசருடைய ஊட்டுப்புறையின் தரவில் வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமாக இருந்த நூரணி மகாதேவ பாகவதர், சாம்பசிவ பாகவதர் மற்றும் கரமனை நீலகண்டதாசர் கிய இசை ஜாம்பவன்கள் அவருக்கு மிகுந்த தாக்கம் அளித்த இசை வல்லுநர்கள். திருவனந்தபுரத்தில் இருந்த இரு ண்டுகளில் மகாராஜா சம்ஸ்கிருதக் கல்லூரியில் உபாத்யாயர் பட்டம் பெற்றார். இதைத் தவிர முறையான கல்வி எதையும் சிவன் பின்னாளில் பெறவில்லை.


அந்நாளில் இறையிசையில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்களை சிவன் என்று அன்புடன் அழைக்கும் மரபு இருந்திருக்கிறது. அந்த மரபில் ராமையா 'பாபநாசம் சிவன்' க தஞ்சை கணபதி அக்கிரகாரத்தின் இசைப்பிரியர்களால் அன்புடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.


பின்னாட்களில் அவரை மிகவும் அதிகமாகப் பாதித்தவர்கள் கோபாலகிருஷ்ண பாரதியும், நீலகண்ட சிவனும். இவ்விருவரின் பாடல்களில் மனம் கரைந்திருக்கிறார் சிவன். அவருக்கு மரபின் அடிப்படையிலான இசைப்பயிற்சியோ பாக்களை இயற்றும் பயிற்சியோ வாய்த்திருக்கிவில்லை. னால் கேள்வி ஞானத்தில் தன்னுடைய இசை வளமையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார் சிவன். சிவனுடைய தாயார் மிகவும் அற்புதமான குரல் வளம் வாய்ந்தவராக இருந்திருக்கிறார். சுமார் 600 கீர்த்தனைகளுக்கு மேல் முறையாகப் பாடக் கற்றுக்கொண்டாராம் அந்த அம்மையார். சிவனின் தாய்வழிப் பாட்டனாரும் அந்தக் காலத்தில் மிகப்பெரும் இசை வல்லுநராக இருந்திருக்கிறார். இவ்விருவரின் தாக்கத்தில் இசையின் மேல் மாளாத காதலைக் கொண்டு வளர்ந்திருக்கிறார் சிவன். வளர்ந்த பிறகு கோனேரிராஜபுரம் வைத்தியநாதய்யர் போன்ற இசை வல்லுநர்கள் அவருடைய இசை வளமையினை செம்மைப்படுத்தியும் பெரும் தரவும் அளித்து இருக்கிறார்கள்.


1910 அன்னையை இழந்த சிவன், திருவனந்தபுரத்தை விட்டு நீங்கி பாபநாசத்துக்கு வந்திருக்கிறார். தஞ்சை மாவட்டம் முழுதும் தன்னுடைய சகோதரருடன் நடைப்பயணமாகவே சென்று பல லயங்களில் திருவிழாக்களின்போது பஜனை உற்சவத்தை நடத்தியிருக்கிறார். அந்த பஜனை உற்சவங்களின்போது அவரே இயற்றிய பாடல்களை அவர் கணீரென்ற குரலில் பாடி மிகப்பெரும் கூட்டத்தை ஈர்த்து இருக்கிறார். திருவையாற்றில் சப்த ஸ்தானம் மற்றும் நாகப்பட்டினத்தின் டிப் பூரத் திருவிழாவிலும் சிவன் பாடலைக் கேட்க பெரும் திரளான மக்கள் கூடியிருக்கிறார்கள்.


1912லிருந்து 1959 வரை அவர் இடைவிடாது சப்த ஸ்தான வைபவத்தில் கலந்து கொண்டு இருந்திருக்கிறார்.


1917ல் லட்சுமி அம்மையாரை மணந்து கொள்கிறார்.1930ல் சென்னைக்குக் குடி பெயர்ந்தார் சிவன். அன்றிலிருந்து அதாவது 1930லிருந்து அவர் காலமாவதற்கு ஓராண்டுக்கு முன் அதாவது 1972 வரை மார்கழி மாதங்களில் மயிலையின் நான்கு மாடவீதிகளையும் சுற்றி வந்து அவர் நடத்திய கிரி பிரதட்சணமும் மார்கழி மாத விடியற்காலை பஜனைகளும் மிகவும் பிரசித்தமானவை. (கல்கி, விகடன் தீபாவளி மலர்கள்)60களில் திராவிடர் கழகம் லய வழிபாட்டுக்கு எதிரான போராட்டங்களை வீதிகளுக்கு எடுத்து வந்த நேரம். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன.


இசையும் கலையும் வசமானவர்களுக்கு இயற்கையாகவே சமூகம் குறித்த அக்கறையும் உள்ளீடாக உறைந்து கொண்டே இருக்கும். சிவனுக்கும் இருந்தது. துவக்க காலத்தில் இந்திய சுதந்திரப் போரில் நேரிடையாகப் பங்கு கொள்ளவில்லை என்றாலும் அதன் மீது பெரும் அக்கறை கொண்டு இருந்திருக்கிறார். பல தேசியப் பாடல்களை இயற்றத் தொடங்கினார் சிவன். அவை அக்காலத்தில் பெரும் புகழ் பெறவில்லை என்றாலும் பலருடைய கவனத்தை வெகுவாக ஈர்த்து இருக்கிறது. சிவன் இயற்றிக் கொடுத்த பாடல்களை நாடகக் கலைஞர்கள் தங்கள் நாடகங்களில் கையாளத் துவங்கினார்கள்.


ஏற்கனவே சொன்னபடி, ஒரு சாகித்ய கர்த்தாவாக சிவன் சங்கீத மும்மூர்த்திகளின் வரிசையைப் பின் தொடர்ந்து வருகிறார். அவருடைய சாகித்யங்களில் வார்த்தைகள் அவருக்காகத் தவம் இருந்திருக்கின்றன. வார்த்தைகளுக்காக அவர் எந்த அகராதியையோ சூத்திர நூல்களையோ பயன்படுத்தவில்லை. தாளக்கட்டுக்களும் சொற்களும் அவர் வாயிலில் தவமிருந்து காத்து சேவகம் புரிந்திருக்கின்றன. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாத ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், முசிரி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்ற அக்காலத்தின் பிரசித்த பெற்ற இசைக்கலைஞர்கள் சிவனின் சாகித்யத்தைப் பாடி பிரபலப்படுத்தினார்கள். பிரபலம் அடைந்தார்கள். சிவனுடைய சாகித்யங்கள் கீர்த்தனைகள், வர்ணங்கள், ஓபரா என்று சொல்லப்படும் இசைநாடகங்களுக்கான பதங்கள் மற்றும் ஜாவளிகளைக் கொண்டு மிளிர்ந்து துலங்கின. இவற்றை அவருடைய குமாரத்தி டாக்டர் ருக்மணி ரமணி அவர்கள் று தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் இரு தொகுதிகள் தமிழ்ச் சங்க நூலகத்தில் இருக்கின்றன. மற்ற நான்கும் ஏதாவது ஒரு புண்ணியாத்மா அல்லது பாவாத்மாவின் வீட்டு நூலகப் பரணில் இசை பயின்று கொண்டிருக்கலாம்.


பத்து ண்டுகளுக்கும் மேலான ய்வு மற்றும் கடுமையான உழைப்புக்குப் பிறகு சிவன், சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரஹ (வடமொழி சொற்கடல்) என்னும் சமஸ்கிருத அகராதி ஒன்றைத் தொகுத்து இருக்கிறார். அந்திம காலத்தில் ஸ்ரீராம சரித கீதம், (ராமாயணத்தை 24 பத்திகளில் 24 ராகங்களின் அடிப்படையில் அமைத்திருப்பார்) மற்றும் காரைக்கால் அம்மையார் சரித்திரம் போன்ற நூல்களை இயற்றினார். இவையும் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.
சிவனுடைய திரைப்பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பக்தி, தேசியம், சமூக விழிப்புணர்வு போன்றவை கலந்து மிக அருமையான சொற்கோவைகளில் அரிதான தாளக்கட்டுக்களில் அமைந்து அனைவரின் மனங்களையும் அந்நாளில் மட்டுமல்லாது இந்நாளிலும் கவரும் இசைச் சொற்சித்திரங்கள் அவை. அவருடைய பாடல்களால் வெற்றியடைந்த திரைப்படங்கள் கணக்கற்றவை.


சிவனுடைய புரவலர்கள் என்று சொல்லவேண்டும் என்றால் கலாட்சேத்திராவின் திருமதி ருக்மணி அருண்டேல், அந்நாளைய திரைப்பட இயக்குநர்கள் கே.சுப்பிரமணியம், எஸ்.எஸ்.வாசன், கல்கி சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், இயல், இசை நாடக மன்றம், சங்கீத் நாடக அகாதமி போன்ற நிறுவனங்கள் சிவனை வெகுவாக தரித்தன.மிகவும் எளிமையான ன்மீக வாழ்க்கையை வாழ்ந்தவர் சிவன் அவர்கள். தன்னை அவர் என்றுமே எங்குமே முன் நிறுத்திக் கொண்டவர் இல்லை.


சென்னை நாட்களில் அவர் திரைத் துறைக்கு அறிமுகம் கிறார். அந்த திரைத்துறை பிரவேசமும் சிவன் மிகவும் தயங்கித் தயங்கி வேண்டா வெறுப்பாக வந்ததுதான் என்று பதிவுகள் உள்ளன. அவருடைய நெருங்கிய நண்பரும், திரை இயக்குநருமான கே.சுப்பிரமணியன் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் சிவனின் திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்துள்ளது. பக்த குசேலா, பக்த சேதா, தியாகபூமி மற்றும் குபேர குசேலா கிய படங்களில் முக்கியப் பாத்திரமேற்று நடித்துள்ளார். தியாகபூமியை இதே கலையரங்கில் நாம் பார்த்து இருக்கிறோம்.


சுமார் 2500 பாடல்களை பல ராகங்களில் இயற்றியிருக்கிறார். பல நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் பாடல்கள் இயற்றியிருக்கிறார்.
1934லிருந்து 1939 வரை அவர் கலாட்சேத்ராவில் இசை சிரியராகப் பணி புரிந்து இருக்கிறார். திரைப்படப் பாடல்களுக்குப் பாடல் எழுதவேண்டி கலாட்சேத்திராவில் சிரியர் தொழிலைத் துறந்தார்.


எஸ்.ராஜம் அவர்களுக்கு இசை பயிற்றுவித்து இருக்கிறார். அவருடைய தந்தையார் சுந்தரம் ஐயர் சிபாரிசில் சீதா கல்யாணம் என்னும் படத்துக்கு முதல் முறையாகப் பாடல் எழுதினார். தியாகராஜ பாகவதருக்கு இசைப்பயிற்சி - (elaborate – Notes)தமிழில் மட்டுமல்லாது சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் சில பாடல்களை இயற்றி இருக்கிறார்.அவருடைய பல பாடல்கள் ராமதாசன் என்னும் முத்திரையைத் தன்னுள் பதித்து இருக்கும். தியாகைய்யருக்கு ஒரு ராமர் என்றால் நம் சிவனுக்கு மயிலை கபாலீஸ்வரர்.நவரச கானடாவில் நானொரு விளையாட்டுப் பொம்மையா, மோகனத்தில் கபாலி, மத்யமாவதியில் கற்பகமே போன்ற பாடல்கள் இறவா வரம் பெற்றவை.


அம்பிகாபதி, நந்தனார், சாகுந்தலை, சாவித்ரி, சிவகவி, தியாகபூமி போன்ற இறவா வரம் பெற்ற படங்களில் அவருடைய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.தியானமே எனது மனது நிறைந்தது சந்திர பிம்ப வதனம் - அசோக்குமார்மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்...பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் புண்ணியம் இன்றி விலங்குகள் போல்...சத்துவ குணபோதன்...உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ...திருநீலகண்டர் - தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே...மறைவாய்ப் புதைத்த ஓடு, பவளமால் மலையை..என்னுடல்தனில் ஒரு - ஹரிதாஸ்மன்மத லீலையைமலையாளம் மற்றும் சமஸ்கிருதப் பாடல்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.


எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தமிழிசையை மேடைகளில் தரிக்க முன்வந்தபோது அவருக்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது சுத்தானந்த பாரதியின் ஹம்சத்வனியில் அமைந்த அருள்புரிவாய் பாடல் (இது விநாயகா நின்னு என்னும் பாடலுக்கு இணையாக அமைந்தது) கோபாலகிருஷ்ண பாரதியின் சபாபதிக்கு பாடல் பக்தியுடன் காந்தியத் தத்துவத்தையும் முன்வைத்தது. இவர்களுடைய பாடல்களுடன் பாபநாசம் சிவன் இயற்றிய தமிழ் கீர்த்தனைகள் அவருக்கு மிகவும் கை கொடுத்தன. சேவாசதனம் திரைப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்காக ஹிந்தோள ராகத்தில் அமைக்கப்பட்ட மா ரமணன் என்னும் பாடல் இன்றும் பலரால் விரும்பப்படும் பாடல்.


எனது நினைவுக்கடல் என்னும் பெயரில் ஒரு சிறிய சுயசரிதையை எழுதியிருக்கிறார் சிவன். 1968ல் சிவன் அவர்கள் தினமணி கதிருக்காக தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தன்னுடைய இளமைப்பருவ நினைவுகளில் தொடங்கி 1921ல் தன்னுடைய சென்னை வருகை வரை பதிவு செய்திருப்பார் சிவன். துரதிருஷ்டவசமாக சிவனின் உடல்நிலை காரணம் கொண்டு இத்தொடர் 1968ல் நிறுத்தப்பட்டது என்று புரிந்து கொள்ள முடிகிறது. 1968 போன்ற காலகட்டத்தில் அவர் மிகவும் உடல் நலம் குன்றி இருந்தார் என்று அவருடைய பேரன் அசோக் ரமணி ஓரிடத்தில் பதிவு செய்திருக்கிறார்.


மிகவும் எளிமையான நடையில் அமைந்த நூல் இது. அவர் விவரிக்கும் சம்பவங்களுக்கு நேரம் காலம் இடம் போன்றவற்றை மிகவும் துல்லியிமாக பதிவு செய்திருப்பார் சிவன். இந்த நூலை எழுதும்போது அவருக்கு 78 வயது. யினும் எவ்விதத் தடுமாற்றமும் இன்றி மிகவும் தெளிவாக செய்யப்பட்டிருக்கும் பதிவுகள் அவை. அவருடைய தாயார் காலத்தில் பிராமண பெண்மணிகள் இசையைக் கற்றுக்கொள்ளவோ அல்லது பொதுவில் பாடவோ அனுமதிக்கப்பட்டதில்லை. அக்காலகட்டத்தில் பல சாகித்ய கர்த்தாக்களின் சாகித்யங்களை மனனம் செய்து இசை வடிவுடன் பாடிய அவர் திறமையை பதிவு செய்திருப்பார். அவருக்கு அதிகமாகத் தாக்கம் ஏற்படுத்திய நீலகண்ட சிவன், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் போன்ற ஹரிகதா காலட்சேப சிம்மங்களைப் பற்றியும் பதிந்திருப்பார்.


இளமைக்காலத்தில் சிறிது நாட்கள் இசைப்பயிற்சி அளித்த கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர் பற்றிய அளப்பரிய மதிப்பு வைத்திருந்தார் சிவன். ஒரு தந்தையின் அன்பு அவரிடம் கிட்டியதாக எழுதியிருப்பார். ஏழு வயதில் தகப்பனாரை இழந்து 20 வயதில் தாயாரை இழந்து அறிமுகமான ஒரே வருடத்தில் கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரின் மறைவு போன்றவை சிவனுக்கு மனத்தளவில் ஒரு துறவு மனப்பான்மையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மனநிலை அவருடைய பல பாடல்களில் பதிவு கியிருக்கிறது.ராமதாசன் மற்றும் கீர்த்தி வாசன் என்னும் மகன்கள். நீலா ராமமூர்த்தி மற்றும் ருக்மணி ரமணி என்னும் மகள்கள். அவருடைய இரு புதல்வர்களும் இசையில் அதிகம் ர்வம் காட்டவில்லை. திருமதி நீலா ராமமூர்த்தி அவர்கள் தற்சமயம் உயிருடன் இல்லை. அவருடைய குமாரத்தி திருமதி ருக்மணி ரமணி அவர்களும் பேரன் அசோக் ரமணியும் சிவனைப் போலவே இசையுலகில் தடம் பதித்து வருகின்றனர். அவருடைய பஜனை பத்ததி இன்றும் அவருடைய குமாரத்தி திருமதி ருக்மணி ரமணி அவர்களால் தொடர்ந்து எடுத்துச் செல்லப்படுகிறது. அசோக் ரமணி அவர்கள் நிர்வகித்து வரும் இணைய தளம் www.sangeethamingepaadalam.com தமிழிசை பற்றியும் பாபநாசம் சிவன் பற்றியும் பல தகவல்களை வலைத்தளத்தில் நமக்கு அளிக்கிறது. 1950ல் இந்தியன் ·பைன் ர்ட்ஸ் சொசைடி வழங்கிய சங்கீத சாகித்ய கலா சிகாமணி என்ற பட்டமும் சிவனின் 60வது பிறந்த நாளின் போது காஞ்சித் தவமுனிவர் சந்திசேகரேந்திர சுவாமிகள் அருளிய சிவ புண்ய கானமணி என்னும் பட்டமும், தமிழ் இசைச் சங்கம் வழங்கிய இசைப் பேரறிஞர் பட்டமும் வழங்கி சிறப்பித்துள்ளனர். சென்னை மியூசிக் அகாடமி அவருக்கு சங்கீத கலாநிதி என்னும் பட்டத்தை மிகவும் தாமதமாக வழங்கித் தன்னைக் கெளரவித்துக் கொண்டது. மைய அரசு Fellow of Sangeet Natak Akademi அந்தஸ்தினை அவருக்கு வழங்கியது. 1962ல் குடியரசுத்தலைவர் விருது வழங்கப்பட்டது. 1972ல் அவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.


01-10-1973ல் உடல் நலம் குன்றி மறைந்தார். சங்கீத மும்மூர்த்திகள் எப்படி இன்றும் நம்முடன் தன் இசையினால் வாழ்கின்றனரோ அதே போல, அவர்கள் வழியில் வந்த சிவனும் தன் இசையினால் நம்மிடையே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். தில்லித் தமிழ்ச் சங்கம் போன்ற வலிமை மிகுந்த அமைப்புக்கள் அக்டோபர் மாதங்களில் பாபநாசம் சிவன் நினைவாக விழாவினை ஏற்பாடு செய்யலாம். செய்யவேண்டும். இதற்காக வடக்கு வாசல் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும். தலைநகரின் பல இசை அமைப்புக்களும் இதில் கலந்து கொள்ளலாம்.


சிவனின் பாடல்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு இசையையும் தமிழையும் இறையருளையும் பாடிக்கொண்டிருக்கும்.


நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment